இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) சிற்றிலக்கியங்கள் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், பாடல், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் இல்லை. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும், ‘மூலமும் உரையும் இணைந்த பகுதியிலும்’ பக்கம் மட்டும் தேடலாம். திருவருட்பா : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும் பாடல் தேடலும் மூலமும்…
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்- ஆய்வுரை 2. : இலக்குவனார் திருவள்ளுவன்
2 இதேபோல், அடுத்த இயலில், ‘கனியிருப்ப’ என்பதற்குப் பிற உரையாசிரியர்கள் விளக்கங்களைத் தொகுத்தளித்துள்ளார். நாக்கின் இயல்பு முதலானவற்றைக்கூறிவிட்டு, கனியிருப்பக் காய்கவரக் கூடாமைக்குப் பின்வரும் வகையில் விளக்கம் அளிக்கிறார். 1.) கனியைக் கவர்ந்து உண்பதால் உண்டாகும் ஆக்கங்கள் 2.) காய்களை உண்பதால் உண்டாகும் கேடுகள் 3.) கனிச்சொல் சொல்வதால் உண்டாகும் ஆக்கங்கள். 4.) காய்ச்சொல் சொல்வதால் உண்டாகும் கேடுகள். இவ்வாறு ஆழமாக விளக்குவதுடன் இன்சொற்களங்கள் யாவை, வன்சொற்களங்கள் யாவை எனவும் நமக்கு உணர்த்துகிறார். கடுஞ்சொல் வேண்டா, கனிச்சொல் வேண்டும் என்பதற்கு அறநெறிச்சாரம்,…
வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!
வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே! ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான்…
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம். அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின….
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்
1 உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக,…
வலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015) 5 ஐ.) இலி /இன்மை(null) நல்(null) என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள். நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள். ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும் பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும். நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர்….
தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்
தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும் எழும்பூர் ஆல்சு சாலையின் பெயரைத் ‘தமிழ்ச்சாலை’ என மாற்றி அதற்கான பெயர்ப் பலகையைக் கடந்த திங்கள் முதல்வர் திறந்து வைத்தார். நாம் இதற்காக நன்றியையும் மேற்கொண்டு வேண்டுகோளையும் தெரிவிக்கிறோம். திரு மா.சுப்பிரமணியன் சென்னை மாநகரத் தலைவராக இருந்த பொழுது, பெயர்ப்பலகைகள் தமிழில் அமைய நடவடிக்கை எடுத்தார். அத்துடன் நீண்ட காலமாகத் தமிழமைப்பினர் வேண்டுகோள் விட்டவாறு தெருக்களுக்குத் தமிழறிஞர்கள் பெயர் சூட்டவும் முயற்சி மேற்கொண்டார். அப்பொழுது, அவருக்குத் ‘தமிழ்க்காப்புக்கழகம்’ சார்பில் பின்வரும்…
இனிதே இலக்கியம் – 8 எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்
8 எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர் ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று. “கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல்…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –16 : இலக்குவனார் திருவள்ளுவன்
16 சமய இலக்கியங்கள் அட்டவணை – 04 (தேடுதல் தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன்
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) 15 காப்பிய இலக்கியங்கள் அட்டவணை – 03 பெருங்கதை உரை மூலப்பக்கத்திலேயே உருவாகிறது. பிற வற்றிற்குத் தனிப் பக்கமாகப் பெட்டிச் செய்திபோல் வருகின்றது. அடுத்துள்ள சமய இலக்கியப் பகுதிகளில் தேடுபொறி வாய்ப்பு குறித்துத் தனித்தனியாகக் காணாமல் அடுத்துவரும் அட்டவணை மூலம் காணலாம். (தேடுதல் தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன்
வலைமச் சொற்கள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 100, புரட்டாசி 24, 2046 / அக்.11, 2015 தொடர்ச்சி) 4 ஏ.) protocol சீர் மரபு, செம்மை நடப்பு வழக்கு, செம்மை நடப்பொழுங்கு, செய்மை நடப்பொழுங்கு, நெறிமுறை, மரபு பேணுகை, மரபு முறை, மரபுச்சீர் முறைமை என வெவ்வேறு வகையாக இப்பொழுது குறித்து வருகின்றனர். மின் குழுமம் ஒன்றில் பேரா. செல்வகுமார், “நெறிமுறை எதிர் விதிமுறை/ எதிர் வரைமுறை – protocol, எது சரி? இரண்டுமே சரியாக இருக்கும். தொடர்பாடல் துறையில், கணிணித் துறையில் இரண்டிலுமே இரு சொற்களும்…
கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்
கணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும் ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில்(தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்), கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடும் நீண்டகால நோக்கிலும் அதன் முதன்மையை எதிர்காலத் தலைமுறையினர் உணர்ந்து செயல்படும் விதத்திலும் கல்லூரிகள் தோறும் கணித்தமிழ்ப் பேரவைகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றது. ஏட்டளவில் அறிவிப்பு நின்றுவிடாமல் செயல்பாட்டிற்கும் விரைந்து வந்து…
