மொழி உரிமைப்போரில் பேரா.சி.இலக்குவனார் – மறைமலை உரை

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், சென்னை மொழி உரிமைப்போரில் பேராசிரியர் இலக்குவனார் பங்களிப்பு தை 13, 2046 / சனவரி 27, 2015 செவ்வாய் மாலை 6.00 மணி தலைமை : பேரா.ப.அர.அரங்கசாமி நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார்  

கருவிகள் 1600 : 601-640 : இலக்குவனார் திருவள்ளுவன்

  601. கிண்ண உலவை மானி-cup anemometer 602. கிண்ண மின்மானி-cup electrometer 603. கிண்ணக் காற்றழுத்தமானி-cup barometer 604. கிண்ணச் சங்கிலி உலவை மானி-bridled-cup anemometer 605. கிண்ணி வெப்பமானி-cup-case thermometer 606. கிணறுவகை நீர்ம-வளிய அழுத்தமானி-well-type manometer 607. கீற்றணி நிறமாலைமானி-grating spectrometer 608. கீற்றொளி உயிரி நுண்ணோக்கி-slit lamp biomicroscope 609. கீற்றொளி நுண்ணோக்கி-slit lamp microscope :கருவிழிப்படலப் பின்பரப்பை ஆய்வதற்குரிய இணைப்புடைய நுண்ணோக்கி. 610. குண்டு நீரடர்மானி-balling hydrometer 611. குண்டு மிதவை நீர்ம மட்டமானி-ball-float liquid-level meter…

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லை! – வைகை அனிசு

புதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் முகம் சுளிப்பு   புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதிய பேருந்துநிலையத்தில் இலவசக் கழிப்பிட வசதி இல்லாததால் பட்டப்பகலில் ஆண்கள் பேருந்துநிலையத்தினுள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் முகம் சுளிக்கின்றனர். புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரிக்கமேடு, கடற்கரை, ஆசிரமங்கள், தியானமண்டபங்கள், திரௌபதி அம்மன்கோயில் எனப் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. இதனைக் கண்டு களிப்பதற்குத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை…

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு

தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு தமிழை இனிமை என்றனர் பாவலர்கள் தமிழைப் புகழ் என்றனர் புலவர்கள் தமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் ! தமிழ் விழிப்புற்றது பாரதியால் தமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால் தமிழ் போராடியது இலக்குவனாரால் எந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர் எந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர் இருந்தும் எல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன ! எல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின ! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று தொன்று தமிழருக்கு…

கருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்

காந்த நிறமாலைமானி-magnetic spectrometer காந்த வரைவி-maneto-graph : காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி. காந்த வெப்பமானி- magnetic thermometer 564. காந்தச்செறிவுமானி- coercimeter :    இயற்கைக் காந்தம் அல்லது மின்காந்தத்தின் காந்தச் செறிவை அளவிட உதவும் கருவி. காந்தத் திசை காட்டி- magnetic compass காந்தத் திறன்மானி- magnetic potentiometer காந்தத் தூண்டல் சுழல் நோக்கி- magnetic induction gyroscope காந்தப் பாயமானி-flux meter 569. காந்தப்பின்னடைவுமானி-hysteresimeter:   காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலையை அளவிடும் கருவி. (காந்தத்தயக்கமானி (-இ.)…

கருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்

521. கப்பற்பயணவரைவி – loxodograph : கப்பல்பயணத்தைப்பதிய உதவும் கருவி. 522. கம்பளித்தரமானி – lanameter : கம்பளியின் தரத்தை அளவிடும் கருவி. 523. கம்பிவலைத் திருத்தி மானி -grid-rectification meter 524. கம்பிவலை நிறமாலைமானி – grid spectrometer 525. கம்பிவலை மின்னோட்ட மானி/ கம்பிவலை அலையியற்றி-grid-dip meter/ grid-dip oscillator : கம்பிவலை மின்னோட்டத்தை அறியக் கம்பிவலையில் ஒருங்கிணைந்த – பன்முகவீச்சு மின்னணுக் குழாய் அலையியற்றிக் – கருவி. 526. கயக்கமானி – taseometer : கட்டமைப்பின் கயக்கத்தை (stress in…

கலைச்சொல் தெளிவோம் 56 : அன்னிலை-temporary

 56 : அன்னிலை-temporary தற்காலிகம்:   டெம்பரரி/temporary-குறுங்கால, நிலையற்ற, தற்காலிகமான என ஆட்சியியலில் கையாளுகின்றனர்; புரொவிசனல்/provisional-தற்காலிக என மனையறிவியலில் கையாள்கின்றனர்; இச்சொல்லிற்கு ‘நிகழ்காலத்திற்கான, அப்போதைக்கான’ என்னும் இரு சொற்களையும் ஆட்சியியலில் கையாள்கின்றனர். எனினும் temporary, provisional ஆகிய இரண்டு சொற்களுக்குமே தற்காலிகம் என்னும் சொல்லைக் கையாளுகிறோம். ஆனால் உண்மையில் அவ்வாறு சொல்லே கிடையாது. (தற்காலம் என்பது வேறு; குறிப்பிற்குரியவரின் சமகாலத்தைக் குறிக்கும்.) பெருமனெண்ட்(டு)/permanent-நிலையான என மனையறிவியலிலும் கணக்கறிவியலிலும் கையாளுகின்றனர்; வேதியியலில் நிலைப்புறு எனக் குறிப்பிடுகின்றனர்.   temporary என்பது நிலையற்றதைக் குறிக்கிறது. உயர் திணை…

கலைச்சொல் தெளிவோம் 57: இடையீடு-provision

 57: இடையீடு-provision     இடை என்பது நடு என்னும் பொருளிலும், இடையே என்னும் பொருளிலும், இடுப்பு என்னும் பொருளிலும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இடையின் அடிப்படையாக இடைப்படுதல் முதலான வேறு சொற்களும் கையாளப்படுகின்றன. இடையே வருதல் என்னும் பொருளில் உள்ள சொற்கள், இடையே தடையாக வருதல் என்னும் பொருளில்தான் வந்துள்ளன. எனினும் இடையிடுபு என்னும் சொல் பின்வருமாறு கையாளப்படுகின்றது. கூர்உளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு (நெடுநல்வாடை 119) இடையே இடுதல் என்னும் இச்சொல்லை நிலையான ஒன்று வழங்குவதற்கு இடையே தரப்படுகின்ற-இடையே இடப்படுகின்ற-என்னும் பொருளில்…

கருவிகள் 1600 : 481-520 : இலக்குவனார் திருவள்ளுவன்

  481. கணக்குமானி – arithmometer :  கணிப்புமானி எனச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறுகின்றது. கணக்குமானி என்பதே ஏற்றதாக இருக்கும். 482. கதிரலகுமானி  – roentgen meter :ங-கதிர் அல்லது ஞ- கதிர் (x-rays or γ-rays)களின் திரள் அளவை அளவிடும் கருவி.கதிர்வீச்சு அலகினை (roentgen) அளவிடுவதால் கதிர் அலகுமானி> கதிரலகுமானி எனலாம். 483. கதிரலைவுநோக்கி  –  ray oscilloscope 484. கதிருமிழ்வுமானி  –  emanometer 485. கதிர்ப்பு நோக்கி –   spinthariscope  :  ஊடிழை கதிர்த்திரை , நீளலை மினுக்கத்தால் கதிரியக்க…

கலைச்சொல் தெளிவோம் 55: தலைமையாளர்-dean

 55: தலைமையாளர்-dean தாம்வரம்பாகிய தலைமையர் என்கிறது திருமுருகாற்றுப்படை(134).  டீன்/ dean என்பதற்குத் தலைமையர் என்று சொல்லலாம் என அறிஞர் ஔவை அவர்களிடம் முன்பு ஒருமுறை(199௦) சொன்னதற்கு, இச் சொல் சரியாக இருந்தாலும், வேறு வகை யில் (தலைமயிர் என) இழிவாக மாற்றிக் கூறுவதற்கு இடம் தரும் என்பதால் வேண்டா என்றார். ஆனால், சங்கஇலக்கியத்திலேயே இச்சொல் உள்ளதை இப்பொழுதுதான் அறிந்தேன்.   அறிஞரின் கருத்தும் புறந்தள்ள இயலா ஒன்றே. எனவே, தலைமை(1) அடிப்படையில் தலைமையாளர் எனச் சொல்லலாம். தலைமையாளர்-dean

கலைச்சொல் தெளிவோம் 54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant; சிறுபொழுது-short period

 54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant;  சிறுபொழுது-short period சிறுநனி(7) : மிகச்சிறிய பொழுதைக் குறிக்கும் வகையில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். சிறுநனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் (கலித்தொகை ௧௨.௮) சிறுநனி தமியள் ஆயினும் (புறநானூறு ௨௪௭.௯) சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர் (அகநானூறு ௧௮௦.௧) நனி என்னும் சொல் மிகுதி என்னும் பொருளைத் தந்தாலும் சிறுநனி எனச் சிறு என்னும் சொல்லுடன் சேர்ந்து ஒற்றைச் சொல்லாகும் பொழுது குறுகிய பொழுதையே குறிக்கிறது. short period-குறுங்காலம்(பொரு.,) என்றும் short term-குறுகியகாலம், குறுங்காலம்(மனை.,உள.,) என்றும் அனைத்துத்…

கலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial

  53: இடங்கர்-crocodile;  கராஅம்-alligator;  முதலை-gavial   குரோகடைல்(crocodile), அலிகேட்டர்(alligator) என இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும் சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும் அவ்வாறே குறிப்பதே சிறப்பு. முதலை, இடங்கர், கராம் என முதலைகளின் வெவ்வேறு வகைகள் பழந்தமிழகத்தினர் அறிந்திருந்தனர். குறிஞ்சிப்பாட்டில் ஒரே வரியிலேயே(257) கொடுந் தாள் முதலையும், இடங்கரும்,…