தோழர் தியாகு எழுதுகிறார் 50

(தோழர் தியாகு எழுதுகிறார் 49 தொடர்ச்சி) அன்பர்கள் எழுதுவதை வரவேற்கிறோம் அன்பர் சத்தியசீலனின் முதல் மடல் குறித்து நலங்கிள்ளி எழுதுகிறார்:“திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே” என்று சத்தியசீலனே ஏற்றுக் கொள்கிறார். அப்படியானால் இராசீவு மரணத்துக்கும் திமுகவின் தமிழீழ நிலைப்பாடு மாறுவதற்கும் என்ன ஏரணப் பொருத்தம் இருக்க முடியும்? தமிழீழ நிலைப்பாட்டில் திமுகவின் கருத்து மாறி விட்டது என்ற பிறகு அந்த அமைப்பு மீது விமரிசனம் வரத்தான் செய்யும். அந்த விமரிசனங்களை…

தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)

(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (6) பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்: இயம், இசம், இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம்  என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்? தாராளியம் என்பது எப்படி அமைப்பையும், தத்துவத்தையும் குறிக்கிறது? என்பதை விளக்கப்படுத்துங்கள். இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும். இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர்  இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது…

தோழர் தியாகு எழுதுகிறார்  34 :  படிப்பொலிகள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 33 தொடர்ச்சி) படிப்பொலிகள் இனிய அன்பர்களே! தாழி மடலில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும், எப்படியெல்லாம் இடம் பெற வேண்டும் என்பது குறித்து வேறுபட்ட சில முன்மொழிவுகள் வந்துள்ளன. எல்லாவற்றையும் நான் கருத்தில் கொள்கிறேன். சிலவற்றை உங்கள் பார்வைக்கும் வைக்கிறேன். மதுரையிலிருந்து தோழர் இரவிச்சந்திரன் எழுதுகிறார்: தோழர் தியாகுவுக்கு. தங்களின் ‘தாழி மடல்’ தொடர்ந்து வாசிக்கின்றேன். தோழர்களோடு நாள்தோறும் உரையாடுவதற்கான மிகச்சிறந்த வடிவம் மடல் வரைதல். கைபேசியில் வாசிப்பதற்கும் மிக வசதியாக சுருக்கமாகவும் நிறைவாகவும் இருக்கிறது. தங்களின் தூய தமிழ்ப் பதங்களின்…

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! [சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.] அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 523) “ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே” புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர்…