நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை

புதன் கிழமை 13.06.2018 மாலை 5.00 சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14 உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்  இலக்கிய வேந்தன்  அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17)  தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) 5.குருபக்தியும் ஐயப்பன் அருளும்   “பெருங்கவிக்கோவின் உள்ளம் எதிர் மறைகட்கும் இடமளிப்பது. பக்தியில் பதியும்; பகுத்தறிவை வரவேற்கும்; பழமையின் சீர்மை போற்றும்; புதுமையின் பயனை வாழ்த்தும்;தேசியம் பரவும்; செந்தமிழர் தனி உரிமையும் செப்பும்; உத்தமர் காந்தியையும் போற்றும்; சமதர்ம மாவீரன் இலெனினையும் பாராட்டும்.  ஒரு வகை யில் அது ஒரு தமிழ்க்கடல் எனலாம்.”  இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் க. அன்பழகனார். இக்கூற்றின் உண்மையைப் பெருங் கவிக்கோவின் கவிதைப் படையல்கள்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16)   தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) 4. உலகம் தழுவும் நோக்கு   விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கி ச் சிந்தனைகள் வளர்க்கும் கவிஞர், தென் வியத்துனாம் விடுதலைப்படையின் வெற்றி குறித்து உவகைப் பெருக்கோடு பாடியிருக்கிறார். பாகித்தான் பாதகத்தை  எதிர்த்து வீரமுழக்கம் செய்கிறார். எகிப்து இசுரேல் போர் பற்றி உணர்ச்சியோடு கவிதை இயற்றியுள்ளார். இக்கவிதைகளில் அவருடைய நேர்மை உள்ளமும் நியாய உணர்வும் ஒலிசெய்கின்றன. பெருநாடு சிறு நாட்டைப் பிய்த்து வீழ்த்தல் பிழையென்றால் அப்பிழையைச் சிறுநாடும் செய்யாமல்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) –  தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16)   4. உலகம் தழுவும் நோக்கு   தாய்மொழிப் பற்றும் தம் இனப் பற்றும் கொண்டுள்ள பெருங்கவிக்கோ, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வை வலியுறுத்துவதுடன், உலக ஒற்றுமையை வளர்ப்பதிலும் கருத்துடைய கவிஞராகத் திகழ்கிறார்.    உலக ஒற்றுமை ஓங்கிட வேண்டும் வையம் ஒன்றே எனப்புவி ஒழுகிட வேண்டும். கலகம் செய்யும் கயமைகள் எல்லாம் இன்றே  கண்டிப்பாக நீங்கிட வேண்டும் மக்கள் எல்லாரும் ஒரு தாய் மக்கள் பூமி…