சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 986. Audit notes தணிக்கைக் குறிப்புகள் தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும். 987. Audit of accounts கணக்குகளின் தணிக்கை கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது. கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும். நிறுவனம் அல்லது…
வெருளி நோய்கள் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் தொடர்ச்சி) 101.) 62 ஆம் எண் வெருளி- Hexekontadyophobia62 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 62 ஆம் எண் வெருளி.எண் 62 என்பது வணிகம், பணம் தொடர்பான எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே, எதிர்மறை எண்ணத்தில் வணிகத்தில் தோல்வி, பண இழப்பு வரும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.கிரேக்கத்தில் hexḗkonta என்றால் 60, dyo என்றால் 2.00102.) 666 ஆம் எண் வெருளி – Hexakosioihexekontahexaphobia666 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த…
122./133 தி.மு.க. தோழமைத் தலைவர்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே! ++ 123. நிறைவான செய்தி என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
(121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லையே – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 122-123 123. நிறைவான செய்தி என்ன? பக்தியின் பெயரால் ஞானம் என்ற பெயரால் யோகம் என்ற பெயரால் தத்துவம் என்ற பெயரால் ஆன்மீகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னித் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் நான்கு வருணப்பாகுபாடுதான் என்கிறார் நாரா நாச்சியப்பன்(கீதை காட்டும் பாதை, பக். 118). சிறந்தன என்றும் நல்லன என்றும் கூறப்படும் நூல்களில் இருந்தாலும் பொய்யாகக் கூறப்படும் தகவல்களை நம்பக்கூடாது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள்…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? – இலக்குவனார் திருவள்ளுவன் இணைய உரை
திருக்குறள் திருவிழா✨ 📚 திருக்குறள் கற்போம், கற்பிப்போம்! -அவையின் 1550ஆவது கொண்டாட்ட விழாத் தொடர் ஆனி 29, 2056 முதல் ஆடி 06, 2056 முடிய 13.07.2025 முதல் – 22.07.2025 முடிய 🌟 தமிழ்ச் சான்றோர் பேரவை🌟 இருநூறாவது சிறப்பு நிகழ்வு 📅 நாள்: ஆனி 29, 2056 / 13.07.2025 ஞாயிறு 🕰 நேரம்: காலை 09:00 மணி 📍 இடம்: தமிழ்த்தேசம் (Clubhouse) ─────────────── 🎤 சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? எனும் தலைப்பில் ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்…
121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!
(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 121 “சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். என்று பேசியுள்ளார். மேலும், 1912-இல் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே” புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல்துறை: பொருண்மொழிக் காஞ்சிசொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை) “உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத்…
வெருளி நோய்கள் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 86-90 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 91-95 91.) 47 ஆம் எண் வெருளி – Tessarakontaheptaphobia47 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 47 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் tessarakonta = 40, hepta = 747 என்பது கூட்டுச் சதியுடன் தொடர்புடையது என்றும் எண் 47 குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.47 மட்டுமல்லாமல், 247, 14723, என்பனபோல் 47 எண் இடையில் வரும்எண்கள் குறித்தும் பேரச்சம் கொள்வர். எண் 47 தீயூழ் தருவது, சாபமிடப்பட்ட எண் என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சம்…
119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 தொடர்ச்சி) ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார். “மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத…
வெருளி நோய்கள் 86 – 90 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 81 – 85 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 86 – 90 86.) 40 ஆம் எண் வெருளி – Quadragintaphobia40 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 40 ஆம் எண் வெருளி.“நாற்பது வயதில் நாய்க் குணம்” என்பது பழமொழி. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘பாரத விலாசு’ என்னும் படத்தில் வாலி எழுதிய பாடல் இடம் பெற்றிருக்கும். “நாற்பது வயதில் நாய்க் குணம் – அதைநாம் தான் தெரிந்து நடக்க வேண்டும்” எனத் தொடங்கும் அப்பாடலில் நேரத்துக்கு ஒரு புத்தி…
117/ 133. ஏடுகளில் பிராமணர்களை உயர்த்திச் சொல்லியிருக்கலாம். அவற்றை மக்கள் பின்பற்றினார்களா?+118 வேதங்களைப் பின்பற்றலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 இராச சூய வேள்வியின்பொழுது அரசரின் வேலையாட்கள் பல வகை சுவையுள்ள இனிப்புகளையும் உணவுகளையும் இனிய பானங்களையும் பிராம்மணர்களுக்கு எக்காலமும் அளித்தனர். ஒவ்வொாரு நாளும் பிராமணர்கள் உண்டதற்கு அடையாளமான சங்கு ஊதப்பட்டது. அச்சங்கு அடிக்கடி ஊதப்பட்டதால் மக்கள் வியப்படைந்தனர். இராச சூய வேள்வியில் பிராமணர்களுக்குப் பரிமாறியது வேலையாட்கள் அல்லர். இரத்தினமாலைகளைச் சூடித் துலக்கப்பட்ட இரத்தினக் குண்டலங்களை அணிந்து அரசர்கள் ஆயிரக்கணக்கான பிரமாமணர்களுக்குப் பரிமாறினர். பல நாடுகளிலிருந்தும் வந்த பிராமணர்கள்…
வெருளி நோய்கள் 81 -85 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 76 -80 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 81 -85 81.) 3 ஆம் எண் வெருளி – Triskaphobia3 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 3ஆம் எண் வெருளி.கிரேக்கத்திலும் இலத்தீனிலும் tri என்பது 3 ஐக் குறிக்கும்.3 என்பது தீய விளைவை எச்சரிக்கும் வரையறுக்கப்பட்ட எண் என எண்ணுகின்றனர். எடுத்துக்காட்டாக, நெஞ்சகத்தில் 3 தாக்குதல் வரை வரும், நீரில் மூழ்குபவர் 3 முறை தண்ணீருக்கு மேலே வருவர் என்பனவற்றைக் குறிப்பிடலாம். எனவே, பாதிக்கப்படுவோர் 3 ஆம்நேர்வு வருவதைத் தவிர்ப்பர். இருப்பினும்…
116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 116 தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே! மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம்,…
