உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு-தொடர்ச்சி) என் சரித்திரம்இராமசாமி பிள்ளை அப்போது மதுரை இராமசாமி பிள்ளை என்ற தமிழ் வித்துவானொருவர்அங்கே இருந்தார். அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர். ஆறுமுகநாவலரிடம் பழகியவர். தாம் இயற்றிய சில நூல்களைப் பிள்ளையவர்களிடம்படித்துக் காட்டி அவர் கூறிய திருத்தங்களைக் கேட்டு வந்தார். அவரைப் பற்றிநான் சில முறை கேள்வியுற்றிருந்தேன். பிள்ளையவர்கள் அங்கிருந்தவர்களில்ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் செய்வித்தார். ஆசிரியர் விருப்பம் என் உடம்பில் மெலிவைக் கண்ட ஆசிரியர் என் தந்தையாரைப்பார்த்து, “இவருக்கு இன்னும் நல்ல சௌக்கியமுண்டாகவில்லை….

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 16 : வீர விருதுகள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 15 : வீரக்கல் -தொடர்ச்சி) தமிழர் வீரம் வீர விருதுகள் வீரம் – மனத்திண்மை போர்க்களத்தில் வெற்றி பெறுதற்குப் புயத்திண்மை மட்டும் போதாது; மனத்திண்மையும் வேண்டும். “வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” என்பது வள்ளுவர் வாய்மொழி. மனத்திட்பமற்றவர் கோழைகள்; பேடிகள். ‘புலியடிக்கு முன்னே பேடியைக் கிலியடிக்கும்‘ என்பது இந் நாட்டுப் பழமொழி. ஏனாதிப் பட்டம்மனத்திட்பமுடைய படைத் தலைவரைத் தமிழ் மன்னர் சிறப்பித்தனர்; ஏனாதிப் பட்டமளித்துப் பாராட்டினர். அப் பட்டத்தின் சின்னம் ஓர் அழகிய மோதிரம். அதனை அரசன்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார் : 04. உள்ளுறை உவமம்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 2. உள்ளுறை உவமம் உவமை இரண்டு வகைப்படும்: அறியாத ஒரு பொருளை விளக்க அறிந்த ஒரு பொருளை எடுத்துக்காட்டி இதுபோல் இருக்கும் அது எனக் கூறுவது ஒன்று. இது உலக வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் வரும். இது ஏனை உவமம் என்றும் அழைக்கப்படும். எவ்வித அடையும் இல்லாமல் வறிதே உவமம் என்றும் அழைக்கப்படும். மற்றொன்று செய்யுளில் மட்டுமே வருவது; அதுவே உள்ளுறை உவமம்; உவமப்போலி என்றும்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடிகோமகன் நிலைமை கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சியகோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் 30பாமக னாகிய பாவலன் பெயரால்படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்;உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார்தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமைமுடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்’ 35எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்துமனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி; பொதுப்பணி வேடர் புரிபணி உளத்தில் பூத்த தன்றே!தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் 40பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்;மதுநலங் கண்ட வண்டென மக்களும்மதிமயக் குற்று…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 121- 140 121.       வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும்   1927 – வல்லை. பாலசுப்பிரமணியன்      122.       நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும்  1928 – சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்      123.       இரா. பழனியாண்டிப் பிள்ளையின் சீவிய சரித்திரம்     1928 124.       வேதாந்த பாசுகரன் – கருணையானந்த ஞானபூபதிகள்     1928 125.       திரிவிரிஞ்சை புராணம்  1928 – குறிப்புரை டி….

உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்-தொடர்ச்சி) என் சரித்திரம் அம்மை வடு நான் பல்லக்கில் சூரிய மூலையை அடைந்தபோது பகல் 11 மணி இருக்கும் அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது. எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி விழுந்தவன் போலானேன். நான் அங்கே…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 15 : வீரக்கல்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்-தொடர்ச்சி) தமிழர் வீரம் வீரக்கல் வீரரை வியந்து போற்றிய நாடு தமிழ்நாடு. போர் முனையில் விழுப்புண் பட்டு விழுந்தவர்க்கும், கடும்புலியைத் தாக்கி வென்ற காளையர்க்கும், இன்னோரன்ன வீரம் விளைத்தவர்க்கும் வீரக்கல் நாட்டிச் சிறப்பைச் செய்தனர் தமிழ்நாட்டார். நடுகல்வீரருக்கு நாட்டுதற்கேற்ற கல்லை முதலில் தேர்ந்தெடுப்பர்; எடுத்த கல்லைப் புனித நீராட்டுவர்; வீரனுடைய பீடும் பேரும் அதில் எழுதுவர்; உரிய இடத்தில் அதனை நாட்டுவர்; மாலையும் மயிற் பீலியும் சூட்டுவர். இவ்வாறு நட்ட கல்லைத் தெய்வமாகக் கொண்டு…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி தலைமையுரையில், ஞானியார் அவர்கள் “கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டான்” எனக் கூறிப் பாராட்டினார்.மற்றுமொரு நிகழ்ச்சி : நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ. இராகவன் அவர்கள் அந்த ஆண்டு. வித்துவான் தேர்வு எழுதியிருந்தார், அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை குறளுரை பரப்புதல் நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்குஉணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5 தாமரைக்கண்ணி வருகை காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇநீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழிகூறா நின்றனள்; கூறிய நங்கையை 10ஆரத் தழுவி அப்பெரு மாட்டிவீரத் திருமகள் வாழிய என்றனள்; பூங்கொடி வினவல் அன்னையும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ-தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 99-120 99. உதயணசரிதம் – பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924100. பத்மினி – வே. முத்துசாமி ஐயர் 1924101. (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் – கிருட்டிணசாமிசருமா 1924102. பிரமானந்த நான்மணி மாலை – பி.பி. நாராயணசாமி நாயுடு 1924103. தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு – ஆர். விசுவநாத ஐயர் 1924104. சிவனடியார் திருக்கூட்டம் 1925105. தேசபந்து விசயம் – ம. க. சயராம்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம் – தொடர்ச்சி) என் சரித்திரம் விடை பெறுதல் 121 செய்யுட்களில் நாட்டுப்படலம் நிறைவேறியது. கடவுள் வணக்கம்முதலியவற்றோடு 158 செய்யுட்கள் இயற்றப் பெற்றன. அடிக்கடி சுப்பிரமணியதேசிகர் புராணத்தைப்பற்றிப் பிள்ளையவர்களை விசாரிப்பார். நான் தனியேசென்று பேசும்போது என்னையும் வினவுவார். நான் இன்ன இன்ன பகுதிகள்நிறைவேறின என்று சொல்லுவேன். அவருக்குச் செய்யுட்களைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் உண்டாகும். நாட்டுப்படலம் முடிந்தவுடன் ஆசிரியர் அதுவரையில் ஆனபகுதிகளைச் சுப்பிரமணிய தேசிகர் முன்பு படித்துக்காட்டச் செய்தார்.அச்சமயம் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வந்திருந்தார்.செய்யுட்களைக் கேட்டுத் தேசிகர்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு-தொடர்ச்சி) தமிழர் வீரம்வீர மாதர் வீரத் தாய்தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். வாளெடுத்த தாய்வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன்…