உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 90 : அத்தியாயம்-55 : சிறு பிரயாணங்கள்-தொடரச்சி) என் சரித்திரம்நான் இயற்றிய பாடல்கள் தஞ்சை மார்சல் கல்லூரி தமிழ்ப்பண்டிதரும் என் ஆசிரியருடைய மாணாக்கருமாகிய ஐயாசாமிப்பிள்ளையென்பவரும் இலக்கணம் இராமசாமி பிள்ளையென்பவரும் வேறு சிலரும் விரும்பியபடி ஆசிரியர் தஞ்சை சென்று அங்கே ஒரு மாதம் தங்கியிருந்தார். அக்காலத்தில் நான் அவருடைய உத்தரவின்படியே உத்தமதானபுரம் சென்று என் தாய் தந்தையரோடு இருந்து வரலானேன். என் சிறிய தகப்பனாருடைய வருவாய் போதாமையால் குடும்பம் மிக்க சிரமத்தோடு நடைபெற்று வந்தது.அக்குடும்ப நிலை திருந்தவேண்டுமாயின் என் தந்தையார் மீட்டும்…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு
( (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை-தொடர்ச்சி) தமிழர் வீரம் செங்கோன் தரைச் செலவு செங்கோன் படையெடுப்புசெங்கோன் என்பவன் பழங்காலத் தமிழரசருள் ஒருவன். அவன் ஆண்ட நாடு பெருவளநாடு. அந்நாட்டில் மணிமலையும், பேராறும், முத்தூரும் இருந்தன என்பர். அம் மன்னவன் அயல் நாட்டின்மீது படையெடுத்தான்; போர் புரிந்தான்; வெற்றி பெற்றான். அப்போரைப் பாடினார் சேந்தன் என்ற செந்தமிழ்க் கவிஞர். “செங்கோன் தரைச் செலவு” என்பது அப்பாட்டின் பெயர். யாத்திரை என்ற வடசொல்லைப் போலவே செலவு என்ற தமிழ்ச் சொல்லும் படையெடுப்பைக்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல் – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 11. ஏடு பெற்ற காதை பொழிலில் பூங்கொடி தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்க் தோமறு தமிழ்க்குக் கொண்டுகள் ஆற்றப் பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள் பொழில் நலங் காணும் விழைவினள் செல்வுழி, மூதாட்டி வருகை மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி நரை மூதாட்டி நல்லன எண்ணிப் புரையறு செயலே புரிவது காட்டும் முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள், அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே எதிர்ப்பட் ‘டாயிழாய் யார்நீ…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 181 – 200 181. சிறுவர் தமிழிலக்கணம் 1945 – வே. வேங்கடராசுலு ரெட்டியார் 182. தமிழ் இசைக் கருவிகள் 1945 – பி. கோதண்டராமன் 183. பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி 1945 – வி. சிதம்பர இராமலிங்க பிள்ளை 184. சைவ சமய விளக்கம் – அ. சோமசுந்தர செட்டியார் 1946 185. பெரியாழ்வார்…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர் – தொடர்ச்சி) தமிழர் வீரம்வீரப் புகழ்மாலை வீரமும் ஈரமும்தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தையும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். “பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு” என்பது அவர் கொள்கை. ஔவையாரும் செல்வரும்புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. “ஔவை வாக்குத் தெய்வ வாக்கு” என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி நெஞ்சே தொடர்ந்து வருக! ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும். நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது….
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல் –தொடர்ச்சி) பூங்கொடி எழுச்சி யூட்டல் அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு! பொருள்நூல் உணர்த்தல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் 100வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும்அகம்எனப் புறம்என வகைபெறு…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 161-180 161. பொருள் மலர் – கட்டுரை : ஈ. த. இராசேசுவரி 1937 162. ஆரோக்கியமும் தீர்க்காயுளும் 1937 – சுவாமி எம். கே. பாண்டுரங்கம் 163. அகப்பொருளும் அருளிச் செயலும் 1938 – திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு 164. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 165. தமிழர் திருமண நூல் 1939 வித்துவான் மா….
உ.வே.சா. வின் என் சரித்திரம் 89 : எழுத்தாணிப் பாட்டு
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்- 54 : எழுத்தாணிப் பாட்டு சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும் போது மிகவும் உற்சாகமாகவே இருந்தது. கலியாணமானபின் சவுளிக் கடைக்காரர்களும் மளிகைக் கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக்கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக் கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வர வர அதிகமாயிற்று. இதனால் மிக்க…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 16 : வீர விருதுகள்-தொடர்ச்சி) தமிழர் வீரம்அத்தியாயம் 14 : பேர் தெரியாப் பெருவீரர் தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்களில் வீரம் விளைத்தவர் எண்ணிறந்தவர். அன்னார் பீடும் பெயரும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் ஆண்மைக்குச் சில ஊர்களே சான்றாக நிற்கின்றன. பாலாற்று வென்றான்பாலாற்றங் கரையில் நிகழ்ந்த போர்கள் பலவாகும். அப் போர்களங்களில் பெருகிய செந்நீர் பாலாற்றில் சுரந்த தண்ணீரோடு கலந்து ஓடிற்று. அவ்வாற்றங்கரையில் வெம் போர் புரிந்து வெற்றி பெற்றான் ஒரு வீரன். அவனைப் “பாலாற்று வென்றான்” என்று…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 04. உள்ளுறை உவமம்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 03. நெஞ்சே எழு! ஒரு தொழிலைத் தொடங்குவார், அத்தொழிலை முற்றுப் பெற முடித்தல் வேண்டும். தொடங்கிய வினைக்கண் வெற்றி வாய்க்கும் வரை. உழைக்காது, அதை இடையே கைவிட்டு, வேறு ஒன்றில் கருத்தைச் செலுத்துவாராயின், அவர்க்குப் பொருட்கேடும் புகழ்க்கேடும் உண்டாம். அதனால் ஒரு வினையைத் தொடங்குமுன் அவ்வினையின் ஆற்றல், அவ்வினையைத் தொடங்கும் தன் ஆற்றல், அவ்வினை வெற்றிபெற முடியாவாறு இடைநின்று தடுக்கும் பகை ஆற்றல் ஆகிய அனைத்தையும் பல முறை…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடி வருந்துதல் உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்நின்னலம் சிறிதும் நினையார் உளரே’என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி; தாமரைக்கண்ணி அறிவுரை உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்!தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம்தமிழ்காப் போரென நினைப்பது தவறு; இருவகைப் பகை சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம் மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி; பன்மொழி பயிலெனல் ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர்ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; 75வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!தெலுங்கு…
