தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – 2 : தமிழரசி

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! தொடர்ச்சி கதைப்பாத்திரங்கள்:  சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு தளர் நடை நடந்து வந்த நாரதருடன் அவர்கள் உரையாடல் தொடர்கிறது]. முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து – அறிவு…

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! – தமிழரசி

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும் இறைவர்களின் உறுதிப்பாடும்! கதைப்பாத்திரங்கள்: சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர் [திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு நாரதர் தளர் நடை நடந்து வருகிறார்] நாரதர்: சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா! முருகன்: நாரதர் வருகிறார் பின்னே! தாரகம் வருகிறது முன்னே! ஏதோ சிறப்பு இருக்க வேண்டும். பார்வதி: நாரதர் பூலோகம் சென்றிருப்பதாக வாணி கூறினாள். முருகன்: பூலோகமா? அங்கே நடக்கும் கலகம் போதாதென்று நாரதர் கலகமும் வேண்டுமா? சிவன்: [சிரித்து] முருகா!…

‘நம் குடும்பம்’ மாத இதழ் அறிமுகம்

நேசமிகு தோழமையே! வணக்கம். ‘நம் குடும்பம்’ மாத இதழை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ‘நம் குடும்பம் ‘ தமிழகத்திலிருந்து வெளிவரும் இணையருக்கான, ஒரே மாத இதழ். ‘வாசிப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கு(ம்)’ என்பதே இதன் சங்கநாதம். முற்றிலும் குடும்பங்களின் நல்வாழ்வை மையப்படுத்திய படைப்பாக்கங்கள் மட்டுமே இவ்விதழில் இடம்பெறும். அரசியல், சமயம், ஆபாசம் இம்மூன்றையும் தவிர்த்த ஒட்டுமொத்த குடும்பத்திற்குமானது ‘நம் குடும்பம்’. ‘நம் குடும்பம்’ மாத இதழ் இதுவரை 21 மாதங்கள் வெளிவந்திருக்கின்றது. குடும்ப உறவுகளின்அடிப்படையையும், இன்றியாமையாமையும் அன்பிற்கும் பண்பிற்கும் பெயர்பெற்ற நம் மண்ணின் இளையதலைமுறைக்குப் புரிய வைப்பதற்கான தொடர்…

“எங்கள் தேசம்” இதழின் வெளியீட்டு விழா

மாசி 29, 2046 / 13-03-15  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா,  மாசி 29, 2046 / 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக்குத் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராசு வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.

“தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு – செந்தமிழினி பிரபாகரன்

ஆனி 6, 2045 /சூன் 20, 2014 அன்று கனடா மண்ணில் வெளிவரும் வண்ண அட்டை இதழான “தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் குழுமிய ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்த இந்த நிகழ்வுக்கு இங்குள்ள தனியார் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பிறர் போலன்றி அழகு தமிழ்ப் பெயராக “தமிழ் மழை” எனப் பெயர் வைத்தமைக்கும் நிகழ்வை முற்று முழுதாக தமிழ் மணம் கமழும் வண்ணம் சிறப்புற வடிவமைத்தமைக்கும் இதழாசிரியர் சிவாவுக்கும் நிருவாக ஆசிரியர் மோகனுக்கும்…