திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி) பூ, காய், கனி கலைச்சொற்கள் மணமலி பூவீ மலர்போ து அலராம் துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம் நலம்சேர் குலைதாறு வல்வரியாகும் பலம்காய் கனியாம் பழம் என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94). அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும். திருவள்ளுவர், காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை…
வலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப் பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA இ.) ஆவளி – Sequence array, order, queue, row,…
இனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! : தாயுமானவர்
6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே ஆரமிர்தே என்கண்ணே அரிய வான பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப் பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக் காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும் விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே! பாரதிக்கு முன்னோடியாக எளிய நடையில் பாடல் எழுதிய தாயுமானவரின் இறைச்சுவை உணர்த்தும் பாடல் இது. தாயுமானவர் பாடல் தொகுப்பில் ஆகாரபுவனம் – சிதம்பர இரகசியம்…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 தொடர்ச்சி) 14 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை – 02 திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை மு.வரதராசனார் உரை மணக்குடவர் உரை ஞா. தேவநேயப் பாவாணர் அறிஞர் போப்பு மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்ப்பு கலைஞர் உரை உள்ளன. இவற்றுள் அறிஞர் போப்பு உரையில் மட்டும் எவ்வகைத் தேடுதல் பொறியும் இல்லை. பிறவற்றுள் தேடுதல் தலைப்பின் கீழ்ப் பக்கம் தேடலும் சொல் தேடலும் உள்ளன. உரைப்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளன. இசை வடிவில் குறள் பகுதி…
கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.
கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி. தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. என்றாலும் கருத்தரங்கத்தின் முதல் தலைப்பே, ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி என உள்ளது. நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும் . ஆதலின் அதனை நீக்க வேண்டும் எனக் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இது குறித்துக் கணித்தமிழ்ச்சங்கத்தலைவருக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம்…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 தொடர்ச்சி) 13 அட்டவணை – 01 [+ குறியீடு மட்டும் இருப்பின் சொல் தேடல் இருப்பதைக் குறிக்கும். பக்க எண் +என்றால் பக்க எண் தேடல் இருப்பதையும் பாடல் + அல்லது பா+ என்றால் பாடல் எண் தேடல் இருப்பதையும் அதிகாரம் + என்றால் அதிகார எண் தேடலையும் குறிக்கும். பா எண் என்பது பாடல் அல்லது நூற்பா எண்ணைக் குறிக்கும். அட்டவணைப் பத்தி எண் 2 இல் குறிப்பிடப்படும் சொல் என்பது முகப்புப்பக்க அட்டவணையில் அமையும்…
வலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2 வலைமம் – Network வலைமச் சொற்களில் சில வருமாறு : – தே.வா.வா.ப.வலைமம் நாசா என்பது National Aeronautics and Space Administration என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom) முனைப்பு மின் வலைமம் Active electric network அகப்பரப்பு வலைமம் / அ.ப.வ Local Area Network / LAN அகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN அகலக்கற்றைவலைமம்…
எல்லாம் தமிழ்நிலமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில. புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே. ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும். எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த…
வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.
வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள். தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில் தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
1 இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…
இனிதே இலக்கியம் 5 ‐ இறையே ஏற்பாயாக! : மாணிக்கவாசகர்
5 இறையே ஏற்பாயாக! மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே! மாணிக்கவாசகரால் எழுதப் பெற்ற உவட்டாமல் இனிக்கும் திருவாசகத்தில் வரும் பாடல் இது. பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம். “அருள் உடையவனே! நறுமணம்( விரைஆர்) நிறைந்த உன் திருவடிகள்பால்(கழற்கு), முழுமையாக…
