சமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

சமூகப் புரட்சியாளர் பெரியார் பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா. சபையின் உறுப்பாகிய ‘யுனெசுகோ’ நிறுவனம் ‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிசு; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்குகள்,  மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் எதிர்வாதங்களால் ஆராய்ந்து பார்த்துத் தன் அறிவுக்குச்…

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா!    ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர்  அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார்.  சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக்…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9   “இன்று தமிழ்நாட்டில் ’சமசுகிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, எதிலாவது, ஒற்றுமை – பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.   தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமசுகிருதம் பயன்படுகிறதா? ” என்று கேட்டுத் தமிழ்நாட்டவரிடம் ஓர் எண்ணத்…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9   தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும்  பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன.   இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம்.   “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 – பெங்களூரு முத்துச்செல்வன்

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்  1/9   சாதிப்பிரிவு கூடாது என்பதுதான் நம் எண்ணம். இருப்பினும் பிராமணீயம் செல்வாக்குடன் திகழ்ந்து சமற்கிருதத்திணிப்பில் தொடர்ந்து ஈடுபடுகையில் நாம் அமைதி காத்துப் பயனில்லை. இந்த நேரத்தில் ஆரியச் சூழ்ச்சி குறித்துப் பெரியார் எச்சரித்த சிலவும் தொடர்பான சில கருத்துகளும் நினைவிற்கு வருகின்றன. அவற்றை இங்கே பகிர்கின்றேன்.    தந்தை பெரியார், ‘சமசுகிருதம் ஏன்‘ என்னும் தலைப்பில்(15–02–1960) விடுதலையில் பின்வருமாறு எச்சரித்துள்ளார்.   “இன்று இந்த நாட்டில் நடைபெறும் ஆட்சியானது, ‘சனநாயகக் குடியரசு’ என்னும் போலிப்…

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்

இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!  திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.  அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி – கலைஞர்

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி “இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடிமுழக்கம் கேட்பதுபோல் – திணறிப் போனார் பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்! பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார். ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் சாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே திரும்பும் வாள்கள் !!” -கலைஞர் மு.கருணாநிதி (1945)

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்   பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை…