கற்கால மொழி தமிழே! – பி.டி.சீனிவாச ஐயங்கார்

கற்கால மொழி தமிழே! மனிதன் தென்னிந்தியாவின் நடுப்பகுதியில் தான் தோன்றியிருக்க வேண்டும். புதுக் கற்கால மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றை – பெரிதும் தமிழையே பேசியிருக்க வேண்டும். -பி.டி.சீனிவாச ஐயங்கார்

வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே!

வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே  தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும். – இரா.வேங்கட கிருட்டிணன்: தமிழே முதன் மொழி: பக்.389 – தமிழ்ச்சிமிழ்  

கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus

72. விண்டு-Stratocumulus விண்டு   விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது.   விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…

கலைச்சொல் தெளிவோம்! 71. முதிரம்-Cumulonimbus

 71. முதிரம்-Cumulonimbus முதிரம்   புறநானூற்றில் வரும் இரு பாடல்களிலுமே உயர்கொடை வள்ளல் குமண மன்னன் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட முதிரமலையையே முதிரம் என்பது குறிக்கின்றது. பின்னரே இச்சொல் முகிலைக் குறிப்பதாய் அமைந்துள்ளது.   மூவாயிரம் பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள அடுத்த முகில்கூட்டத்தின் பெயர் கியூமுலோநிம்பசு-Cumulonimbus என்பதாகும். இதனையே முதிரம் எனக் குறிக்கலாம். முதிரம்-Cumulonimbus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 70. மஞ்சு-cumulus

70. மஞ்சு-cumulus  மஞ்சு (11) விசும்பிற்கு மேற்பட்ட நிலையில் ஈராயிரம் பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள முகிலை அடுத்துப் பார்ப்போம். பின்வரும் பாடல் அடிகள் மழையைச் சுற்றி மஞ்சு எனப்படும் முகில் கூட்டம் அமைந்துள்ளதை விளக்குகின்றன. மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த (நற்றிணை: 154:1-4) மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து (கலித்தொகை: 49.16) அகல்இரு வானம் அம்மஞ்சு ஈன(ப்), (அகநானூறு: 71.8) முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் (புறநானூறு:103: 6.7) மஞ்சு…

கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus

69. விசும்பு-stratus  எழிலிக்கு அடுத்த அடுக்கில் 1000 பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள பாவடி முகில் குறித்து அடுத்துப் பார்ப்போம்.  விசும்பு என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் 164 இடங்களில் கையாண்டுள்ளனர்; விசும்பு வானத்தையும் குறிக்கின்றது, வானத்தில் உள்ள முகில்கூட்டத்தையும் குறிக்கின்றது. முகில் என்னும் பொருளில் ‘விசும்பு’ வரும் சில இடங்கள் வருமாறு : ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட (திருமுருகு ஆற்றுப்படை : 115-116) நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாணாற்றுப்படை :…

காப்புறுதி அளித்துத் தன் காப்பை இழந்தவர் – கதையல்ல உண்மை!

பிணைக்கையொப்பம் இடுவோர் விழிப்பாக இருங்கள்!   “பனை மரத்தில் பாதி தூரம் ஏறுவதும் பிணைக் கையெழுத்திடுவதும் ஒன்று” என்பது முதியோர் வாக்கு. “நுங்கு தின்றவன் ஓடிப்போய்விட்டான். மட்டையை நோண்டித் தின்றவன் அகப்பட்டுக்கொண்டான்” என்பது பழமொழி. அவ்வாறு பிணைக் கையெழுத்திட்டு ஓய்வூதியக்காலத்தில் நிம்மதியாகக் காலத்தை ஓட்டாமல் மிகுந்த மனஉளைச்சலடைந்து, பணத்தையும் இழந்து, மனநிம்மதியையும் கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.   திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டியின் மகன் சடையாண்டி. இவர் அஞ்சல்துறையில் உதவி அஞ்சல் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அஞ்சல் துறையில்   இராசராசன்(குசிலியம்பாறையில் உதவி அஞ்சல் தலைவர்) என்பவரும்…

கலைச்சொல் தெளிவோம்! 68. எழிலி-nimbostratus

 68. எழிலி-nimbostratus   முகிலியல் (science of clouds)   முகில் கூட்டங்களை முகில் (அல்லது மேகம்) என்றே நாம் வேறுபாடு அறியாமல் கூறுகிறோம். கிளெடு (cloud) எனில் முகில் என மனையறிவியலிலும், முகில், மேகம் எனப் பொறிநுட்பவியல் புவியறிவியல் ஆகிய துறைகளிலும் கொண்டல், மேகம் என வேளாணியலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம்…

திருவண்ணாமலையில் ஆசிரியையின் முயற்சியால் அரசுப் பள்ளிக் கட்டடம்

   திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது துளுவபுட்பகிரி என்னும் சிற்றூர். வானம் பார்த்த பூமி. இச்சிற்றூரில் உள்ள பள்ளியானது கல்நார் (Asbestos) ஓட்டினால் ஆன கட்டடம். அந்த பள்ளி 1952 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளமாகிவிடும்; வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் வெப்பம் தகிக்கும். இருப்பினும் இவற்றையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாகப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றி வரும்…

தமிழ் முழக்கம்! – சுத்தானந்த பாரதியார்

“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்”   . கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்

பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்      டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம்      தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்      வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – தமிழ்விடு தூது: 17-19

திறம் வாய்ந்தவை தமிழ்ச்சொற்களே!

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக் கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித் தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்! – பரஞ்சோதிமுனிவர்: திருவிளையாடற் புராணம்