எழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி
எழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்! இராசீவு கொலை வழக்கில் சிக்கிய எழுவரை விடுதலை செய்வது அநீதியானது; உலகெங்கும் நடைமுறையில் இல்லாதது என்பனபோல் சிலர் கூக்குரலிடுகின்றனர். நீதி மன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம்மட்டும்தான் உள்ளது. ஒரு நீதிமன்றம் தண்டித்த பின்னர் அதற்கு வேலையில்லை. மேல் முறையீட்டு நீதி மன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இறுதிநிலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் வழக்குடனோ வாழ்க்கையுடனோ நீதிமன்றத்தின் தொடர்பு அற்று…
திரைத்துறையினரே! பரத்தமை(விபச்சார)ப் போக்கு முறைதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
திரைத்துறையினரே! பரத்தமை(விபச்சார)ப் போக்கு முறைதானா? உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.(திருவள்ளுவர், திருக்குறள் 813) கிடைக்கும் பயனை அளந்து பார்த்துச்செயல்படுவதும் தமக்குத் தரக்கூடிய பொருளின் அடிப்படையில் உடலை விற்பவரும் திருடர்களும் இணையானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். தமிழில் படங்கள் எடுத்துத் தமிழர்களின் செல்வத்தால் செல்வமும் புகழும் சேர்க்கும் நீங்கள் இத்தகையவரா இருக்கலாமா? பயன் அளந்து பழகுபவரும் பரத்தையர்களும் ஒன்றுதான் என்கிறார் திருவள்ளுவர். நீங்களும் அவ்வாறுதானே நடந்து கொள்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா? உங்களில் சிலர் விலைமக்கள்…
வல்லமையாளர் தாலின் வெல்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
வல்லமையாளர் தாலின் வெல்க! திமுகவின் தலைவர் பொறுப்பேற்றதும் தாலின் ஆற்றிய உரை, அருமையான உரை எனப் பல தரப்பாரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் பாசகவிற்கு எதிராகப் பேசியிருக்கவேண்டா எனச் சிலர் கூறுகின்றனர். கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக் கருத்தும்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே, புதியதாகப் பிறந்தவரின் புதிய உரையைப் பாராட்டலாம். திமுக தன் கொள்கைப் பாதையில் சறுக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் சிலர், திமுக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் துணிவுடன் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு…
தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்! திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (12.08.2049/28.08.2018) தாலினுக்கும் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை முருகனுக்கும் வாழ்த்துகள். துரை முருகன் நகைச்சுவையாகப் பேசுபவர். எனவே, யாரையும் கசக்கிப் பிழியாமல் தன் பேச்சு மூலமே பொருளைத் திரட்டுவார் என எதிர்பார்க்கலாம். இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம். பன்முகத் திறமை கொண்ட கலைஞர் மு.கருணாநிதிக்குப் பின்னர் மு.க.தாலின், திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்சியைப் பிளவிலிருந்து காப்பாற்றல், தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டச் செய்தல், அதற்காகக் கூட்டணிகளைச்…
தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்
தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார் கல்விப்பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப்பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றி மக்களிடையே தமிழைப்பரப்பிய செம்மல் இலக்குவனார். படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப் பாவியம் படைத்த பாவலர் இலக்குவனார். பயின்று கொண்டே தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய தொல்காப்பிய அறிஞர் இலக்குவனார். குறள்நெறி, சங்க இலக்கியப் பரப்புரைப் பணிகளை இளமையில் தொடங்கி. வாணாள் இறுதி…
பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்றாலும் இது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவந்த துறைகளில்கூட, இணையப் பயன்பாடு, கணிணிப் பயன்பாடு ஆகிய காரணங்களால் தமிழ் ஒதுக்கப்பட்டு வருகிறது. இவற்றிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த முடியும். என்றாலும் தக்க வழிகாட்டியின்றியும், சோம்பல், ஆர்வமின்மை ஆகியவற்றாலும் ஆங்கிலப் பயன்பாடு பெருகி வருகிறது. இச்சூழலில் பதிவுத்துறையின் தமிழ்ப்பயன்பாட்டிற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். பதிவுத்துறையில் பிற துறைகளைப்போலவே தமிழ், ஆங்கிலம்…
கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? : தி.க.உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா? : தி.க.உறங்குவது ஏன்? கடவுள் உருவச் சிலைகள் திருட்டுகள் குறித்துத் தாங்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் நேர்மையாக நடவடிக்கை எடுப்போம் எனச் சார்புரை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தேன். அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மையாளர்களா அல்லரா என்பதை மக்கள் அறிவார்கள். எனினும், தவறாகப் பாகுபடுத்தும் வரையறை மூலம் நேர்மையை அளவிட்டுப் பெருமை பேசக்கூடாது. நேர்மையாக வாழும் ஒருவர் தன்னை நேர்மையாளராகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், “நான் படித்தவன், நேர்மையாகத்தான் வாழ்வேன்”…
உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! வேட்டைக்காரன் காத்துக் கொண்டுள்ளான். பாய்ந்து குதறி எடுக்க நேரம் பார்த்துக்கொண்டுள்ளான். வேட்டை நாய்களையும் ஆயத்தமாக வைத்துள்ளான். குறி வைக்கப்பட்டவர்களுக்கு எதையும் எதிர்நோக்கும் வலிமையும் ஒற்றுமையும் இருப்பின் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த உண்மை ஒன்றும் மறைபொருளன்று. அறிந்திருந்தும் சிலர் வலையில் விழ விழைவதால் அனைவருக்குமே தீங்கு நேரும் பேரிடர் உள்ளது. இந்தச் சிந்தனையுடன் நாம் கட்டுரையைத் தொடருவோம்! மேனாள் முதல்வரும் அதிமுக தலைவியுமான செயலலிதா மறைந்த பின் பல நேர்வுகளில் அதிமுக ஒற்றுமை…
எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
உச்சநீதிமன்றக் கருத்திற்கு இணங்க எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்படடவர்களுக்குத் தண்ட னையே வழங்கியிருக்கக்கூடாது. வழங்கிய பின்னரும் வழக்கு தொடர்பானவர்கள் முறையற்ற வழியில் இவர்கள் தண்டிக்கப்படடதைத் தெரிவித்த பின்னராவது எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். விடுதலைக்கான பல வாய்ப்புகள் வந்தபின்னரும் மத்தியஅரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்வது மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் அவர்கள் செய்தது ஒப்புமைப்படுத்த முடியாத…
கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா? கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா? – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா? கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா? உலகில் நிறையில்லாத மனிதனும் இல்லை. குறையில்லாத மனிதனும் இல்லை. நிறையையும் குறையையும் கணக்கிட்டு மிகுதியானவற்றின் அடிப்படையில்தான் ஒருவரை மதிப்பிட இயலும். மிகுதி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் தன்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒருவரின் நிறையையோ குறையையோமட்டும் சுட்டிக்காட்டுவதுதான் தவறே தவிர, இரண்டையும் சுட்டிக்காட்டுவது தவறல்ல. கலைஞர் கருணாநிதி மரணப் படுக்கையில் இருக்கிறார். எனினும் எமனின் அழைப்பை வென்று வாழ்கிறார். அவர் நலன் எய்தி நூறாண்டுக்கு மேலும் வாழ வாழ்த்துவோம்! …
வருமானவரித்துறையினரைக் கைது செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
வருமானவரித்துறையினரைக் கைது செய்க! வருமானவரித்துறை என்பது ஒரு தண்டத்துறை. அரசிடமிருந்து மாத வருவாய் பெறுபவர்களிடமிருந்து மட்டும் வரிக்கொள்ளை யடிக்கிறதே தவிர உண்மையில் வருமானவரி கட்டாமல் கொள்ளையடிப்போரிடம் மண்டியிடும். இயல்பான சீரான வரி விதிப்பு முறை இருப்பின் வரி ஏய்ப்பு என்பதற்கு வாய்ப்பிருக்காது. தவறான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தி அதற்கென ஒரு துறையைச் செயல்படுத்தி மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்? இத்துறையை மூடிவிட்டு, அவர்களாகவே வருமானவரி செலுத்தும் எளிய முறையை நடைமுறைப்படுத்தினால், கூடுதல் வரி வருவாயும் கிடைக்கும். வருமானவரித்துறை ஊழியர்களுக்கான சம்பளம்,…
ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசியவியல் நிறுவனம் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இலிவர்பூல், இங்கிலாந்து ஆனி 13-15, 2049 சூன் 27 – 29, 2018 ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! கட்டுரையாளர்களே! பேராயர் எசுரா சற்குணம், அமுதன் அடிகள், இலிவர்பூல் தமிழன்பர்கள், இலண்டன் தமிழன்பர்கள் முதலான அவையோரே! அனைவருக்கும் வணக்கம். வாழ்வியல் அறநூலாகிய திருக்குறள் அனைவருக்கும் பொதுவான உலக நூலாகத் திகழ்கிறது. எனவே, உலக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிரான அறஉணர்வையும் விதைக்கிறது. “திருவள்ளுவர் உலகின் முதல் புரட்சியாளர்” எனப்…
