இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! புதுக்கோட்டை மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்   இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மாசி 17, 2047 / 29.02.2016 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சென்னை,…

உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்

உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்   உலகமயமாக்கலின் அதிவேகமான நடைமுறைப்படுத்தலில் பண்டைய மரபுகள், குழுஇனங்காணுதல், அடையாளப்படுதல் ஆகியன மறைந்து போய் ஒரே பண்பாட்டுத்துறை நடைமுறையிலாகிவிடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாட்டுப்புறவியல் என்பது மீள் விளக்கம் செய்யப்படவேண்டும் என்னும் கருத்து வேகமாகப் பரவிவருகின்றது. புதிய குடியேற்ற ஆதிக்கத்தின் விளைவைக் குமுகாயத்தில் கண்டறிந்து எதிர்விளையாற்றவேண்டிய காலத்தின் கட்டாயம் நாட்டுப்புறவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியானது குறிப்பிட்ட அளவு மக்கள் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பாதித்திருக்கிறது.   சிற்றூர்கள் அழிந்து நகரங்களாக மாறிவருகின்றன. விளைநிலங்கள், ஏரிகள்,…

தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!

தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!     இலங்கையில் பண்டாரநாயக்கா தலைமையாளராக(தலைமைஅமைச்சராக) இருந்தபொழுது 1956 ஆம்ஆண்டில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் அவர் படுகொலைசெய்யப்பட்ட பின்பு,1959இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்,1978 இல் ஐக்கியத் தேசியக்கட்சி அரசாங்கத்தில் இதற்குப் பல வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் தூக்குத்தண்டனை அல்லது மரணத்தண்டனை என்பது ஏட்டளவில்தான் உள்ளது. இதனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் ஆயுள்தண்டனைபோல் சிறைவாசியில் தங்கள்வாழ்வைக் கழிக்கின்றனர்.   சிங்களக் கொடுங்கோல் அரசு சிங்களர்க்கான…

சோகத்தில் மூழ்கிய மீனவஊர்கள்: ‘500 உயிர்களைக் கொடுப்போம்’ எனச் சூளுரை

மீனவர் ஐவர் தூக்கு – மக்கள் கிளர்ச்சி     தங்கச்சிமடம் : இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர் ஐவருக்கு இலங்கை அரசு விதித்த தூக்குத் தண்டனையால் மீனவஊர்கள் சோகமயமாகி உள்ளன. பொய் வழக்கில் சிக்கியுள்ள ஐவரின் உயிரைப் பறிக்க இலங்கை அரசு துடிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். ‘500 உயிர்களை கொடுத்தாவது 5 பேரை மீட்போம்’ எனச் சூளுரைத்தனர்.   கடந்த 2011 இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து,…

மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம் தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே! அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும் அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ! ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா! எழுவாரா ! தொழில்செய்ய!…

126 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு – நரேந்திரருக்கு பக்சே அறைகூவல்

  சிங்களக்கொடுங்கோலர்களுக்கு நண்பர்களாகப் பலர் பா.ச.க. வில் உள்ளனர். இருப்பினும் நரேந்திர(மோடி) ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு விடிவு கிடைக்கும்; இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நரேந்திரர் பதவியேற்பிற்கு இனப் படுகொலையாளி பக்சே அழைக்கப்பட்டான்;  மாபெரும் மாற்றம் நிகழப்போகிறது என்றெல்லாம் நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டன. ஆனால், நரேந்திரர் அழைத்தது தந்திர வினையல்ல;  பக்சேவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியும் அல்ல. இங்கு வருமாறு அழைக்க வைத்த பக்சேதான் தந்திரவினையில் வல்லவன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 126 தமிழக மீனவர்கள் சிங்களப் படைத்துறையால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளன….

இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! -இராமதாசு கண்டனம்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு கண்டனம்.   தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்