கூட்டம் போடும் கூச்சல்!   

கூட்டம் போடும்  கூச்சலுக்கிணங்கி,

கொடுக்கும் தீர்ப்பு அறமாமோ?

ஆட்டம் போடும் தலைகளுக்கடங்கி,

அடிமையாதலும் திறமாமோ?

மாட்டிற்காகப் பொங்கும் மக்கள்,

மனிதரைக் கொல்தல் முறையாமோ?

வேட்டை நாய்போல் வெறியும் திரும்பும்,

விண்ணின் அறத்தில் குறையாமோ?

கெருசோம் செல்லையா