கலைச்சொல் தெளிவோம் 49 : குழியம்-acetabulum

 49.குழியம்–acetabulum     அசெட்டாபுலம்- acetabulum என்பது இடுப்பு எலும்பின் உட்குழிவான பகுதியைக் குறிக்கிறது. பந்துக்கிண்ண மூட்டுக்குழிவு(வேளா.), இடுப்பெலும்புக்குழி(உயி.), கிண்ணக்குழி(மனை.), கிண்ணக்குழிவு(மரு.), இடுப்பு எலும்புக்குழி, ஆழ்குழி(கால்.) என இதனைக் குறிப்பிடுகின்றனர். குழி(௧௭), குழிசி(௧௨), குழித்த(௭), குழித்து(௧), குழிந்த(௩), என்றும் மேலும் சிலவுமாகக் குழிபற்றிய சங்கச் சொற்கள் உள்ளன. இவைபோல் குழிவாக அமைந்த உறுப்புப் பகுதியைக் குழியம் என்று சுருக்கமாகச் சொல்லலாம். குழியம்-acetabulum  

கலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்

   48 : மது வகைகள் பழந்தமிழகத்தில், நுங்கு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைப் பருகி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீஞ் சாறும் ஓங்கு மணற் குலவுத் தாழைத் தீ நீரோடு உடன் விராஅய், என வரும் புறநானூற்று(24) அடிகளால் தெரியவருகின்றது. இருப்பினும் உற்சாகத்திற்காகவும் களிப்பிற்காகவும் பல்வகையிலான சாறுநீர்களை உட்கொண்டுள்ளனர். மதுவகைகள் உடலுக்குத் தீது என்ற வகையில் அறவே நீக்கப்பட வேண்டியவைதாம். எனினும், இப்போது விற்பனையில் பல்வகை மதுவகைகள் உள்ளன என்பதால் அவற்றைத் தமிழில் குறிக்க வேண்டி…

கலைச்சொல் தெளிவோம் 47 : சிமிழ்-chip

 47 : சிமிழ்–chip சிப்-செதுக்கல், சில்லு எனக் கணிணியியலில் குறிக்கின்றனர். கணிணியியலில் சிப் என்பது செதுக்கும் பணியைக் குறிக்கவில்லை. மின்னணுச் சுற்றுகள் அடங்கிய சிறு கொள்கலனைக் குறிக்கிறது. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக் காஞ்சி 483) எனப் பொருள்களை ஏந்தித்தாங்கும் உறியைச் சிமிலி எனக் குறித்துள்ளனர். சிமிலி என்னும் சங்கச் சொல்லின் அடிப்படையில் பிறந்ததே சிமிழ். ‘சிமிழ்’ என்பது சிறு கொள்கலன்தான். எனவே, செதுக்கல், சில்லு என்று எல்லாம் சொல்லாமல் ‘சிமிழ்’ என்றே குறிக்கலாம்.   சிமிழ்-chip

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   காட்சி – 7அங்கம் :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடில் முன்வாசல் நிலைமை  :     (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!) அன்ப :     நாடகக் கருத்தை அறியும் முன்பு ஓடுது என்மனம் ஒன்று கேட்க? சென்னைக்கு வந்த நோக்கமென்ன? என்பதே அந்தக் கேள்வி என்பேன்! கவி       :     வானத்திலே நாகரீகம் வட்டமிட்டுச் சுற்றுதென தேன்வழியப் பேசுகின்ற சிலர் எனக்குச் சொல்லிடவே நானுந்தான் வந்தேன் நாகரீகம் கண்டேன்!…

கலைச்சொல் தெளிவோம் 46 : ஒலிப்பம்-decibel

 46 : ஒலிப்பம்-decibel தெசிபல்/decibel என்பதைப் பொறிநுட்பவியலில் ஒலித்திறன்அலகு என்றும், சூழலியலில் ஒலிச்செறிவுஅலகு என்றும், மனையறிவியலில் ஒலியலகு என்றும் கையாளுகின்றனர். ஒலியலகை ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு வகையாகக் கையாளுவதவிட ஒரே சொல்லைப் பயன்படுத்துவதுதான் சிறப்பாக அமையும். சங்கச் சொல்லான ஒலி என்பதன் அடிப்படையில் ஒலிப்பம் என்று சொல்லலாம். ஒலிப்பம்-decibel ஒலிப்பமானி-decibel meter

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)   அருகிய அயற்சொற்கள் அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார்.   செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7) கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4) சீவன் (மாங்கனி :38 சாகாத சித்திரங்கள் 9-1) .துட்டனும் (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.8) என்பன போன்று அயலெழுத்து நீக்கித்…

