திருக்குறள் கல்வெட்டு குறித்த கலந்தாய்வு, சென்னை

கார்த்திகை 24, 2048 / 10.12.2017 காலை 10.00 முதல் மாலை  5.00 மணி வரை திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் நீலாங்கரை, சென்னை 600 115 திருக்குறள் கல்வெட்டு குறித்த கலந்தாய்வு   [பதிப்பிடம்: மலையப்பாளைய மலை,  ஈரோடு] குறள்மலைச்சங்கம், வளசரவாக்கம், சென்னை 600 087

பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு – நா. கணேசன்

பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு     பகழிக்கூத்தர் அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்தவர். கவி காளமேகம்போலச்  சைவம் பாடிய வைணவர். திருச்செந்தூர் முருகன் சோதிக்க திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என அழகான பனுவல் பாடிய பெரும்புலவர். சீவகசிந்தாமணிச் சுருக்கம் என்னும் நூலும் பாடியவர். அதனைச் சருக்கரை இராமசாமிப் புலவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்தார். (குறைப்படி). அதில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் பகழிக்கூத்தர் பெயர்க்காரணமும், அவரது ஊரும் விளங்குகிறது. திண்டிம கவி என்று அருணகிரிநாதர் அழைக்கப்பட்டதும் பகழிக்கூத்தர் பாடலால் தெரிகிறது. இவற்றை மு. இராகவையங்கார் பல…

குறள்மலைச்சங்கத்தின் முதல் குறள்கல்வெட்டு திறப்பு, மலையப்பாளையம்

வணக்கம். பேரன்புடையீர்! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன்  கல்வெட்டுகளாக்க வேண்டும் என்று  குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக முதல் குறள் மலைமீது கல்வெட்டாகப் பொறிக்கப்படும் பணிகள் நிறைவடைந்து,  ஆனி 19, 2047 /  2016 சூலை 3 ஆம்  நாளன்று திறப்பு விழா நடைபெற உள்ளது.  குருமகாசந்நிதானங்களின் அருளாசியுடன், மதிப்புமிகு நீதியரசர். ஆர்.மகாதேவன் அவர்களும், உயர்திரு விஞ்ஞானி. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், உயர்திரு.மதிவாணன் அவர்களும், திரு வி.சி.சந்தோசம் அவர்களும் முதல் குறளைத்திறந்து வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்கள். அதுசமயம்…

12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை

தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள்  தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர்  தொடர்பு க்கு:   (1)  ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com   (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி  முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com   அன்புடன்   நூ த (உ)லோ சு  மயிலை 

கல்வெட்டிலேயே தொடங்கிய சமற்கிருதத் திணிப்பு – தமிழ நம்பி

  கல்வெட்டிலேயே தொடங்கியசமற்கிருதத் திணிப்பு!    கழக(சங்க)க் காலத்தில் தமிழ்நாட்டில் அரசர், போர்மறவர் முதலிய செல்வர் மனைகளில் மகன் பிறந்தால் அவனை முதன்முதலாகத் தந்தை சென்று காண்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி! அதனைத் “தவமகன் முகம் காண்டல்” என்பர். தகடூரை ஆண்ட அதியமானுக்கு மகன் பிறந்த போது நடந்த இச்சிறப்பை ஒளவையார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்.100) கூறுவதை அறியலாம்.   இந்த வழக்கம் கி.பி.14ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதைத் திருமயம் பகுதியிலுள்ள நெக்கோணம் பெருமாள் கோயில் கல்வெட்டு (பி.எசு.672) தெரிவிக்கிறது. இங்கிருந்து நாடுகாவல்…

தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள்

  தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பவை கல்வெட்டுகளே. பண்டைய தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுகளே துணை புரிகின்றன. வரலாற்றின் பல்வேறு காலக் கட்டங்களின் நிலையைக் காட்டும் காலத்தின் கண்ணாடிகளாக இவை துணை புரிகின்றன. ஒரு வீட்டிற்கு எப்படி வாசல்படி முதன்மையோ அது போல மலைப்பகுதி ஊர்களில் தலைவாசல் கல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மலைப் பகுதி ஊரிலும் நான்கு தலைவாசல் கல்கள் உள்ளன. ஒன்று நுழைவு வாயிலாகவும் மற்றொன்று இறப்பு போன்ற நிகழ்வுகள் நடந்தால்…

இந்த வார வல்லமையாளர் – திரு. பாலமுருகன்

 வல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழ் சித்திரை 2043 / ஏப்பிரல் 2012 இலிருந்து கிழமைதோறும்-அக்கிழமையில் சிறந்த ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து – வல்லமையாளர் விருது வழங்கி வருகின்றது. ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் யாராயினும் அடையாளங் காணப்பட்டு வல்லமையாளர் விருதால் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வார (ஆவணி 23, 2045 / செப்.8,2014) வல்லமையாளர் விருது அகரமுதல படைப்பாளர்களில் ஒருவரும் திருவண்ணாமலைத் துணை வட்டாட்சியருமான திரு ச.பாலமுருகனுக்கு வழங்கப்பெற்றுள்ளது. விருதாளர் பாலமுருகனுக்கு வாழ்த்துகளையும் விருது வழங்கும்…

‘கல்லும் வெல்லும்’ – இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா

     திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு  நகரில் ‘கல்லும் வெல்லும்’ என்ற இலக்கிய மாத இதழ் தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முதல் படியைக் கவிஞர் கி.சாந்தகுமார் வெளியிட்டார்; தொழில் அதிபர் மை.வீரர் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.   இவ்விழாவில் பேசிய கவிஞர் கி.சாந்தகுமர் மக்கள்நாயகத்தின் நான்காவது தூண்களில் ஒன்று இதழ்த்துறை. இதழ்த் துறையில் நாளிதழ், இலக்கியம், குற்றம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ் வளர்ச்சிக்குச் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது பரம்பரை,. பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஒன்றான கல்வெட்டு தொடர்பான நூல்கள்…