4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5  தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்குஇன்னார் இனியாரும் உண்டோ அம்மா? மாற்றம் உலகின் இயற்கையென–இங்குமாந்தரும் கண்டு தெளிந்திடவோ,போற்றும் இறைவன் இம் மாமதியம்–விண்ணில்பூத்து கிலவ விதித்தனனே! என்ற பாடல்களில் சிறந்த கருத்தும், கூனக் கிழவி நிலவினிலே–ராட்டில்கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே–காந்திமாமதி யோங்கி வளருதம்மா! என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம். காட்சி இன்பம் ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள்….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் காரணங்களாக இருக்கலாம்.   கடி என்னும் கிளவி தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு பொருள்களை உணர்த்தும் நிலையை அடைந்துள்ளது.             கடியென் கிளவி            …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 476-480

(தமிழ்ச்சொல்லாக்கம்: 472-475 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 476-480 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 476. பிரமாணம் – மேற்கோள் பிரிந்திருக்க வொண்ணாத இரு பொருள்களில் ஒன்றை உண்மையான நெறியில் ஆராய்ந்தறியப் புகுந்த இடத்தில் மற்றதையும் ஒருவாற்றேனும் அறியாதிருக்க…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–10

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 9 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 10 நெய்தல்‌ நிலம்‌ தமிழ்‌ நாடு. நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில்‌ “சோழ நாட்டுக்‌ கடற்கரை, சோழ மண்டலக்கரை என  வழங்கிற்று. அஃது ஐரோப்பியர்‌ நாவில்‌ சிதைந்து கோரமண்டல்‌ கரையாயிற்று. பாண்டி நாட்டுக்‌ கடலில்‌ நினைப்பிற்‌ கெட்டாத. நெடுங்‌ காலமாக நல்‌ முத்து விளைந்தமையால்‌ . அக்‌ கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால்‌ ‘குறிக்கப்பட்டது.100 சேர நாட்டுக்‌ கடற்கரை, மேல்‌ கரை என்று பெயர்‌ பெற்றது. கரை “கடற்கரையில்‌…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 74

(குறிஞ்சி மலர்  73 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி “அம்மா! இன்னும் சிறிது காலத்திற்கு மனத்தினால் வாழ்ந்து கொண்டிருக்க மட்டும் எங்களை அனுமதியுங்கள். உடலால் வாழும் வாழ்க்கையைப் பற்றி நான் இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. உடம்பைப் பற்றித் தொடர்கிற வாழ்க்கை ஒரு பெரிய பொய் மயக்கமாகவே இந்த விநாடி வரை எனக்குத் தோன்றுகிறது. காக்கை கூட்டில் இடப்பட்ட குயில் முட்டையைத் தன்னுடையது, தனக்கேயுரியது என்று தவறாக மயங்கிப் பேணி வளர்க்கும் பேதைக் காக்கையைப் போல் உடம்பைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வாழத் தயங்குகிறேன் நான். குயில்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.21 -1.7.25

(இராவண காவியம்: 1.7.16 -1.7.20. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷெ வேறு வண்ணம்     21.     யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடு மாடரங்கும்                போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொ தியான தமிழ்நூலும்   வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட பாழுங் கடலே. நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ.           22.     வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச்   சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்துவரும்               …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 472-475

(தமிழ்ச்சொல்லாக்கம்: 465-471 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 472-475 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 472. அபிப்பிராயம் – கருத்துகள் இனி, நான் நேரில் ஒருவாறு தெரிந்து வைத்திருந்த காரியங்களில் அநுமான வகையும் சேர்த்து முற்றுற எழுதி வெளியிட்டிருக்கிற…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 11

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 10 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 6என் தந்தையார் குருகுலவாசம் (தொடர்ச்சி) “இவனுக்குக் கலியாண வயசாகி விட்டது. நல்ல இடத்திலே கலியாணம் ஆகவேண்டும். உங்களுடைய சம்பந்தத்தால் இவனுக்கு நல்ல யோக்கியதை உண்டாகியிருக்கிறது. ஆனாலும் இவனுடைய கலியாணச் செலவுக்கு வேண்டிய பணம் எங்களிடம் இல்லை. நாங்கள் இவனைப் பெற்றதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாப் பொறுப்பையும் நீங்களே வகித்துக்கொண்டீர்கள். உங்களுடைய கிருபையால் இவனுக்குக் கலியாணமாக வேண்டும்.” “அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? ஈசுவர கிருபை எல்லாவற்றையும் நடத்தும்” என்றார் கிருட்டிணையர். இந்த வார்த்தை…

தமிழ்நாடும் மொழியும் 9 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 8 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி கரிகாலனைப் பற்றி உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் நூல் பாடியுள்ளார். பொருநராற்றுப்படையும் இவனை நன்கு புகழ்ந்து பேசுகின்றது. இவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது. இத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் பல வணிகத்தின் பொருட்டு வந்துசென்றன. வெளிநாட்டு வணிகர் பலர் இவ்வூரில் வந்து குடியேறினர். வெளிநாடுகளிலிருந்து பல பொருள்கள் வந்து இந்நகரில் குவிந்தன. தமிழ்நாட்டுப் பொருள்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் இப்பெருநகர் சோழர் தம் தலை நகராகவும் விளங்கியது….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 465-471

(தமிழ்ச்சொல்லாக்கம்: 461-464 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 465- 471 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 465. உயர்தர நியாய மன்று – சில்லாக் கோர்ட்(டு) 466. Appeal – அப்பில் மேல்வழக்கு 467. Preview Council –…

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5  தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 குழந்தைத் தோழர்கள் குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது, குத்திச் சண்டை செய்யவோ?குப்பை கிண்டி மேயவோ?கத்திபோல் உன் கால் விரல்கடவுள் தந்து விட்டனர்! காலை கூவி எங்களைக்கட்டில் விட்டெ ழுப்புவாய்,வேலை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள்  மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன  அல்ல;  மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும்.   இம் மாற்றங்கள் மொழி வளர்ச்சியில் இயல்பாக நிகழக் கூடியன  என்பதைத் தமிழ்மொழி இலக்கண ஆசிரியர்கள் நன்கு அறிந்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வகை மாற்றங்களை…