எனக்குப் பிடித்த திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன்
எனக்குப் பிடித்த திருக்குறள் எந்நாட்டவருக்கும் எக்காலத்தவருக்கும் ஏற்ற உலகப் பொது நு}லாம் திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை மட்டும் சுட்டிக் காட்டி நமக்குப் பிடிக்கும் என்று கூற இயலாது. இருப்பினும் நாம் அடிக்கடி நினைவு கூர்கின்ற திருக்குறள்கள் பல இருக்கும். அவ்வாறு நான் நினைவு கூர்கின்ற திருக்குறள்களில் முதன்மையான ஒன்றைக் கூற விழைகிறேன், திருவள்ளுவர் தம் தாய்நாடாகிய தமிழ்நாட்டையோ தாய் மொழியாகிய தமிழ்மொழியையோ எவ்விடத்தும் குறிப்பிடாமல் மக்கள் கூட்டத்திற்காகவே திருக்குறள் நூலைப் படைத்துள்ளார். இருப்பினும் உலக மக்கள் தோன்றிய தென்பகுதியில் வாழ்ந்தோரைக்…
அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்
அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே. ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர். “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை…
விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்
ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன் http://wintvindia.com/ இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி. வாய்ப்புள்ளவர்கள் காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் ‘துரத்தப்பட்டேன் என்னும்’ உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள்,…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 6 இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 6 9.] தண்டியலங்காரம் தேடுதல் பகுதி சென்றால் சொல் தேடல் பாடல் தேடல் ஆகியன உள்ளன. ஆனால், ஒவ்வொரு பக்க மேற்தலைப்பிலும் தேடுபொறி இடம் பெறவில்லை. இடப்பக்க அட்டவணையில் உள்ள உரைப்பகுதிக்குச் சென்று சொடுக்கினால்தான் உரையைப் படிக்க இயலும். அவ்வாறு சொடுக்காமல், மூலப்பகுதிகளில் உள்ள ‘உரை’ என்னும் இடத்தில் சொடுக்கினால் அப்பகுதியைக் காண இயலாது. உரைப் பகுதி செயல்படவில்லை என்ற எண்ணம் அல்லது உரை இல்லை என்ற எண்ணம் படிப்போருக்கு ஏற்படும்….
இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும் ! -இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும் ! தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு குறைந்து வருவதன் காரணம் என்ன? செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே கவலைப்பட்ட சூழல்கள் இன்றும் மாறாமல் இருப்பதுதான். பிறர் இந்தியா என்றும் திராவிட நாடு என்றும் சொல்லிய பொழுதே தமிழ்த்தேசியம் என்றும் மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசு என்றும் தொலைநோக்கில் சிந்தித்தவர் அவர். அவரது சிந்தனைகளில் சிலவற்றை அவரது நூற்றாண்டின் நிறைவில் நினைத்துப் பார்ப்போம். “தொல்காப்பியமும் திருக்குறளும் நமதிரு கண்கள். தமிழ் மக்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவற்றைப்…
தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) சங்கப்புலவர்கள் மரபில் அகவற்பாக்கள் பலவற்றை எழுதியுள்ள பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவகைகளிலும் பாக்கள் யாத்துச் செந்தமிழ்வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பை அளித்துள்ளார். விருத்தம், கண்ணி, கீர்த்தனை வடிவங்களில் இசைப்பாடல்களையும் எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளார். தமிழர் தலைவர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளதுடன், வாழ்த்துப் பாடல்கள், இரங்கற்பாக்கள், பொங்கல் வாழ்த்துக் கவிதைகள், திருமணநாள் வாழ்த்துகள், படையல் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் சி….
தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்
தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார் கல்வித்துறையில் இருந்து போராட்டப் பாதையில் நடைபோட்டுத் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் தமிழ்ப்புரட்சியாளர் பேராசிரியர் இலக்குவனார். இவ்வாரத்தில் பேராசிரியர் இலக்குவனாரின் நினைவுநாளான செப்.3 வருவதால் (கார்த்திகை 01, தி.பி.1940/17.11.1909 – ஆவணி 18, தி.பி.2004 / 03.09.1973) அவரை நினைவுகூரும் வகையில் சில படைப்புகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. இதழ்கள், மலர்கள், நூல்கள் முதலானவற்றில் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார்பற்றி வந்துள்ள கவிதைகள், கட்டுரைகள், கட்டுரைகளின் பகுதிகள் தரப்பட்டுள்ளன. வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் எனக் கவியோகி…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 3 ஙா.) குழுக்கள்: குழுக்களில் தமிழறிஞர்களுக்கு இடமில்லை அல்லது மிகச் சிறுபான்மையராக உள்ளனர். பன்னிருவர் உறுப்பினராக உள்ள பொதுக்குழுவிலும் ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள இயக்குநர் குழுமக்குழுவிலும் பதவி வழி உறுப்பினர்கள்தாம் உள்ளனர். தமிழறிஞர்கள் இல்லை. பதினொருவர் உறுப்பினராக உள்ள கல்விப் பேரவைக் குழுவில் இருவர் மட்டுமே தமிழறிஞர்கள். ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள கைப்பேசி வல்லுநர் குழுவில் ஒருவர்கூடத் தமிழறிஞர் இல்லை. பத்தொன்பதின்மர் உறுப்பினராக உள்ள அறிவுரை(ஆலோசனை) நிலைக் குழுவிலும் தொடக்கத்தில் தமிழறிஞர் இல்லை….
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 5 & 8.] யாப்பருங்கலம் & யாப்பருங்கலக்காரிகை இவற்றுள், பொருளடக்கம் பகுதி மேற்பகுதியில் தேடுதல் தலைப்பின் கீழ்ப், பக்கம் தேடல் பாடல் தேடல் சொல் தேடல் உள்ளன(பட உரு 29). இருப்பினும் உள் பக்கங்களில் ‘சொல் தேடல்’ தலைப்பு இல்லை. பக்க எண் தேடல் மட்டுமே உள்ளது(பட உரு 30). யாப்பருங்கலத்தில். பொருட்குறிப்பகராதி அரும்பதம் முதலியவற்றின் அகராதி சூத்திர முதற்குறிப்பு அகராதி இலக்கண மேற்கோள் முதற்குறிப்பு அகராதி இலக்கிய மேற்கோள் முதற்குறிப்பு அகராதி…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 92 ஆடி 31, 2046 / ஆக.16, 2015 தொடர்ச்சி) 2 தமிழ்ப்புலமையுள்ளவர்களே இயக்குநர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அரசிற்கு முறையீடு அளிக்கப்பட்டது. இதில், பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது : “இத்தகைய நோக்கங்களையும் குறிக்கோளையும் நிறைவேற்ற தமிழ்ப்புலமை உள்ளவர் அதனை வழி நடத்தலே ஏற்றது என அனைவரும் அறிவர். ஆனால் இயக்குநராக நியமிக்கப்பட விரும்பியவரின் தகுதி அடிப்படையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட பொழுது அப்போதைய அரசால் இயற்பியல் / பொறியியல் / தகவலியலில் முனைவர் பட்டம் பெற்றிருத்தலே அடிப்படைத் தகுதியாக…
‘சென்னை நாள்’ குறித்து வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் பங்கேற்கிறேன்.
ஆவணி 08, 2046 / ஆகத்து 25, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் ‘சென்னை நாள்’ குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
