நாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும்! பனி படு சோலைப் பயன் மரம் எல்லாம் கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை; ‘நனி பெரிதும் வேல்-கண்ணள்!’ என்று இவளை வெஃகன்மின்; மற்று இவளும் கோல்-கண்ணள் ஆகும், குனிந்து பொருள்: இன்று கனிந்தும் குளிர்ந்தும் விளங்கும் இளமை பின்னர் நிலைமாறிக் கெடும். ஆதலின் அழியும் இளமையை விட அழியா நற்செயல்களில் கருத்து செலுத்துக. சொல் விளக்கம்: இளமை=இளமைப்பருவமானது; பனி=குளிர்ச்சி; படு= பொருந்திய; சோலை=சோலையில், பயன்= பலனைத்தரும்; மரம் எல்லாம்= எல்லா மரங்களிலும்;…