மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் புலவர்மணி இரா.இளங்குமரனார்

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த பொறியாளர் அமரர் பழ.கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒளிப்படங்கள். சிறப்புரை தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் .   தரவு : கவிஞர் இரா .இரவி

தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடி

  தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் கடன் அட்டை முதலான   பணப்பொறி அட்டைகளின்  எண்களைத் தெரிந்து கொண்டு தொடர்புடையவர்களிடம்   மேலாளர் பேசுகிறேன் எனக்கூறி இரண்டாண்டுக்கு மேலானதால்   பணப்பொறியட்டை செயலிழந்து விட்டது என்றும் கடவுச்சொல்லை மாற்றினால் அதை நீக்கிச் செயல்பட வைக்கலாம் என்றும் கூறி கடவுச்சொல்லைப் பெற்றுப் பணத்தை எடுத்துவிடுகின்றனர்.   இதற்காக 9600367557 என்ற எண்ணில் இருந்து அழைக்கின்றனர்.அதன்பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இந்தி மற்றும் மலையாளம் கலந்த மொழியில் பேசுகின்றனர்….

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆதிரை பானுமதி

    பேரா. முனைவர். ப. பானுமதி மலேசியாவில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அரங்கத்தலைமை வகித்ததோடு “பெரிய புராணத்தில் பேசப்படாத பெண் புராணங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். அரங்கத்தில் மேனாள் இந்திய ஆட்சிப் பணியாளர் கற்பூர சுந்தர பாண்டியன், முனைவர். வாணி அறிவாளன், முனைவர். திலகவதி   ஆகியோர் ஆய்வுக்கட்டுரை வாசித்தனர். அரங்கத்தில் நீதியரசர் வள்ளிநாயகம், கவிவேந்தர் க. வேழவேந்தர், பேரா. இரா.மோகன், பேரா. நிர்மலா மோகன், இரா.மதிவாணன், கலைமாமணி சோபனா இரமேசு, சிங்கப்பூர் பதிப்பாளரும் பொறியாளருமான…

தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி!

தமிழ்ப்பற்றுக்கு வழி வகுக்கும் விசய் தொலைக்காட்சி! தேர்வு முறையில் நடுநிலையைப் பின்பற்றுக!   மக்கள் தொலைக்காட்சி நீங்கலான தொலைக்காட்சி நிறுவனங்கள் தமிழ்க்கொலையையே தொழிலாகக் கொண்டுள்ளன. சிறிய தொலைக்காட்சி நிறுவனங்கள் கதைத் தொடரை ஒளிபரப்பாமல் பண்பாட்டுக் கொலைபுரியாமல் தொண்டு புரிகின்றன. அவ்வாறிருக்க விசய் தொலைக்காட்சி – அதுவும் சீ சீ என்பதுபோல் பெயருக்குப்பின்னர் பாட்டியம்மா சொல்வதும் முதல் எழுத்துகளைத் தமிழில் குறிப்பிடும் தொகுப்பாளரும் அவ்வாறே சொல்லத் தொடங்கியுள்ளதும் பாடல்நிகழ்ச்சிகளில்கூட சாங்கு, சிங்கர், சூப்பர் போன்று ஆங்கிலச் சொற்களைக் கூறுவதையே கடமையாகக் கொண்டுள்ளதுமான விசய் தொலைக்காட்சி –…

திருவரங்கம் வாக்காளர்களை ‘மக்கள் நல்வாழ்வு இணையம்’ அழைக்கிறது

  நேர்மையும் நாட்டுப்பற்றும் மிக்க நண்பர்களே! வணக்கம்   இந்திய/தமிழக அரசியலில் நேர்மைக்கு இடமளிக்க வேண்டிய தருணமிது .இதில் நாம் தவறுவோமானால் எதிர் காலப் பரம்பரையினர்க்கு நேர்மை என்ற சொல்லே தெரியாமல் அழிந்துவிடும் .நமது இன்றைய அரசியல்வாதிகள் வெள்ளைக்காரர்களே வெட்கப்படும்படி எந்த அளவுக்கு நாட்டைச் சுரண்டி வருகிறார்கள் என்பதை நாடே அறியும் . அவர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டியது இரண்டாவது விடுதலைப்போராட்டத்துக்கு ஒப்பானது .இதற்கு ஒரு காந்தி பிறக்க மாட்டார்;- நாம் தான் செய்யவேண்டும்.   இதை உணர்ந்த ஊழலை எதிர்க்கும் நேர்மையாளர்களின் கூட்டமைப்பு…

திருவரங்கம்: அ.தி.மு.க.விற்கு ஆதரவு – ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு

திருவரங்கம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு   திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு ஓய்வுஆசிரியர் சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறையில் மடிகணிணி முதற்கொண்ட 14 வகை சலுகைகளை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. திருச்சியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிப் பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்;தலைவர் திருமலைச்சாமி,…

திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை

 திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கித் துண்டறிக்கைகளைத் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்   ஆர்.பார்த்திபன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், தேனிமாவட்ட அம்மா பேரவைச் செயலர் வரதன், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர், பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, அப்துல்கபார்கான் முதலான பலர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து…

பண்பாட்டு உணவுத் திருவிழா – பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி

அன்புடையீர், வணக்கம்.                நமது பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் பண்பாட்டு உணவுத் திருவிழா இந்த ஆண்டு வரும் கும்பம் 3 (15-02-2015) ஞாயற்றுக் கிழமை அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம். உங்கள் வருகை விழாவைச் சிறப்பிக்கும். வாருங்கள்.  நன்றி! ச.வெற்றிச்செழியன் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி, குன்றத்தூர். 044 24782377,9840977343

திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்

    திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…