பொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ

பொங்கல் புத்தாண்டு வாழ்த்து பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு                                         பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலெனப் பொங்கலிட்டு வாழியவே! முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ

பொங்கட்டும் பொங்கல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கட்டும்  பொங்கல்!    உழவர்  திருநாள் உழைப்போர் திருநாள் உரிமைத் திருநாள் உவகைத் திருநாள்   வந்தது இன்று நொந்தது உள்ளம்   உழைப்பை மறந்தோம் உரிமை இழந்தோம் உவகை தொலைத்தோம் உண்மை உணர்ந்திலோம்!   மொழியைத் தொலைக்கிறோம் இனத்தை அழிக்கிறோம் துன்பத்தை மறைக்கிறோம் இன்பத்தில் உழல்கிறோம்!   தீரட்டும் துன்பம்! மலரட்டும் ஈழம்! பெருகட்டும் இன்பம்! வெல்லட்டும் தமிழியம்!   பொங்கட்டும்  பொங்கல்! தங்கட்டும் மகிழ்ச்சி!   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  

உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா

உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு!  அறுவடை விழா தரும் அறுசுவை உண்டியும், அழகுத் துணியும், தூய ஆடையும் அவைதரும் அகமகிழ்வால் வளரும் அன்பும் அருளும் ஆர்வமும் இன்பமும் ஈகையும் உவகையும் ஊக்கமும் போற்றி வரவேற்கத்தக்கதே. பொன்னும் மணியும் கொழிக்கும் நன்னாட்டிலே பிறந்தோம். வாழ்வின் பயனை நுகர்ந்தோம் என்று களி கொள்ளத்தான் வேண்டும்.   எரிமலையும் சுடுமணலும், நெடுங்காடும் பெருவெள்ளமும், வறண்ட நிலமும் வளமற்ற நீர்நிலையமும் படைத்த இடமாக இன்றி, நஞ்சையும் புஞ்சையும் நடு நடுவே நறுமணப் பூங்காவும் பழமுதிர்ச் சோலையும் பாங்குடன் விளங்கும் குன்றும், மலையும்…

செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே! – நாக.இளங்கோவன்

      போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே தேனடையால் வீடுகட்டிக் கூடிவாழுந் தேனீக்கள் குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக, ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு, பழமரமும் தன்கனியை தான்பிழிய, தேனோடு தீங்கனிச்சாறும் ஒட்டி வெட்டி சொட்டி  அங்கே கட்டி தரும் கரும்பு வயலுக்கு வாய்க்காலாய் ஓடிவிழ, கருப்ப வயலின் அண்டையிலே, தடஞ்சாலி நெல்லெங்கும் தளதளவென வளர்ந்திருக்க, அதைத்தடுக்கும் களையதனைக் களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின் கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்குக் களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம் ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும், புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போலச் சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில்…

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! : குடிஅரசு – தலையங்கம்

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே!   உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் – எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், பாம்புகளுக்கும் பச்சை இரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற் குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்போடு, ஆனந்த பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்?   இரட்டைப்…

கரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு

குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம்,…

நியூயார்க்குத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள்

நியூயார்க்குத் தமிழ்ச் சங்கம் 2014 ஆண்டிற்கான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சனவரி 25 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு வந்திருந்தவர்களைச் சங்கச் செயலர் தேவராசு விசயகுமார் பொங்கல் பண்டிகையின் சிறப்புகளைக் கூறி வரவேற்றார். விழாவில் நான்கு  அகவைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான இசை, நடனம், ஆட்டம் பாட்டம்  முதலியவற்றைப் படைத்து அரங்கத்தில் இருந்த  ஏறத்தாழ  400 பேர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர். குறிப்பாகச் “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற பாடலுக்கு ஆடிய  சிறார்கள் அனைவரும் மிகவும்  சிறப்பாக…

ஊசுடனில் தமிழர் திருவிழா

அமெரிக்காவின் டெக்சசு மாகாணத்தில் ஊசுடன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் பியர்லேண்டு, கேட்டி, உட்லண்ட்சு மன்றக் கிளைப் பள்ளிகளது மாணாக்கர்கள் பங்குபெற்ற திருக்குறள் திருவிழா,பொங்கல் திருவிழா, பட்டிமன்ற நிகழ்வுகள் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பியர்லேண்ட் கிளையில் மேல்நிலை மாணாக்கர்கள் வாதம்புரிந்த “இயந்திரத்தினால் நமக்கு ஏற்படுவது நன்மையா? தீமையா?” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் மாணாக்கர்களின் அறிவுத்திறனை அதுவும் தமிழில் வெகு சிறப்பாக வெளிக் கொணர்ந்தது. அனைத்துக் கிளைகளின் மாணாக்கர்களும் பங்குபெற்ற திருக்குறள் திருவிழாவில் ஒரு திருக்குறளுக்கு ஒரு தாலர் என்ற அடிப்படையில் திருக்குறளையும் அதற்கான…

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக்கொண்டாட வேண்டும்

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு….