தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் [ங]  1.முன்னுரை  – முற்பகுதி   நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும்  உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….

உலகப் பொதுமொழி தமிழே! – கா.அப்பாத்துரை

உலகப் பொதுமொழியாய் முன்பு இருந்ததும் நாளை இருக்கப் போவதும் தமிழே     பண்டு முதிரா நாகரிகமுடைய மிக முற்பட்ட காலத்தில் தமிழ் உலகப் பொதுமொழியாயிருத்தல் வேண்டுமென்று அறிஞர் பலர் உய்த்துக் காண்கின்றனர். அது எப்படியாயினும், வருங்கால உலகப் பொதுமொழியாவதற்குரிய பண்பு அதற்குக் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை. வேறு எம்மொழிக்கும் ஆங்கிலம், சீனம், இந்துத்தானி ஆகியவற்றுக்கு இருக்கும் உயர்ப்பண்பைவிட, அதற்குரிய உயர்ப்பண்பின் தகுதி பெரிதாகும். உயர்தனிச் செம்மொழிகள் கடந்த, தாய்மொழிகள் கடந்த இவ்வுயிர்ப்பண்புக்குக் காரணமென்ன? அதுவே தமிழ் வளர்த்துக் கொண்டுள்ள தனித்தமிழ் பண்பு…

முச்சங்கச் செய்திகளும் உண்மையே! – கா.அப்பாத்துரை

  தமிழில் முதல் இடை, கடை, என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி பஃறுளி நாடுகளிலமைந்த தென்மதுரையிலும், இடையது அதே இடத்தில் கவாடபுரத்திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வு பெற்றிருந்தன என்பதும் நெடுநாளைய தமிழ்நூல் மரபு. ஒரு சாய்பின்றி ஆய்பவர்கட்குச் சங்ககால வாழ்வின் தன்மை மலைமேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில் இயற்றப்பட்ட கடைச் சங்க இலக்கியமே பன்னூறாக, பல்நாடு, பல்வகுப்பு, பல்தொழில் ஆன பல்வகைப்பட்ட புலவர்களை உடையது. தொகை மிகுந்ததனால் தன்மை குறையவும் இல்லை. சங்கச் செய்யுள்களில்…