அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்-தாெடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் பேச்சாளனின் எழுத்துரை வணங்கி மகிழ்கின்றேன். உலகம் அறிவியலின் உறைவிடம்;அறிவியல் உலகத்தின் உயிர்மூச்சு;“உலகம் தழீஇயது ஒட்பம்” 1 என்னும் திருவள்ளுவர் வாய் மொழி இவை இரண்டின் புதையல். இவ்வாறு எழுதுவதை மிகைபட எழுதுவதாகவோ ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகவோ கருதுவோர் நூலினுள் புகுந்து வெளிவரின் புதையல்தான்’ என்று ஒப்புவர். அறிவியல் திருவள்ளுவம், அறிவியல் திருமகனாரின் அணிந்துரையால் அழகில் திகழ்கிறது. – சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க. ப. பொன்னுசாமி அவர்கள் இவ்வறிவுப் பொலிவை…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09 இறையனார் அகப்பொருள் உரை -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 7. மெய்ம் மலிந்து நகைத்தேன் காடு சூழ்ந்த மலைநாட்டு மகன் ஒருவன், குறவர் குடிக் குமரி யொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். தங்கள் குலக் கடவுளாகிய முருகன் உறைவதால் பெருமைப் பெற்ற மலை உச்சியில் தோன்றிய அவன் நாட்டு அருவிகள், கீழே பாய்ந்து அவன் நாட்டுக் காட்டை வளமுறச் செய்வது போலேவே, ஆற்றல் அருள், முதலிய அரிய பண்புகளால் சிறந்த பெரியோனாய அவன், தன்பால் பேரன்பு…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள் – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியின் பூரிப்பு அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க அன்னாய் என்னுயிர் அன்னாய்! தமிழே! ஒன்னார் மனமும் உருக்குந் கமிழே! அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே ! தகப்பன் தாயெனத் தகுவழி காட்டி மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே! உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால் 135 கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே! இறக்கும் வரைநின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே! இடுக்கண் வருங்கால் துடைப்பாய்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும் – க
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒள – தொடர்ச்சி) சொற்கள் வழங்கியஇதழ்களும் ஆசிரியர்களும் 1-21 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
உ.வே.சா.வின் என் சரித்திரம் 93 : அத்தியாயம்-58 : எனக்கு வந்த சுரம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-58 எனக்கு வந்த சுரம் திருப்பெருந்துறையில் புராண அரங்கேற்றம் ஒரு நல்ல நாளில்ஆரம்பிக்கப்பெற்றது. சுப்பிரமணியத் தம்பிரான் அதன் பொருட்டு மிகவிரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அயலூர்களிலிருந்து கனவான்களும்வித்துவான்களும் சிவநேசச் செல்வர்களும் திரள் திரளாக வந்திருந்தனர். குதிரை சுவாமி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெறலாயிற்று.அப்போது நானே பாடல்களை இசையுடன் படித்து வந்தேன். பாடம்சொல்லும்போதும் மற்றச் சமயங்களிலும் தமிழ்ப்பாடல்களைப் படிக்கும்வழக்கம் எனக்கு இருப்பினும் அவ்வளவு பெருங்கூட்டத்தில் முதன்முறையாகஅன்றுதான் படிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைக் கண்டு…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்
அறிவியல் திருவள்ளுவம் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களின் அணிந்துரை காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதிபெற வேண்டுமானால் அஃது உண்மையைப் பேச வேண்டும். வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து நமக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், ஏற்கெனவே உருவாக்கப் பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்தவாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இன நன்மை பெறுகின்றது. அப்படிப் பெருமைபெறு இலக்கியங்களில், திருக்குறள்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09. இறையனார் அகப்பொருள் உரை
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 08. பெருமை என்பது கெடுமோ? – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 6. இறையனார் அகப்பொருள் உரை இறையனார் அகப்பொருள் முதல் சூத்திர உரையில் உரை கண்ட வரலாறு பற்றிய விளக்கம் அளிக்கும் பகுதியில் “நக்கீரனால் உரைகண்டு, குமாரசுவாமியால் கேட்கப்பட்டது” எனவரும் தொடர்கொண்டு, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவர் எனக் கொள்வர் சிலர். நக்கீரனார் கடைச் சங்கப்புலவர்: கடைச்சங்க இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறை இடம்பெறவில்லை: கட்டளைக் கலித்துறைக்குத் தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்கலில்லை;…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல் – தொடர்ச்சி) பூங்கொடி எரிந்த ஏடுகள் அண்டையில் நின்ற அந்நூல் நிலையப்பணியாள் தன்பாற் பரிந்து வினவினென், இன்னும் உளவோ ஏடுகள் என்னவும்அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன,வெந்நீர் வேண்டி விறகென அவற்றைஎரித்தோம் என்றனன்; துடித்ததென் மனனே,90 எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! i கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ!கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே!வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும்கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்;95 என்னே! என்னே இவர்தம் மதிதான்! மடமை என்கோ? கொடுமை என்கோ?படம்விரி…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒள
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 216- 229 216. வாயு சங்கிதை – குலசேகர வரகுணராம பாண்டியர் 217. தமிழ்நூல் வரலாறு – பாலூர் கண்ணப்ப முதலியார் 1962 218. தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் – அரு. சோமசுந்தரம் 1968 – தொகுப்பு ஏ.கே. செட்டியார் 219. சுரதா பொங்கல் மலர் – கட்டுரை – இராம. அரங்கண்ணல் 1970…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-57 திருப்பெருந்துறை மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத்தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தைமுடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார்.எல்லாரிடமும் விடை பெற்று அவர் (1873 திசம்பர்) புறப்பட்டார்.மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சிலமாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மடத்துப் பிரதிநிதியாகப்பழநிக் குமாரத் தம்பிரானென்பவரை அனுப்பினர். புறப்பாடு எல்லாரும் சேர்ந்து புறப்பட்டோம். திருவிடைமருதூர் சென்று அங்கேதங்கி அப்பால் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை – தொடர்ச்சி) பூங்கொடி மூதாட்டி தன் வரலாறுரைத்தல் வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்;‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச்செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும்புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப்புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன்,நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும்அல்லும் பகலும் செல்லும் சிதலும்சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சியகுறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ!தமிழுக் குறுபகை எத்தனை தாயே!அமுதத்தமிழே! அன்னாய்! வாழி!அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம்நவையற நிறுவி நடத்துதல் என்பணி,நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்;…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 201-215 201. திருச்சிறு புலியூர் உலா 1951 குறிப்புரை : கி. இராமாநுசையங்கார் 202. மறைமலையடிகள் – புலவர் அரசு 1951 203. கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு – அ. அருளம்பலம் 1952 204. சீனத்துச் செம்மல் – புலிகேசி 1952 205. பணம் – ரெ. சேசாசலம் 1953 206. நான்கண்ட…
