ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே !

ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே!   பழமையான நாகரிகச் சின்னங்கள் கிடைத்த இடங்களில் சிந்துவெளிக்கரையில் அமைந்துள்ள “ஆரப்பா’ “மொகஞ்சதாரோ’ ஆகியன குறிப்பிடத்தக்கன. இங்குக் கிடைத்த பானை ஓடுகள், முத்திரைகள் ஆகியவற்றில் நட்சத்திரக் குறியீடுகளும், கோள்களின் குறியீடுகளும் காணப்படுகின்றன.   தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுகமாகப் பண்டைய காலத்தில் திகழ்ந்த கொற்கையை இப்போது ஆராய்ந்த போது இங்குக் கிடைத்த பல பானை ஓடுகளில் நட்சத்திரக் குறியீடுகளைப் போலவே கொற்கையில் கிடைத்த குறியீடுகளிலும் காணப்படுகுன்றன. கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்க ஆறுமீன்கள் குறியீடாகக் காணப்படுகின்றன. செவ்வாய்க் கோளைக்…

சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள்

சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள் பச்சை மரத்தில் கூரிய கற்களைக் கொண்டு சாலை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதைத் தமிழர்கள் பொறித்து வைத்திருந்தனர். வழிப்போக்கர்களுக்கு உதவியாக எழுதப்பட்டவற்றைச் சாதாரண மக்களும் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது புலனாகும். “செல்லும் தேஎத்துப் பெயருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த“ – மலைபடு கடாம்

மழை வேண்டும்!

ஊசி போல மின்னி மின்னி                 ஊர் செழிக்கப் பெய்யும் மழை காசு போல மின்னி மின்னி                 காடு செழிக்கப் பெய்யும் மழை பணம் போல மின்னி மின்னி                 பட்டண மெல்லாம் பெய்யும் மழை தேச மெல்லாம் செழித்திடவே                 செல்ல மழை பெய்ய வேண்டும் செல்ல மழை பெய்திடவே                 குளங்க ளெல்லாம் பெருக வேண்டும் பெருகி நின்ற குளங் களிலே                 பெருமை யோடு ஆட வேண்டும் – நாட்டுப்புறப் பாடல்  

ஏர்வாடியார் அழைக்கிறார் – கவிதை உறவு 43 ஆம் ஆண்டுவிழா

வைகாசி 4, 2046 / மே 18, 2015  திங்கட் கிழமை சென்னை (அழைப்பிதழ் திருத்தப்பட்டு விட்டது.) ஆண்டு தோறும் கவிதை உறவு வழங்கும் சிறந்த நூல்களுக்கான பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூல்கள் நூலாசிரியர்கள் பட்டியல் இது. பரிசு பெற்றோர்களுக்குப் பாரட்டுகளும் மற்றவர்களுக்கு வரும் ஆண்டுகளில் பரிசு பெற வாழ்த்துகளும்.

திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!

திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!   நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் சாலைகள் ஒழுங்காகச் சீரமைக்கப்படாததால் சாலை நேர்ச்சி(விபத்து)கள் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு முதலான இறைவழிபாட்டு இடங்களும் தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால், வேதாரண்யம் முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. இப்பகுதியைக் காண ஏராளமான சுற்றுலா ஊர்திகள் வருகை புரிகின்றன. இதன்மூலம் சுற்றுலாவை மையப்படுத்தி சுற்றுலா…

தேவதானப்பட்டியில் இரண்டாம் போகம்

தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் அறுவடைக்குத் தயாரான நிலங்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் நெல் பயிரிடலுக்கு உழவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.   இப்பகுதியிலுள்ள நெல்வயல்கள். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாம் போக உழவுக்கு ஆயத்தமாகி தயாராகி வருகின்றன நெல்வயல்கள்.   தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நெல்வயல்கள் தரிசாகக் கிடந்தன. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னால் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள், கிணறுகள்,…

மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்

மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்   நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலகம் உள்ளது.   இப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில், தங்கள் குறைகளை அரசு களையும் என்ற நம்பிக்கையில் பதிவு அஞ்சலில் தங்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு அனுப்பச் செல்கின்ற பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம், “இங்கு பதிவஞ்சல் அனுப்ப முடியாது. தலைமை அஞ்சலகம் அல்லது மற்ற அஞ்சலகங்களுக்குச் சென்று அனுப்புங்கள்” எனக்கூறுவதும், பொதுமக்களை ஒருமையில் பேசுவதும்   அஞ்சலகப் பணியாளர்களின்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 4

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) காட்சி நான்கு அயோத்திய புரியில் தொடங்கிய அசுவமேத வேள்வி  இடம்: அயோத்திய புரி அரண்மனை நேரம்: மாலை பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிசி வசிட்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரண்டு வயதுப் பாலகர்கள்: இலவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.  [அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிடுகிறான். மகரிசி வசிட்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து வேள்விக்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத்…