கணித்தமிழும் மென்பொருள்களும் – கலந்துரையாடல்

தமிழ் இணையக் கல்விக் கழகம் சென்னை- 600 025.   கணித்தமிழும் மென்பொருள்களும்    கலந்துரையாடல்   திரு. டி. சீனிவாசன், மென்பொறியாளர்,  சிறப்புரையாற்றுகிறார்.   நாள் :  மார்கழி 4, 2045 / 19.12.2014, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 3.00 மணி இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை-25. அனைவரும் வருக! முனைவர் ப.அர.நக்கீரன் இயக்குநர் இக்கலந்துரையாடலில் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை –…

வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்-வைகை அனிசு

வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள் தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணையில் பூங்காக்கள் பேணப்படாமல் உள்ளதால் சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வைகை அணையில் பொழுது போக்குவதற்காகப் பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டுத்திடல், இராட்டினம், சறுக்கி விளையாடும் இடம், தொடரி(இரயில்வண்டி), பாரஉந்து போன்ற பொழுது போக்குவாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதற்குத் தனியாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிறுவர்கள் விளையாடும் பூங்காக்களுக்குத் தனியாக நுழைவுக்கட்டணம் பெறப்படுகிறது. கட்டணம் வாங்கியும் எந்த வித அடிப்படை வசதியும் பொதுப்பணித்துறை சார்பில் செய்துதரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விளையாடும்…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

 (கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி) முதல் காப்பியம்   இத்தகைய மாறுபட்ட எண்ண ஓட்டங்களிடையே கல்லூரிக்கால விடுமுறையில் நூலகத்தில் படித்த ‘மாங்கனி’ எப்பொழுதும் நினைவில் மணக்கிறது; கருத்தில் சுவைக்கிறது. அதனைப்பற்றிய எண்ணத்தைப் பகிர விரும்புகின்றேன். கண்ணதாசன்எழுத்துலகில் இடம் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து எழுதிய இலக்கியமான ‘மாங்கனி’யே அவரது முதல் காப்பியம். 1954இல் கல்லக்குடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்று திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் இருந்த பொழுது உருவானது இக்காப்பியம். தம் காவிய ஆசையைத் தீர்க்கும் வகையில் நாளொன்றுக்கு ஒரு…

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு தேனி மாவட்டத்தில் வேளாண்பணிகளுக்கு உழுவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலும் அதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை பெய்யவில்லை. மேற்குமலைத்தொடர்ச்சியில் பெய்த மழை காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் நிரம்பத்துவங்கியுள்ளன. இதனால் கடந்த மூன்று ஆண்டுகாலமாகத் தரிசாக கிடந்த நிலங்களை உழுது வருகின்றனர் உழவர்கள். நெல், கரும்பு, வாழை முதலானவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் வேளாண்பணிகளுக்கு உழுவைகள் தேவை மிகுதியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகள் வரை உழவு, அறுவடை செய்தல்,…

வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ் – முனைவர் கீதா இரமணன்

வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ் முனைவர் கீதா இரமணன்   ‘‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் தோன்றாது” என்ற இலக்கியத் தரமிக்க வைரவரிகளைக் கவியரசர் கண்ணதாசன் திரைப்படப்பாடல் வரிகளாய் நமக்களித்தார். இருப்பினும் நம்மில் பலர் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அனைத்து வணிகப்பிரிவுகளிலும் விளம்பரங்களை நம்பியும்வணிக அடிப்படை மற்றும் வணிகப் பொருள்களின் தரம் போன்ற இன்றியமையாதனவற்றைப் பின்னுக்குத் தள்ளியும் செயல்பட்டு வருகிறோம்.   ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்று கூறி ஆண்டுகள் பல கழித்தோம். இதன் அடுத்த நிலையாகத் ‘துறைதோறும் தமிழ்’…

மொழி உரிமை ஆண்டு- ஈகியர் நினைவேந்தல்

ஈகியருக்கு நினைவேந்தலும் மொழி உரிமை ஆண்டாக 2015 ஐ கடைப்பிடித்தலும் மொழி உரிமைக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குதலும் வணக்கம், தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் ஈகியர் நாளான சனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது. இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசின்…

மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!

மீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது!   மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து, இலாங்லெட்டு ஆகியோரை இலங்கைக் கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாகப் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு த் தூக்குத் தண்டினை விதிக்கப்பட்டனர். குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல் தூக்குத் தண்டனை நாடகமும் நிறைவேற்றிவிட்டு விடுதலை யும் செய்யும் புதிய நாடகம் அரங்கேறியுள்ளது. ஏறத்தாழ அனைவருமே இதை அறிந்திருக்கின்றனர். ஆனால் விசயகாந்த்து மட்டும் மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார். தம்பிதுரை, இலங்கை அரசு நடத்திய நாடகத்திற்கு, இந்திய அரசும் துணை போய் உள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை…

பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்    உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில…

இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்     தேவதானப்பட்டிப் பகுதியில் வெற்றிலை பாக்கு இடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உரல்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்பப்பட்டு வருகின்றன.   தேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வெற்றிலை, புகையிலை பயன்படுத்துபவர்கள் மிகுதியாக இருந்தனர். இதில் வயதானவர்கள் பல் இல்லாமல் இருந்தால் உரல் மற்றும் எச்சில் துப்புவதற்காகப் படிக்கம் என்ற கோளாம்பியைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரலில் வெற்றிலை, சுண்ணாம்பு, தேவையான அளவு பாக்குகளை வைத்து அதனைக் குத்தி அதன்பின்னர் தங்கள் வாயில் போட்டு மெல்லுவார்கள்….

தேனியில் சாக்கடைநீர்க் கலப்பால் தொற்றுநோய்

தேனி மாவட்டத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் பேரிடர் தேனிமாவட்டத்தில் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில்வார்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் தண்ணீரைச் சேமித்து ஒவ்வொரு பகுதியாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு வழங்கும்பொழுது பல இடங்களில் சாக்கடை அண்மையில் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீரின் அழுத்தம் குறையும் போது சாக்கடை நீர் அக்குழாய் வழியாகத் தண்ணீருடன் கலக்கிறது. இதனை அருந்தும்…