கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus

 76. கணம்-Cirrostratus   கணம் அடுத்த அடுக்கில் 8000 பேரடி(மீட்டர்) உயரத்தில் கூட்டம் கூட்டமாக உள்ள குவியடுக்கு முகிலின் பெயர் கணம். மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன் (புறநானூறு : 131.1) அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் (பதிற்றுப்பத்து : 17.11) இவ்வாறு இடி, மின்னல் இணைந்த மழை முகிலைக் கணம் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனையே சிர்ரோசுதிரட்டசு/Cirrostratus எனக் குறிப்பிடுகின்றனர். கணம்-Cirrostratus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus

 75. செல்-Cirrocumulus   செல்   செல்(117) என்பதற்கு உள்ள சில பொருள்களில் ஒன்று முகில் என்பதாகும். “வான்முழக்குச் செல்” (பரிபாடல் 13.44) என்னும் பொழுது இடி முழக்கத்துடன் இணைந்த மழைமுகிலைக் குறிப்பிடுகின்றது. இத்தகைய தன்மை உடைய 7000 பேரடி (மீட்டர்) உயரத்தில் உள்ள சுருள்குவிவு முகில் சிர்ரோகியூமுலசு/Cirrocumulus எனப்படுகின்றது. செல்-Cirrocumulus – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.  அவையில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கட்டுரை இது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் எப்படியெல்லாம் சட்டம் இயற்றக்கூடாது என்பதற்குத் தங்களுக்கு இது மிகவும் வழிகாட்டியாக அமையும் என்றார். முனைவர் நன்னன் அவர்கள் “தமிழ்நாடே இனி உருப்படாதோ என்ற தொனி இருந்தாலும் உண்மைகளைச் சிறப்பாக உரைத்துள்ளீர்கள்” என்றார். கடந்த ஆண்டே அறிஞர்…

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்  – இலக்குவனார் திருவள்ளுவன்     உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது….

நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!

நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!   கடந்த இதழுரையிலேயே “திறந்த புத்தகம்போல் விசய் தொலைக்காட்சி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் உச்சப்பாடகர் நிகழ்ச்சியில் உலக மக்கள் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற அச்சம் இல்லாமலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லர் என்ற தலைக்கனத்தாலும் வாக்கில் முதலிடம் பெற்றவருக்குப் பரிசு அளிக்காமல் மூன்றாம் இடம் பெற்றவருக்கு முதல் பரிசு அளித்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் ஒருவர் வாக்கு பெற்றது பாரறிய அறிவிக்கப்பட்டது. அவர் (ஃச்) பூர்த்தியாக இருந்தால் அந்த வாக்கு எண்ணிக்கையை அறிவித்திருப்பர்….

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது

இமயம் முதல் குமரி வரை தமிழே இருந்தது மிகப் பழங்காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழாகவே இருந்தது என்பது மொழியாராய்ச்சியாலும் வரலாற்று ஆராய்ச்சியாலும் நிலை நாட்டப்படும் உண்மையாக உள்ளது. … மண்ணிற் புதையுண்டு மறைந்த ‘ஆரப்பா’ ‘மொகஞ்சதாரோ’ நகரங்கள் வழங்கிய மொழி ‘தமிழே’ என்று தந்தை ஈராசு அவர்கள் நிறுவியுள்ளமையும் இவ்வுண்மையை வலியுறுத்தும். – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்)

நெடுங்கணக்கு தமிழில் மட்டுமே உள்ளது

நெடுங்கணக்கு தமிழில் மட்டுமே உள்ளது   எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள். தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை. – முனைவர்.க.சுப்பிரமணிய ஐயர்

மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே

மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர் தமிழரே   மொகஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களும் தென் இந்தியத் திராவிடரும் ஓர் இனத்தவரே. அவர்கள் இரு பிரிவினரும் பேசிய மொழி ஒன்றே. சிந்துவெளிமொழி திராவிடம் என்பதில் ஐயமே இல்லை. அது தமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.     – அறிஞர் ஈராசு அடிகள் – தரவு தமிழ்ச்சிமிழ்

மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்

காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்   தேவதானப்பட்டியில் காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடியாகப் பணம் பெறுகின்றனர்.   தேவதானப்பட்டியில் அரிசிக்கடை, வைகை அணைப் பிரிவு, பேருந்துநிலையம் முதலான பகுதிகளில் மிதியூர்தி(ஆட்டோ) நிறுத்தங்கள் உள்ளன. இப்பகுதியைச்சுற்றிச் சிற்றூர்கள் உள்ளமையாலும், புகழ்பெற்ற அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளதாலும் ஏராளமான வெளியூர்ப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிகின்றனர். உட்கிடை ஊர்களுக்கும், காமாட்சியம்மன் கோவிலுக்கும் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிதியூர்தி, பங்கீட்டு மிதியூர்திகளில் பயணம் செய்கின்றனர். இதில் போதிய…