(அதிகாரம் 053. சுற்றம் தழால் தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 054. பொச்சாவாமை  மகிழ்ச்சியிலும், கடமை மறவாமை, மனத்தின்கண் சோர்வு அடையாமை   இறந்த வெகுளியின் தீதே, சிறந்த      உவகை மகிழ்ச்சியின், சோர்வு.        மகிழ்ச்சியில் செயலை மறத்தல்        மிகுந்த சினத்தைவிடத், தீயது.   பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை,       நிச்ச நிரப்புக்கொன்(று) ஆங்கு.    மறதிமை புகழையும் கொல்லும்;         வறுமை அறிவையும் கொல்லும்.   பொச்சாப்பார்க்(கு) இல்லை புகழ்மை; அது,உலகத்(து)      எப்பால்நூ லோர்க்கும்,…