நாளும் வளர்வாய் நல்ல படி! – கு.ந.தங்கராசு

அம்மா, அப்பா என்ற படி, அங்கும் இங்கும் நடந்த படி, அழகுத் தமிழில் பாட்டுப் படி, அம்மா சொல்லித் தந்த படி! ஆசை முத்தம் கொடுத்த படி, அப்பா மகிழ்வு கொள்ளும் படி, அன்னைத் தமிழில் பாட்டுப் படி, அப்பா கற்றுக் கொடுத்த படி! அண்ணன் அக்கா சிரிக்கும் படி, அத்தை மாமா மகிழும் படி, மழலைத் தமிழில் பாட்டுப் படி, மனம்போல் குறும்பு செய்த படி! நடைவண்டி பிடித்து நடந்த படி, ஙஞண நமன என்ற படி, நாளும் வளர்வாய் நல்ல படி!…

‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் – கதிர் நிலவன்

‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் நினைவு நாள் ஆவணி 18, 2004/ செப். 3, 1973   1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின்பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித்திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள்தமிழாசிரியர்களே! மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழகமெங்கும்மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் வைத்த முதல் ‘தீ’ தான் காங்கிரசு ஆட்சிக்குக் கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார்இந்தி எதிர்ப்புப் போருக்கு…

உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்

    வானில் இருந்து இறங்கிய மழையோடு வந்து வீழ்ந்தவன் நான் அல்லன் பெற்றவர்கள் ஈன்ற பின்னர் தெருவெளி அங்காடியில் விற்ற நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய அறிவைப் பிறருக்கு வழங்குவதே என் பணி! “பிறமொழிச் சொல் அகராதி” என்ற நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து: ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது தமிழில் அரைப் பாவாடையே..!. இந்தியில் “சோடி” என்பது தமிழில் ‘இணை’ என்பதையே! பாரசீக மொழியில் “லுங்கி” என்பது தமிழில் மூட்டுவேட்டியே! உருது மொழியில் “தமாசு” என்பது தமிழில் வேடிக்கையே! அரபி மொழியில் “சாமீன்”…

தமிழர்களின் கல்லறைத் தோட்டம்

வாழ விடுதலை கேட்டோம். துரோகிகளால் இனப்படுகொலை செய்யப்பட்டோம். அன்றோ தமிழர்களின் தேசம்.. இன்றோ தமிழர்களின் கல்லறைத் தோட்டம். நன்றி :  பாண்டி சீமான் முகநூல்  

மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து

நஞ்சுண்டு மடிந்த முதல் “மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து நினைவு நாள் 4.2.1965   ஆதிக்க இந்தி மொழிக்கு எதிராக சனவரி 25 இல் மாணவர்கள் பற்ற வைத்த சின்னத் தீப்பொறி காட்டுத் தீயாகப் பரவி தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்க நாதனும் தங்கள் தேக்குமர உடலுக்குத் தீ வைத்து மாண்ட செய்தி கீரனூர் முத்துவை அலைக்கழித்தது. இவனுக்கு இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று என்பது உயிரோடும், உணர்வோடும் கலந்திருந்தது. 1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளித்…

மாவீரர் வாழும் பூமி! மறுபடியும் துளிர்க்கும்!!

– புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர் மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே