‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு:       உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046  / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும்…

துபாயில் கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்

கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்: துபாயில் கண்ணதாசன் விழா- திருவாட்டி சுவேதா          கலைமானிற்காக ஆராரோ பாடிவிட்டு அத்தாலாட்டிலேயே கண்ணயர்ந்துவிட்ட நம் கவியரசரின் 89வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழின் சூன் மாத நிகழ்ச்சி(ஆனி 01, 2046 / சூன் 12, 2015) “காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்” என்ற தலைப்பில் கவிஞர் காவிரிமைந்தன் தலைமையில் ஒன்பான்மணிகளால் (மாணிக்கங்களால்) தொடுக்கப்பட்ட மாலையாக அமைந்தது.         முதலாவது மணி,   இளம் அகவையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் நிறைந்த செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்து- நம் தமிழன்னைக்கிட்ட…

வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் சார்பிலான முப்பெரு விழாக்கள்

    துபாயில் வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் ஆகியன சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டும்.. கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கமும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிருவாகம்=வெற்றி நூல் வெளியீடும் துபாய் கராமா சிவஃச்டார் பவனில் தை 17, 2046 / 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு நடைபெற்றது.   செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் சியாவுத்தீன் இயக்குநர் சிகரம் அமரர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கும் கவிஞர் அதிரை கலாம் கல்வியாளர், தொழிலதிபர் துபாய் ஈடிஏ அசுகான் ஃச்டார் குழும நிறுவனர் அமரர்…