தமிழர் வாக்குகள் இராசபக்சேவிற்கான தண்டனையே! – உருத்திரகுமாரன்

தமிழ் மக்களின் வாக்குகள் இராசபக்சவுக்கான தண்டனையே! சிறிசேனவுக்கோ ஒற்றையாட்சிக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரம் அல்ல!!  தலைமையாளர் உருத்திரகுமாரன் «நடந்து முடிந்த  இலங்கைத் தலைவர் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராசபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய  தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ  இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது  பொருள்தர முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க…

இல.சுந்தரத்திற்குத் ‘தமிழ்நிதி’ விருது

திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில்  இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், உத்தமம் உறுப்பினர் கணினித்தமிழ் அறிஞர் இலசுந்தரம் (பேராசியர், தி.இரா.நி. (எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகம்) இதுவரை ஆற்றியுள்ள பணியினைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நிதி ‘ என்னும் விருதினை வழங்கிய நிகழ்ச்சி மார்கழி 29, 2045 /   செவ்வாய்க்கிழமை(13.01.2015) மாலை 6.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது சிலம்பொலி செல்லப்பன், காப்பியக்களஞ்சியத்தின் மாத நிகழ்ச்சியாக சிலப்பதிகாரத்தில் நல்ல பல ஆழ்ந்த ஆய்வுகளை வழங்கி அவையோரை வியப்பில்…

கலைச்சொல் தெளிவோம் 45 உரனி- Vitamin

45 உரனி- Vitamin   உயிர்ச்சத்து எனப் பலராலும் குறிக்கப்படும் ‘வைட்டமின்’ என்பதற்கு வேளாணியல், பயிரியல், வேதியியல் ஆகியவற்றில் ‘உயிர்ச்சத்து’, ‘வைட்டமின்’ என்றும். மீனியல், மனையியல் கால்நடைஅறிவியல் ஆகியவற்றில ‘உயிர்ச்சத்து’ என்றும் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘வைட்டமின்’ அல்லது ‘விற்றமின்’ என ஒலிபெயர்ப்பு அடிப்படையில் அயற்சொல்லையே கையாளுகின்றனர்.   இதற்கு நாம் சங்கச் சொல் அடிப்படையில் புதுச்சொல் அறிந்து பயன்படுத்த வேண்டும். உரன் (19) என்னும் சொல் மன உறுதி, பற்றுக்கோடு என்னும் பொருள்களில் சங்க இலக்கியங்களில் வந்துள்ளன. [சிறுபாணாற்றுப்படை (115,190); நற்றிணை (3-6, 333-5);…

கலைச்சொல் தெளிவோம் 44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism

44 : அஞர்-mental distress ; கொடுமகிழ்வு-sadism  வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே (நற்றிணை : 30.10) ஆர வுண்டு பேரஞர் போக்கி (பொருநராற்றுப்படை : 88) என்பனபோன்று, அஞர்(33) மனத்துயரத்தைக் குறிக்கின்றது. distress: உளஇடர்ப்பாடு என மனையறிவியல் கூறுகிறது. அஞர்-mental distress என்பது பொருத்தமாக அமையும்.  தொல்பொருள் துறையில் sadism என்பதற்கு அஞரின்பம் என்றும் sadist என்பதற்கு அஞரின்பர் என்றும் சொல்கின்றனர். நம் துன்பத்தில் இன்பம் காண்பது என்பது நமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு எதிர் நோக்குவது. ஆனால் பிறரைத் துன்புறுத்தி…

கருவிகள் 1600 : 441 – 480 : இலக்குவனார் திருவள்ளுவன்

  441. ஒற்றை அச்சுச் சுழல் நோக்கி –  single-axis gyroscope 442. ஒற்றை நிறமானி – monochrometer 443. ஒற்றைக் குறிகைநோக்கி – monoscope 444. ஒற்றைக்கட்ட மானி – single-phase meter 445. ஒற்றைப் பொன்னிழை மின்னோக்கி – Wilson electroscope 446. ஓசைமானி – toro meter 447. ஓட்ட வகைத் தொலை மானி – current-type telemeter 448. ஓட்ட வகைப் பாய்மமானி – current-type flowmeter :    மூடியும் திறந்தும் உள்ள தடங்களில் நீர்மத்தின் திசை வேகத்தை…

கலைச்சொல் தெளிவோம் 43 : வாட்டூன்-roasted mutton/chicken பொதிபொரி-puff

43 : வாட்டூன்-roasted mutton/chicken; பொதிபொரி-puff     பொரித்தலும் வறுத்தலும் (குஞ்சு)பொரித்தல்-hatch/hatching (வேளா., பயி., மனை., கால்.); fry/frying(கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.); வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.) என்று அடைகாத்துக் குஞ்சு பொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறு வகைக்குக் குறிப்பிடுகின்றனர். சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்த கறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர். கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு…