வெகுளி கணமேயும் காத்தல் அரிது – யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்
வெகுளி கணமேயும் காத்தல் அரிது – யாருக்கு? – இலக்குவனார் திருவள்ளுவன் 0000000000000000000000000000000000000000000000000000000000000000 மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 0000000000000000000000000000000000000000000000000000000000000000 மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாட்டின் மையப்பொருள் உலக அமைதியும் நல்லிணக்கமும் என உள்ளது. இவ்விலக்கை எட்டுவதற்கான அடிப்படையாக இருப்பது சினம் தவிர்த்தல் என்பதாகும். எனவே, சினத்துடன் தொடர்புடைய ஒரு தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலராவர். சிற்சில இடங்களில் அல்லது பல இடங்களில் திருவள்ளுவர் கருத்திற்கு மாறான உரையை…
நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி! வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு நிலவார் நிலமிசை மேல். (நாலடியார் பாடல் 22) பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். சொற்பொருள்: [வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்…
திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக! தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம். கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே! ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா? புது தில்லியில் அதே…
நாலடி இன்பம்- 13. வாழ்தலின் ஊதியம்! இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி தமிழ் அகராதிகளில் பாராட்டுதலுக்குரிய முதன்மை அகராதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. 12 மடலங்களாகவும் இவை 31 பிரிவுகளாகவும் வந்துள்ள மிகுதியான சொல் வளம் உடைய அகராதியாகும். இது தமிழின் சொல்வளத்தை உலகிற்கு உணர்த்தும் சிறப்பான அகராதியாகத் திகழ்கிறது.. இவ்வகராதி மேலும் சிறப்பாக அமைய, நிறைகாணும் முயற்சியில் சில கருத்துகளைக் காண்போம். சமசுகிருதச் சொல், மயக்கமாக உள்ளவற்றை அவை தமிழ்ச்சொற்களே என்பதை இப்பேரகரமுதலி விளக்குகிறது. எனினும் அயற்சொற் மடலத்தில் இடம் பெற்றுள்ள சொற்களுள் நூற்றுகணக்கான தமிழ்ச்சொற்களும் இடம் பெறுகின்றன. இதேபோல் …
நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்! பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18) பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை…
நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் – 11: வாழ்க்கைப் பயணத்தின் கட்டுச்சோறு! ஆட்பார்த் துழலு மருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய்ம்மின் – பீள் பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளங் கடைப்பிடித்த னன்று. (நாலடியார், பாடல் 20) பொருள்: தான் கொண்டு போகவேண்டிய உயிரைத் தேடித் தேடி அலைந்து கொண்டுபோகும் அருளற்றவன் யமன். கருவில் இருந்தாலும் அல்லது பிறந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அழ அக்குழந்தையின் உயிரை எடுத்துச் செல்லும் இரக்கம் அற்றவன் அவன். அவன் வஞ்சகத்தைப் புரிந்துகொண்டு, வழிப்பயணத்தில் உதவும் கட்டுச்சோறு போன்ற…
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்!- 10. காற்றில் காய்களும் விழும்! மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா – தறஞ்செய்ம்மின் முற்றி யிருந்த கனியொழியத் தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு. (நாலடியார், பாடல் 19) பொருள்: கொடுங்காற்றால் கனி மட்டும் அல்ல, கனியாத காய்களும் வீழ்வதுண்டு. எனவே, இளமையாகத்தான் உள்ளோம், பின்னர் நல்வினை புரியலாம் என எண்ணாது உள்ளதை மறைக்காது அறம் செய்க! சொல் விளக்கம்: முற்றி=முதிர்ந்து; இருந்த= இருந்த; கனி=பழங்கள்; ஒழிய= மட்டுமல்லாமல்; தீவளியால்= வலிய காற்றால்; நல்= நல்ல; காய்=காய்கள்; உதிர்தலும்=விழுதலும்;…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 48 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 414) அறிவு நூல்களைக் கற்கும் வாய்ப்பை இழந்தாலும் அவ்வாறு கற்றவர்களிடம் கேட்டறிக! இது தளர்ச்சியின் பொழுது ஊற்றுநீர்போல் பெருகித் துணை நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். தயான்னே சில்லிங்கு(Dianne Schilling) முதலான கல்வியாளர்கள்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 47 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 413) செவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர். உணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 46, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 46 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 412) செவிக்கு உணவாகிய கேள்வியறிவு இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு அளிக்கப்படும் என்கிறார் திருவள்ளுவர். உணவு அளவு, உணவின் தன்மை ஆகியவற்றிற்கும் காம உணர்விற்கும் தொடர்பிருப்பதாகப் பாலியற் கல்வியாளர் முனைவர் மாரியன்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 45, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 45 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 411) செல்வங்களுள் சிறப்புடையது செவிச்செல்வம். அது எல்லாச் செல்வங்களிலும் தலைமையானது என்கிறார் திருவள்ளுவர். கல்வியின் சிறப்பையும் கல்லாமையின் இழிவையும் கூறிய திருவள்ளுவர் அடுத்துக் கேள்வியை வைத்துள்ளார். கேள்வி என்றால் வினா என்று…
