மாமூலனார் வாழ்க்கைக் குறிப்பு – சி.இலக்குவனார்

     (ஆடி 25, 2045 /ஆகத்து 10, 2014 இதழின் தொடர்ச்சி) மாமூலனார் பாடல்கள் – நிறைவுரை -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   பழந்தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர்கள் அரசர்கள் முதலியோரின் உண்மை வரலாறுகள் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை எழுதிவைக்கப்பட்ட வரலாறுகள், பல தமிழ் நூல்கள் அழிந்தவாறு அழிந்தனவோ? அன்றி, பழந்தமிழ் நாட்டுப் பெரியார்கள் தம்மையும், தம் போன்ற மக்களையும் பொருட்படுத்திக் கொள்ளாது தமிழையே நினைந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்த் கொண்டு ஆற்றி மறைந்தார்களோ? அறியோம். சில பெரும் புலவர்கட்குப்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 9 – பொறி.க.அருணபாரதி

(ஆடி 25, 2045 /ஆகத்து 10, 2014 இதழின் தொடர்ச்சி)   8. கோலொச்சும் மனை வணிகமும் வாழ்விழந்த வேளாண்மையும் சோழிங்கநல்லூர் – சிறுஞ்சேரி – செம்மஞ்சேரி எனப் பல பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள சென்னையில், எப்படி மனை வணிகத் தொழில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதே போலவே தகவல் தொழில்நுட்ப நகரங்கள் குவிந்துள்ள சியான் நகரில் மனை வணிகத் தொழிலே கொடிகட்டிப் பறக்கிறது. பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துகின்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அங்கொரு புதிய வகை சீன மக்களை…

புதுச்சேரி-காரைக்கால் வரலாற்றுப் பயிலரங்கம்

    காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, வரலாற்றுத ஆகியன சார்பில் புதுச்சேரி-காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம்(ஆடி 23, 2045 / ஆக.8, 2014) நடந்தது.   கல்லூரி முதல்வர் முனைவர் நா. இளங்கோ தலைமை தாங்கினார். தமிழ்த்துணைப் பேராசிரியர் முனைவர் மாரியப்பன் வரவேற்றார். வரலாற்றுத்துறை தலைவர் பச்சவள்ளி நோக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சாயபுமரைக்காயர் தொடக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சசிகாந்தாசு புதுச்சேரி அரிக்கன்மேடு கண்காட்சியைத் திறந்து…

குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆடி 27, 2045 / 12.08.2014 இல் சிறப்பாகநடைபெற்றது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு இசை – கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர் முனைவர் ஈ.காயத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு ‘தமிழிசை வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு’ என்னும்நூலை வெளியிட்டார். மேலும் முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள் பாடிய‘ஆறுபடைவீடு : திருப்புகழ்ப் பாடல்கள்’ என்னும் ஆறுகுறுவட்டுகள் அடங்கியஒலிவட்டுகளையும் வெளியிட்டார்….

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை எத்திராசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கப்பெற்ற வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ‘பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதிஉதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்று நடைபெற உள்ளது; எதிர்வரும் கார்த்திகை 9,10, 2045 / நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும். இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந.அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேசுவரி, பேராசிரியை முனைவர்.பா. கெளசல்யா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எத்திராசு மகளிர் கல்லூரியின்…

செங்கை நிலவனுக்கு வளைகுடா வானம்பாடியினர் பாராட்டு!

வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா! படஉருவாக்குநர்க்குப் பாராட்டு!   குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா, ஆடி 23, 2045 / ஆக.8, 2014 வெள்ளி மாலை 5.30 மணிக்கு மங்காப்பு விழா அரங்கில் மிகச்சிறப்பாக   நடைபெற்றது. இவ்விழா,குவைத்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த “இருக்கு ஆன இல்ல” படஉருவாக்குநர்களைப் போற்றும் வகையிலும், அவர்களுள் ஒருவரான திரு செல்லத்துரை, பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவன் ஆகியோரைப் பாராட்டும் வகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.   விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர்…

சென்னை அண்ணாநகர், சௌந்தரியா குடியிருப்பில் விடுதலை நாள் விழா

குழந்தைகளுக்குத் தமிழில் பேச்சுப்போட்டி, நாடகம், இசை நிகழ்ச்சிகள். சிறப்பாக நடந்தன. மழலையரும்புகள் மணக்கும் தமிழில் அழுத்தம் திருத்தமாகப் பேசுவதைக் கேட்கக் கேட்கக் கொள்ளை மகிழ்ச்சி பிறந்தது. பெருந்தலைவர் அம்பேத்கார் அவர்களைப் பற்றிய பொழிவுகள் அருமையாக இருந்தன.   செய்தியும் படங்களும் : மறைமலை இலக்குவனார்

பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி மறைவு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி அவர்கள் மறைவு   புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக ஆவணி 28, 2045 / ஆக. 13 அன்று காலமானார். அவருக்கு அகவை 84. சரசுவதி, இரமணி, வசந்தா, மன்னர்மன்னன் ஆகிய மக்கள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு இருந்தனர். இவர்களில்   மூன்றாம் மகள் இரமணி சிவசுப்ரமணியம் 1970- இல் காலமாகி விட்டார். பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் அவர்கள் தம் 92ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை…