பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகில் பண்பிலார் பெருகிவிட்டனர். ஒழுங்கின்மையும் ஊழலும் ஒழுக்கக்கேடும் பெருகிவிட்டன. எனினும் பண்பில் சிறந்தவர்கள் இன்றும் உள்ளனர்! இனியும் இருப்பர்! நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. என்னும் ஔவையார் மூதுரைக்கு(10) இணங்க இத்தகைய சிலரால்தான் பிறர் பயனுறுகின்றனர். இத்தகையோரை நாம் வாழ்வில் சந்தித்திருப்போம்! நானும் பலரைச் சந்தித்துள்ளேன். மறக்க முடியாத அவர்களுள் இருவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர விரும்புகின்றேன். 1980 ஆம் ஆண்டில் ஒருநாள்!…
**தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙூ**
(புரட்டாசி12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 7. இந்தியா என்றால்‘இந்தி’யாவா? இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற…
பிழைகளில்லாப் பிழை திருத்திகள் தேவை!
[புதுச்சேரியில் நடைபெற்ற உத்தமத்தின்13 ஆவது தமிழ் இணையமாநாட்டில் இடம் பெற்ற கட்டுரைகள் சில அடுத்த இதழில் வெளிவரும். இப்பொழுது இவ்விதழில் பிழையில்லாப் பிழைதிருத்திகள் தேவை என்னும் என் கட்டுரை இடம் பெறுகிறது. தனியாக வெளியிடுவதன் காரணம், இக்கட்டுரை கருத்தரங்க வாசிப்பிற்குத் தெரிவு செய்யப்படவில்லை என்பதால், கருத்தரங்கக் கட்டுரை வரிசையில் இடம் பெறுவது முறையல்ல என்பதே! மாண்புமிகு மதிப்பீட்டாளர்கள், 10க்கு 5 மதிப்பெண்ணிற்குக் குறைவாக வழங்கியதால் கட்டுரை இடம் பெறவில்லையாம்! நீங்களே சொல்லுங்கள்! இத்தகைய கட்டுரை வல்லுநர்களுக்கு வழிகாட்டியாகத் தேவையா இல்லையா என்று! எனினும் இக்கட்டுரை…
தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙீ
(ஆவணி 22, 2045/ செப்.7,2014 தொடர்ச்சி) 6. தமிழ்நாட்டிலுள்ள தற்போதைய மொழிச் சூழலை மாற்றுக: தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள மொழிச் சூழலை உணர வேண்டும். இங்கு, ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’, ‘இன்றும் தமிழ்! என்றும் தமிழ்!’, ‘அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!’ என்பன போன்ற முழக்கங்கள் வெற்று ஆரவாரமாக உள்ளன என்பதுதான் உண்மை. கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சட்ட மொழியாகவும் இறைமொழியாகவும் ஊடக மொழியாகவும் பணிவாய்ப்பு மொழியாகவும் பேச்சு மொழியாகவும் தமிழின் நிலை தேய்பிறையாகத்தான் உள்ளது. ஒரு சாராரின் உரைகள்…
தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙி : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி) 4. தலைமை வழிபாட்டுணர்வைப் போக்குக! தமிழக மக்களிடம் உள்ள தலைமை வழிபாட்டுணர்வே பல அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதனால்தான் திரைப்படப் பாத்திரங்களை ஏற்று நடிப்போரை வாழும் ஆன்றோர்களாகக் கருதிக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்கும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இந்த எண்ணப் போக்குக் கட்சித் தலைமையிடமும் ஏற்படுவதால். பொது மக்கள் நலனுக்காகக் கட்சி என்பதை மறந்து விட்டுத் தம் சொந்த மக்கள் நலனுக்காகக் கட்சி என்று தலைவர்கள் திகழ்ந்தாலும் அவர்களைக் கண்டிக்கும் போக்கு…
தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙா : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 15, 2045 / 24 ஆகத்து 31, 2014 இதழின் தொடர்ச்சி) 2. உலகத் தமிழ்ப் பரப்பு மையம் நிறுவிடுக! பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும் அனைவரும் பயிற்சி பெறும் வகையில் உலகத் தமிழ்ப் பரப்புக் கழகம் நிறுவ வேண்டும். அந்தந்த நாட்டு மொழிகளின் வாயிலாகத் தமிழ்க் கற்றுத் தரப்பட வேண்டும். வெவ்வேறு நிலைகளுக்கான தேர்வுத் திட்டங்களை வகுத்து, கால வேறுபாடின்றியும் அகவை வேறுபாடின்றியும் ஒருவர் ஒரு நிலையிலான தேர்வில் வெற்றி பெற்றார் என்றால் அடுத்த நிலையிலான தேர்விற்குத்…
குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள் 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 21. கள்ளி இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும். ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி’ வெண்பூதியார்: குறுந்தொகை:174:2 (நொடி – ஒலி) கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும். ‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு’ மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5 22. காஞ்சி காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள்…
தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!
புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…
குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்: 1/5 -இலக்குவனார்திருவள்ளுவன்
பழந்தமிழர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பது நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களில் இருந்தே நன்கு புலனாகின்றது. சங்கஇலக்கியங்களில் உள்ள சில வானியல் செய்திகளையும் அறிவியல் விதிகளையும் வேளாண்மைச் செய்திகளையும் திரும்பத்திரும்பக் கூறுகிறோமே தவிர, சங்கக்கடலில் புதைந்துள்ள அறிவியல் வளங்களை முழுமையாக இன்னும் வெளிக்கொணரவில்லை. அறிவியல்தமிழ்க் கருத்தரங்கங்கள் இத்தகைய முயற்சிகளுக்குத் துணைநிற்பது பாராட்டிற்குரியது. சங்கஇலக்கியங்களில் உயிரியல்செய்திகள் மிகுதியாக உள்ளன. பொதுவாகப் பயிரியல் விலங்கியல்களில் தோற்றம், வகை, வண்ணம், செயல்பாடுகள், பயன், ஒப்புமை அல்லது வேறுபாடு, வளரிடம், சூழ்நிலை, உறுப்புகள், இனப்பெருக்கமுறை, இடப்பெயர்ச்சி முதலானவைபற்றித்தான் படிக்கிறோம்….
அயல் எழுத்து அகற்று! – இலக்குவனார் திருவள்ளுவன்,
ஓர் இனம் என்றும் வாழ அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே, எழுத்தைக் காத்து, மொழியைக் காத்து, இனத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இனத்தைக் காக்கும் கடமைகளில் இன்றியமையாத முதன்மைக் கடமையாக நம் மொழிப் பயன்பாட்டில் அயல் எழுத்தை அகற்ற வேண்டும் என்பதை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு மொழி பேச்சிலும் எழுத்திலும் பயன்பாடின்றிப் போகும்போது அழிகின்றது….
தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ங : இலக்குவனார் திருவள்ளுவன்
‘தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று’உணர முடியாத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த மக்கள் இன்று தம் நிலை கெட்டுத் தறிகெட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வீழ்ந்து கிடக்கும் நிலை ஏன்? ‘தாய்த்திருநாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பாமல்’ ‘மானமொன்றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருப்பது’ஏன்? ‘சொந்த நாட்டிற் பரர்க் கடிமை செய்தே வாழ்ந்திடோம்-இனி-அஞ்சிடோம்’என்று உரைக்காமல், ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி’ ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி’ ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும் சிந்தை இரங்காமல்’வீழ்ந்து கிடப்பதேன்? ‘ஓராயிர…
வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்
சமற்கிருதத்திணிப்பிற்கும் இந்தித்திணிப்பிற்கும் எதிராகக் கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இவ்விரு மொழிகளையும் எதிர்க்கவில்லை; இவ்விருமொழிகளின் திணிப்புகளைத்தான் எதிர்க்கின்றோம் என்கின்றனர். ஆனால், நாம் அவ்வாறு கூறப்போவது இல்லை. விருப்பம் என்ற போர்வையில் இவை திணிக்கப்படுகின்றன; தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் தாய்மொழியாம் தமிழை அப்புறப்படுத்துகின்றன; பெரும்பான்மை என்ற தவறான புள்ளிவிவர அடிப்படையிலும், பொய்யான சிறப்புகள் அடிப்படையிலும் உலக மொழிகளின் தாய் மொழியான தமிழை அதன் தோற்றுவாயான தமிழகத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் அழித்து வருகின்றன. எனவே, விருப்ப மொழி என்ற போர்வையிலும் இவை தமிழ்நாட்டில்…
