நாள்தோறும் நினைவில்- மனத்தை வளப்படுத்து- சுமதி சுடர்

  மனத்தை வளப்படுத்து தியானம் செய் கவலை ஒழி அறுகுணம் சீரமை நினைவாற்றலை அதிகப்படுத்து உயர்ந்த நோக்கம் கொள் அறிவுத் தெளிவுபெறு திறனை வளர் தன்னம்பிக்கை வை தற்சோதனை செய் வேண்டுதலை விடு  – சுமதி சுடர், பூனா  

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 5 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு !   (மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி) காட்சி – 5 (நாடகக் காட்சி – 1) அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (அருண் மொழி  வருகைக்காகத் திருமகள் காத்தே இருக்க வருகின்றான் அருண்மொழி ஆங்கே! பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!) அருண்   :     கண்ணானக் கண்ணே!                      ஏனிந்த வாட்டம்?                            பெண்ணே! நான் நீங்கிச்               சென்ற…

நாள்தோறும் நினைவில்: ஆதாரங்களைப் பயன்கொள்

ஆதாரங்களைப் பயன்கொள்! இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களைப் பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  – சுமதி சுடர், பூனா  

நாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்

ஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிமுறைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய்  – சுமதி சுடர், பூனா  

“தமிழக மக்கள் முன்னணி” தொடக்கம்

“தமிழக மக்கள் முன்னணி” தமிழகத்தில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒருங்கிணைந்து ”தமிழக மக்கள் முன்னணி” எனும் ஒரு முன்னணி இயக்கம் தொடங்கியிருக்கின்றன. தமிழக மக்கள் புரட்சிக் கழகம் 2.தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலைக் கழகம் 3.தென்மொழி இயக்கம் 4.தமிழக மக்கள் விடுதலை இயக்கம் 5.தமிழர் தன்மானப் பேரவை 6.தமிழர் உரிமை இயக்கம் 7.தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 8.புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவை 9.தமிழர் விடுதலை கழகம் 10.தமிழ்நாடு விடுதலை புலிகள் 11.அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் 12.பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்…

கலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy

23 எக்கர் – Sand hill; sandy   மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்(நற்றிணை 15.11) sandy-மணல்மிகு எனப் பொறிநுட்பவியலிலும் மணல் கொண்ட எனக் கால்நடை அறிவியலிலும் பயன்படுத்துகின்றனர். அதைவிட எக்கர்…

கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில்- cuisine

அட்டில்- cuisine தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம். புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறுபாண் ஆற்றுப்படை 132 அறம்நிலைஇய அகன்அட்டில் – பட்டினப் பாலை 43 விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில் – பட்டினப் பாலை 262 அட்டில் ஓலை தொட்டனன் நின்மே –நற்றிணை 300.12 உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து –…

சிறுகதைப் போட்டி – (உ)ரூபன் & யாழ்பாவாணன்

(உ)ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்… சிறுகதைகள் அளிக்க வேண்டிய இறுதி நாள் தை 17, 2046 / 31.01.2015   போட்டியின் நெறி முறைகள்: 1. கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பைத் தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். 2. 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். 3. போட்டிக்கான சிறுகதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களைத் தறவேற்றம் செய்யலாம்….

இந்தியாவில் 32 இணையத்தளங்களுக்குத் தடை – மணி.மணிவண்ணன் கண்டனம்!

32 இணையத்தளங்களை இந்திய அரசு “தடை” செய்தது சரியா? நன்றி : http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150101_inidiawebsite.shtml இந்தியாவுக்குள் இணையச் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களைத் தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணையத் தன்னுரிமைக்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த இணையம் – சமூகத்திற்கான மையம் என்கிற இணையத் தன்னுரிமைக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையத்தளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையத்தளங்கள் உள்ளிட்ட பல புகழ்வாய்ந்த…

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுக் குழு முடிவுகள்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு சென்ற மார்கழி 13, 2045 / 28.12.2014 ஞாயிறு அன்று சென்னையில் கூடி எடுத்த ஒருமன முடிவுகள்:       1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.       2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.      3) தோழர் தியாகு, தோழர் வே.பாரதி, தோழர் பாரி ஆகியோரைக் கொண்டதே இயக்கத்தின்  புதிய தலைமைக் குழு.      4) தமிழ்த்…

மாந்தர்குல வரலாறு – சுமதிசுடர்

  கடற்கோளால் சிதறுண்டு கடல்கடந்து சென்றோம்; கற்றறிவின் துணைகொண்டு சூழலுக்குள் வாழ்ந்தோம்; அடக்குமுறை கொள்கையாளர் ஆட்சியினைப் பற்றி அழித்துவிட்டார் பண்பாட்டுக் கூறுகளை மெல்ல; கடந்துவந்த பயணத்தை ஓரளவே பதிந்தோம்; காணாமல் விட்டவற்றை கண்டறிந்து பதிவோம்; அடங்காத உணர்ச்சிநிலை ஆய்வுகளால் பயன்என் ஆய்வுசெய்யும் சித்தனாகி அறம்செழிக்கச் செய்வோம்.                                                                             –  சுமதிசுடர், பூனா