இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19 தொடர்ச்சி) இக்கவிதையின் பயன் எளியோர்க்கு உதவ வேண்டும், ஏழைக்குக் கல்வி அறிவிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வை அகற்ற வேண்டும். பொய்மையை மாய்க்க வேண்டும். உண்மையை நிலைநிறுத்த வேண்டும். உயர்கணம் கொள்ளல் வேண்டும். ஏழ்மைக்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். இனிய சொல் பேச வேண்டும். இன்னாச் சொல் எள்ளல் வேண்டும். புகழ்மிகு செயல்கள் புரிதல் வேண்டும். புவியில் அனைவரும் போற்ற வாழ வேண்டும். நன்றே செய்தல் வேண்டும். அதுவும் இன்றே செய்தல் வேண்டும் எனும் கொள்கைகளே…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து தழீஇக் கொண்டு கெழீஇய காதல் இன்பம் துய்த்தபின்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி) 18 தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார். இதனை, ‘ தேர்தல் என்றால்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி) துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: தொடர்ச்சி) 16 மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும் பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி இறைவனே நாடிவந்து, காட்சி தந்து இன்பம் நல்கி இன்னருள் வழங்குகின்ற செய்திகளைக் கூறும் ஒப்பற்ற நூலாகும். மாணவர் ஆற்றுப்படையோ, வறுமை காரணமாக இளமையிற் கல்விச்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி) அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார்
(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு, “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்…
பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்! – சி.இலக்குவனார்
பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது. நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும். அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக்கியம் இயற்றுதல் இயலும். கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்களே செம்மையுற இயற்றுதல் இயலும். தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய்…
தெய்வம் தமிழ்ச்சொல்லே! –
சிலர் தெய்வம் வேறு; கடவுள் வேறு என்பர். சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும். உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே. இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான். ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல் ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்….
தமிழ் ஆரியத்திற்கும் தாயே! – பேரா.சி.இலக்குவனார்
இந்திய மொழிகளின் தாயாம் தமிழ் ஆரியத்திற்கும் தாயே! இவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார்…
என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு வியப்பிறந்தது – பேரா.சி.இலக்குவனார்
என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது. ” முதல் எனப்படுவது நிலம் பொழுதும் இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே ” என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக இருப்பன இவையே யன்றோ ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும் உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது. பேரா.சி.இலக்குவனார்:…
