தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்
தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026 சங்கப் புலவர்கள் பொன்னுரை – 31 தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! ‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை. நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4 நெய்தற் கலி இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன. பதவுரை: கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;…
வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும்
(வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அ. கொடைநலமும் படைவலமும் ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள் ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திருவள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களை நயம்பட உரைக்கிறார், தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக்கத் திருவள்ளுவர்…
வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2
(வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்-தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 5. சொல்லும் செயலும் பின் பகுதி இங்ஙனம் நால்வகை வன்சொற்களைக் கடிந்து பேசிய கவிஞர்பெருமானாகிய திருவள்ளுவர், எவரிடத்தும் இன்பத்தைப் பெருக்கும் இன்சொல்லையே பேசுக என்று வேண்டுவார். அதுவே துன்பத்தை மிகுவிக்கும் வறுமையைத் தொலைப்பதாகும். இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவதாகும். இன்சொல் கூறுவானின் பாவங்கள் குறைந்து தேயும். புண்ணியங்கள் வளர்ந்து பெருகும். இவ்வாறு பன்னலம் விளக்கும் இன்சொல்லே தனக்கும் இன்பம் தருவதை அறிந்த ஒருவன் என்ன கருதி…
வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்
(வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 5. சொல்லும் செயலும் மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண்ணங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம் உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும். வடமொழியில் வழங்கும்…
