இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை – புதுக்கோட்டை

  நாள் – 3,4-05-2045 /  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி — மாலை5மணி) இடம்-புதுக்கோட்டை–கைக்குறிச்சி சிரீவெங்கடேசுவரா பல்தொழில்நுட்பக் கல்லூரி. தலைமை         முனைவர் நா.அருள்முருகன்                         முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர் கல்லூரித்தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன்,          தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமி, திரு பி.கருப்பையா                   முதல்வர் எசு.கலியபெருமாள்  ————————————————       …

குற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்

‘முல்லை’ என்ற திங்களிதழில் பாவேந்தர் பாரதிதாசனாரின் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தங்கள் எழுதியிருந்தேன். அப்பாடலைப் பார்க்கும் வாய்ப்புப் பாவேந்தருக்கு ஏற்பட்டது. அப்பாடலைப் படித்ததும் அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, ‘எனது மீசையைப் பற்றிப் பாடல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உனக்கு ஏன் ஏற்பட்டது?’ என்பது தான். ‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்; கீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா?…

எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!

    அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்!   ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து…

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மடல் : 2 முறையீடு

விடுநர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,அகரமுதல இணைய இதழ் 23 எச்., ஓட்டேரிச்சாலை, சென்னை 600 091 பேசி 9884481652 ; 044 2242 1759 மின்வரி : madal@akaramuthala.in பெறுநர் தலைமைத் தேர்தல் ஆணையர், பொது(தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 மின்வரி :ceo@tn.gov.in நாள் 21.04.2045 / 04.05.2014 மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு  பொருள்: வாக்காளர் பட்டியலை முழுமையாக்கலும் வாக்குகளை விலைபேசுவோரைத் தண்டித்தலும் வணக்கம்.    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு நீங்கேள பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால்…

13 ஆவது தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் பற்றியஅறிவிப்பு

13 ஆவது தமிழ் இணைய மாநாடு கட்டுரைகள், ஆய்வுச்சுருக்கங்கள் அனுப்புவதற்கான அறிவிப்பு    உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 13 ஆவது  தமிழ் இணைய மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21  நாள்களில்  நடைபெற உள்ளன.   புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன்  இணைந்து உத்தமம் இம்மாநாட்டை நடத்த உள்ளது.        2014 மாநாட்டிற்குத்…

ஆலைத் தொழிலாளி – பாவேந்தர் பாரதிதாசன்

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின்… காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே, வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே…. மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே… குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும் குந்திப்பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும் ஆலையின் சங்கே…

உழத்தி – பாவேந்தர் பாரதிதாசன்

களை யெடுக்கின்றாள்-அதோ கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ களையெடுக்கின்றாள்! வளையல்தனில் மங்கைமாருடன் இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல் களை யெடுக்கின்றாள்! கவிழ்ந்த தாமரை முகம் திரும்புமா? -அந்தக் கவிதை ஓவியம் எனை விரும்புமா? அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம் அருவிநீரில் எப்போது முழுகலாம்?- களை செந்நெல் காப்பது பொதுப்பணி செய்யல்!-ஆம். என்ற நினைவினால் என்னருந் தையல், மின்னுடல் வளைய வளையல்கள் பாட விரைவில் செங்காந்தள் விரல்வாட- களை

ழகரம் தமிழின் சிகரம்

ழகரம் ழகரம் ழகரம் ழகரம் தமிழின் சிகரம் என்று உணர வேண்டிய நேரம் (ழகரம்) தமிழைத் ‘தமிழ்’ என்றே சொல்வீர் ழகரம் மாற்றித் ‘‘தமில்’’ ‘‘தமிளென்று’’ பேசும் வழக்கம் தவிர்ப்பீர் (ழகரம்) ‘‘கல்’’ எஎறு சொன்னால் கற்றல் ‘‘கள்’’ என்று அதனைச் சொல்வது தவறு கள் என்றால் போதை நீரே (ழகரம்) கல்வியைத் தருமிடம் ‘‘பள்ளி’’ ‘‘பல்லி’’ என்றால் அச்சொல் குறிக்கும் சுவரில் ஓடும் பல்லி (ழகரம்) ‘‘அழகு’’ எனும் சொல் அழகு ‘‘அலகு’’ என்று சொல்வது தவறு பறவையின் மூக்கே அலகு (ழகரம்)…

வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

    உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன்.   பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச்…