பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463) இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…
திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல் தகுதிமிகு தலைமகளது அழகு, தலைமகனது மனத்தை வருத்துதல் (01-10 தலைமகன் சொல்லியவை) அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு. தெய்வ மகளோ….? மயிலோ….? மண்மகளோ….? என்மனம் மயங்கும். நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு தானைக்கொண்(டு)…
ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! – சி.இலக்குவனார்
ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது! தம் கட்சிக்குள்ளேயும் தம்மை வீழ்த்தும் பகைவர் நண்பர்போல் நடித்துக்கொண்டிருப்பர். அவர்களையும் அறிந்து களைதல் வேண்டும். உண்மை நண்பர்களை அறிந்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்புவித்தல் வேண்டும். பதவியை அடைய நண்பர்போல் வருவர்; பதவியில்லையேல் பகைவராய் மாறுவர். ஆதலின், பதவி பெறினும் பெறாவிடினும் தம்மைச் சார்ந்து நிற்போரை அறிந்து அவர் உவப்பன செய்தல் வேண்டும். பகைவரையும் நண்பராக்கும் பண்பும் பெறுதல் வேண்டும். நண்பரைப் பகைவராக்கும் செயல்களில் நாட்டம் கொள்ளுதல் கூடாது. நாட்டை அடிமைப்படுத்த முயலும் பிற நாட்டாரை வெல்லும் வகையோ,…
மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை: சி.இலக்குவனார்
மறுமை – மீண்டும் பதவியில் அமரும் தன்மை மனநலத்தி னாகு மறுமைமற் றஃது மினநலத்தி னேமாப் புடைத்து (குறள் 459) மறுமை -மீண்டும் அப்பதவியில் அமரும் தன்மை, மன நலத்தின் ஆகும்-உள்ளத்தின் சிறப்பால் உண்டாகும், மற்று அஃதும்-மீண்டும் அங்ஙனம் ஆவதும், இனநலத்தின்-சூழ்ந்திருக்கும் இனத்தின் சிறப்பால், ஏமாப்பு உடைத்து-வலிமை உடையது ஆகும். அரசியல் பதவிகளில் மீண்டும் மீண்டும் அமர்ந்து தொண்டாற்றும் நிலைமை எல்லோர்க்கும் கிட்டுவது அன்று. ஒரு முறை ஆண்ட பின்னர் மறுமுறை மக்களால் அமர்த்தப்பட வேண்டுமாயின், சிறந்த நற்பண்பு…