சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே!   சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாத வர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென அறிவிக்கும்.   சாதி இங்குச் செல்வாக்குப் பெற நுழைந்த காலத்திலேயே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அதனைக் கடிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில்கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை. திருவள்ளுவர் காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் வேர் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதனாலேயே வாழ்வியல் அறம் உரைத்த வள்ளுவர் பெருமான் “பிறப்பொக்கும்…