குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்
பேரன்புடையீர் வணக்கம்.
1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.
தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும்,
மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம்
குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில்
நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு குறைவாக உள்ளோர் வாழ்த்துரை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி. வணக்கம்.
ப.இரவிக்குமார்
9543977077
9380277177
www.thirukkuralmalai.org
Leave a Reply