130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – இலக்குவனார்திருவள்ளுவன்

(129/133. ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!-தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும்…

வெருளி நோய்கள் 131 -135 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 126 -130 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 131 -135 131. அகவை 60 வெருளி – Sexatannophobia அகவை 60 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 60 வெருளி. 50 அகவையாளருக்கு ஏற்படும் பேரச்சம் மேலும் பெருகும்.  ஒரு புறம் மணிவிழா குறித்த மகிழ்ச்சியும் உள்ளுக்குள் பொறுப்புகள் தொடர்பான கவலையும் கலந்த அகவை இது. பணி ஓய்வு முடிந்த பின்னரும் வீட்டு நிலையை உயர்த்த முடியவில்லை, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்க முடியவில்லை, சொந்த வீடுவாங்கிக் குடி போக முடியவில்லை, இரத்த…

129/133. ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!- இலக்குவனார்திருவள்ளுவன்

(128/133 அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ;  இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது” …

வெருளி நோய்கள் 126 -130 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 121 -125 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 126-130  126. அகராதி வெருளி – Lexicophobia  அகராதி குறித்த வரம்பற்ற பேரச்சம் அகராதி வெருளி. அகராதிகளில் சொற்பொருள் காண்பது எப்படி என்று தெரியாமல் கவலைப்படுபவர்களும் அதனால் அகராதி மீது வெறுப்பு கொள்பவர்களும் உள்ளனர். சிலர் அகராதிகளில் சொற்பொருள் தேடுகையில் பரபரப்படைந்து வெறுப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். புத்தக வெருளி உள்ளவர்களுக்கும் அகராதி வெருளி வர வாய்ப்புள்ளது. 00 127.) அகவை 20 வெருளி – Vigintannophobia அகவை 20 குறித்த வரம்பற்ற பேரச்சம்…

வெருளி நோய்கள் 121 -125 : இலக்குவனார் திருவள்ளுவன்

122.) ஃபிரெடி கெரூகெர் வெருளி – Nightmare ElmStreetphobiaகற்பனைப்பாத்திரமான ஃபிரெடி கெரூகெர்(Freddy Krueger) குறித்த அளவு கடந்த பேரச்சம் ஃபிரெடி கெரூகெர் வெருளி.எல்லம் தெருவில் அமுக்கிப் பிசாசு(A Nightmare on Elm Street) என்னும் படத் தொடரில் வரும் கற்பனைப்பாத்திர கொலைகாரனே ஃபிரெடி கெரூகெர்.00 123.) ஃபெரன் வாற்றர் வெருளி – Fernwaltersphobiaபுனைவுரு ஃபெரன் வாற்றர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபெரன் வாற்றர் வெருளி.ஆர்தர் படக்கதைகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வரும் ஒரு பாத்திரமே ஃபெரன் வாற்றர். இது மனித உருவேற்றப்பட்ட (anthropomorphic dog) நாய்;…

128/133 அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

(127/133. எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?  – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே. ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம்…

வெருளி நோய்கள் 116 -120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 106-110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 116 -120 116.) 911 ஆம் எண் வெருளி – Enniakosioihendecaphobia911 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 911 ஆம் எண் வெருளி.911 என்பதன் இறுதிக் கூட்டுத்தொகை 9+1+1= 11; 1+1= 2 என்பதால் எண் இரண்டின் மீது பேரச்சம் கொள்வோரும் எண் 9, எண் 1 ஆகிய இரண்டு எண்கள் வருவதால் இவ்விரண்டு எண்கள் மீது பேரச்சம் கொள்வோரும் 911 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.00117.) 99 ஆம் எண் வெருளி –…

127/133. எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்  விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக் கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை. ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்…

வெருளி நோய்கள் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 106 – 110 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 111 -115 111.) 800 ஆம் எண் வெருளி – Octicentumphobia800 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 800 ஆம் எண் வெருளி.எண் 800இல் உள்ள 8 + 0 +0 எண்களின் இறுதிக் கூட்டுத்தொகை 8. எனவே, எண் 8 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 800 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00112.) 87 ஆம் எண் வெருளி – Octokontaheptaphobia/Ogdokontaheptaphobia87 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்…

126. வால்மீகி இராமாயணம் கிரேக்கக் காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டது – இலக்குவனார் திருவள்ளுவன்

(125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 126 வால்மீகி இராமாயணம் மூல நூலன்று.  பாலி மொழியிலுள்ள தசரத சாதகக் கதையே சிறு மாற்றத்துடன் எழுதப்பட்டது என ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். பேரா. வீபர் ஓமரின் கிரேக்கக்காப்பியமான இலியத்தைத் தழுவி எழுதப்பட்டதாகக் கூறுகிறார்.  திராய் நாட்டு இளவரசனான பாரிசு என்பான், பார்ட்டாவின் அரசனான மெநிலாசின் மனைவியான எலனைக் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாசு தன் உடன்பிறப்பானனும் மைசினியாவின் அரசனும் ஆன அகமேனானின் உதவியுடன்   எலனை…

வெருளி நோய்கள் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 101-105 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 106-110 106.) 700 ஆம் எண் வெருளி- Septicentumphobia700 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 700 ஆம் எண் வெருளி.எண் 700 இல் உள்ள 7 + 0 + 0 எண்களின் கூட்டுத்தொகை 7. எனவே, எண் 7 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 70 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.00107.) 71 ஆம் எண் வெருளி – Hebdomekontahenophobia71 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 71 ஆம்…

125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(124.கருநாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரில் சமற்கிருதம் பேசுநர் உள்ளதாகக் கூறப்படும் பொய்யுரை) சனாதனம் பொய்யும் மெய்யும் 125 125. மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா? அடுத்து நாம் பார்க்க வேண்டியது மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக்கதையா என்பது குறித்து. வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் எட்டுவேடு ஆங்கின்சு (Edward Angnes) குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்குசு முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான்….