பூங்கொடி 25 : அல்லியின் மறுமொழி

(பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை – தொடர்ச்சி) பூங்கொடி அல்லியின் மறுமொழி ‘எத்தனை முறைநினக் கியம்புவென் பெரும! வித்தக! விண்மீன் வலையினிற் சிக்குமோ? தத்தை கொடுஞ்சிறைக் கூண்டுள் தங்கிட விழைதல் உண்டோ? விடுவிடு காமம்!      மழைமுகில் தொடுதர வானுயர் கோவில் அழுக்கும் இழுக்கும் பெருகி ஆங்குப் புழுக்கள் நெளிதரல் போலச் செல்வர் நெஞ்சில் தீக்குணம் நெறிந்தன போலும்; வெஞ்சினங் கொள்வாள் நின்முகம் நோக்காள்    25 வஞ்சி குறிக்கோள் வாழ்வினள் ஆதலின் விஞ்சுங் காமம் விடுவிடு’ என்றனள்;  30 அல்லியின் வரலாறு வினவல்…

பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை

(பூங்கொடி 23 : காமங் கடந்தவள் – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் கலக்கம்      கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின னாகிப் படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ! சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப்      புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ! புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும் உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி அரவம் சிறிதும் அறியா இடமாம்; அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல    5      நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்; கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்; உள்ளிற் செல்லுதல்…

பூங்கொடி 23 : காமங் கடந்தவள்

(பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன் – தொடர்ச்சி) பூங்கொடி காமங் கடந்தவள் நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச் செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால் வெல்லக் கருதின் விளைவது வேறு;          115 சொல்லக் கூசேன் மெல்லியல் மாத ரார் பிள்ளைப் பூச்சிகள் அல்லர் பெரியோய்! காமங் கதுவக் கருத்தினை விடுப்பின் நாமங் கேடுறும் நல்லறங் தீயும் தீமை பற்பல சேர்வது திண்ணம்      120 மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து காதல் மேற்கொளல் கடமை யாகும்; காமங் கடந்தவள் காமம் என்னும் கள்வன் றனக்கே புகஇடம்…

பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன்

(பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல் – தொடர்ச்சி) பூங்கொடி கொழுநன் ஆவேன் கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன் எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன்    90 நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள் என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்; உடன்படச் செய்க குறளகம் விடுத்துக் குமரன் என்னைப் பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின் அளப்பருஞ் செல்வம் அனேக்தும் ஈவேன்     95 களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன் காதற் கடலைக் கடந்திட அவளை மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்…

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்

வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019    மாலை  06.30 மணி பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  அவர்கள் தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி சிறப்புரை  :  ‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன் தகுதியுரை: செல்வி ப. யாழினி  இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்…

தமிழ் வாழ்த்து- முடியரசன்

தமிழ் வாழ்த்து வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே – முடியரசன் (கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை) பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) பக்கம் 20

இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

 11 : தமிழே இன்பம்! – முடியரசன்   தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?   பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.   “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம்

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம் தொகுப்பு : பாரி முடியரசன் வெளியீடு : சாகித்ய அகாதெமி ஐப்பசி  17, 2045 / நவ.03, 2015 மாலை 6.00 சென்னை  

கவிஞர் முடியரசன்- இ.மறைமலை

  கனி தமிழ்க் கவிதைபுனைந்த கரங்கள் கயிறு திரிக்கத் தொடங்கிவிட்ட இன்று, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டாம் கண்ணான செந்தமிழைக் கட்டாயத் திணிப்பால் கடுகிவரும் காட்டுமொழியாம் இந்தி அழித்து வரும் இடுக்கண்ணான வேளையிலே, தமிழ் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தலையாய கவிஞர், தன்னுயிரை நல்குதற்கும் தயங்காது மொழிப்போரில் பங்கு கொண்ட பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கட்குப் பாவின்பம் நல்கிவரும் பாவலர் முடியரனேயாவார் என முட்டின்றிச் சொல்லவியலும். மறைமலையடிகளாரின் மாண்புடைத் தனித்தமிழ் இயக்கத்தைத் தகர்த்தெறிய முற்பட்ட, தீந்தமிழில் திரைக்கவிகளை எழுதித்திரட்டிவிட்ட சில தான்தோன்றிகளைப் போலன்றித், தமிழாலே உயிர் வளர்த்தும்…

தமிழகச் சிறப்பு – கவிஞர் முடியரசன்

  அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம்                 மேவலர் அணுகா வீரங் கெழுமிய 5   காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு; `யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்      10          றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை தருவது தொழிலாத் தான்கொண்…

தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்

தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலையென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய் அடிக்கே எனையாண் டருள். – பூங்கொடி