முழுமையாக முடங்கியது வட மாகாணம்

இலங்கை முழு அடைப்புப் போராட்டம் – முழுமையாக முடங்கியது வடக்கு மாகாணம்   வவுனியாவில் மாணவி அரிசுணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடிய நிகழ்வுக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் பிப்ரவரி 24, 2016 அன்று முழுமையாக முடங்கியது.  பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள…

அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்

  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.   அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. நன்றி முனைவர் சா.இராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]

வணிகச் சட்ட வாரியத்தில் 109 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    வணிகச் சட்ட வாரியத்தில் காலியாக உள்ள 109 பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: துணைப் பதிவாளர் (Deputy Registrar) – 09 பணி: உதவிப் பதிவாளர் (Assistant Registrar) – 07 பணி: நீதிமன்ற அலுவலர் (Court Officer) – 13 பணி: அணுக்கச் செயலர் (Private Secretary) – 33 பணி: கணக்கு அலுவலர் (Accounts Officer) – 02 பணி: முதன்மைக் கணக்காளர் (Senior Account)…

புதுச்சேரியில் வீடுதோறும் திருக்குறள் இயக்கம்

  தனித்தமிழ் இயக்கமும் புதுவைத் திருக்குறள்மன்றமும் இணைந்து வீடுதோறும் திருக்குறள் அன்பளிப்பாகத் தரும் முயற்சியில் 2047 மாசி / கும்பத்திங்கள் 11ஆம் (23.2.2016) நாளில் ஈடுபட்டன.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் திருக்குறள் மன்றத்துணைத்தலைவர் கலைமாமணி சுந்தர.இலட்சுமி நாராயணன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி, தனித்தமிழ் இயக்கப் புரவலர் கி.கலியபெருமாள், தூ.சடகோபன் முதலியோர் அப்பணியில் ஈடுபட்டனர்.   புதுச்சேரிச் சிவாசி நகரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை வரவேற்றனர்.

கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி

கப்பல் கட்டும் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி  கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் கப்பல் கட்டுமானர் – பொறியாளர் நிறுவனம் (Garden Reach Shipbuilders & Engineers Limited) எனும் குழுமத்தில் 20 இளநிலை மேலாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தக் காலியிடங்கள்: 20 பணி: இளநிலை மேலாளர் [Junior Manager (E-0)] தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல் (Mechanical), மின்னியல் (Electrical), மின்னணுவியல் (Electronics) பிரிவுகளில் பட்டயத் (Diploma) தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் பணியறிவு(அனுபவம்) பெற்றிருக்க வேண்டும். தேர்வு…

எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி

ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது! – நளினி வேதனை      “சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்” என்று அரைநாள் காப்பு விடுப்பில்(parole) தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்தியச் சிறைகளிலேயே, தண்டனை அடைந்துள்ள பெண் கைதிகளில், மிகுதியான காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி.   முன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) இராசீவு காந்தி…

இலங்கைச் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐவரின் உடல்நிலை கவலைக்கிடம்

  இலங்கையில், தங்கள் விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சிறைவாசிகளில் ஐவருடைய நிலைமை பாதிப்புக்குள்ளாகி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் மூவர் சிறைப்பிரிவு மருத்துவமனையில் பிப்பிரவரி 25 அன்று சேர்க்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இசைவான மறுமொழி அரசிடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்ச் சிறைவாசிகளில் தெரிவித்துள்ளனர்.   கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்  சிறைவாசிகள் பதினைந்து பேரும், அநுராதபுரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் இரண்டு பேரும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திச்…

சா.வி.கூட்டுறவு வங்கியில் (S.V.Co-op.Bank) பணிவிண்ணப்பங்கள் வரவேற்பு

  மும்பையிலுள்ள சா.வி.கூட்டுறவு வங்கியில் (S.V.Co-op.Bank) எழுத்தர், அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!   மும்பையில் உள்ள சா.வி.கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள 104 எழுத்தர் (Clerk), அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: வாடிக்கையாளர் சேவை அலுவலர் (இளநிலை மேலாண்மைத் தரம்) [Customer Service Officer (Junior Management Grade)] – 24 அகவை (வயது) வரம்பு: 31.03.2016 நாள்படி அகவை 32க்குள் இருக்க வேண்டும். தகுதி: 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்….

மாமனிதர் இரா.நாகலிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் செருமனியில் வரும் பங்குனி 14, 2047 – 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு  நடைபெற உள்ளது. தரவு:  

தமிழக வாழ்வாதார அழிப்பு – கருத்தரங்கம்

இந்திய எரிவளி ஆணையக் (GAIL) குழாய்கள் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்   மாசி 08, 2047 – 20-2-2016 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை இதழாளர் மன்றத்தில் இந்திய எரிவளி ஆணையக் (ழுஹஐடு) குழாய்ப் பதிப்பின் கண்டத்தை(ஆபத்தை) விளக்கும் இதழாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்சார்பு உழவர்கள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன், இந்திய எரிவளி ஆணையக் (GAIL)…

தமிழுக்காக வாதாடினால் சிறையா? வழக்குகளைத் திரும்பப் பெறுக! – திருமாவளவன்

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ் வழக்குமன்ற மொழியாகப் போராடி வரும் வழக்குரைஞர் பீட்டர் இரமேசு குமாருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். இராமசுப்பிரமணியன், கே.இரவிசந்திரபாபு ஆகியோர்,  6 மாதச்சிறைத்தண்டனையும் நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ்த் தண்டனை பெற்றவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகச் செயல்படமுடியாது என்பதன் அடிப்படையில்  வழக்குரை உரிமைப் பறிப்பும் விதித்துள்ளனர். எனினும் மேல் முறையீட்டிற்காக இத் தண்டனையை 15 நாள் நிறுத்தி வதை்துள்ளனர். இது குறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு…

தாய்மொழிநாளில் பேரா.மறைமலை காணுரை – ‘சன்’ தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சிக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அளித்த நேர்காணல் – உரை வடிவில்   இந்த ஆண்டு ‘உலகத் தாய்மொழி நாள்’ (மாசி 09, 2047-பிப்பிரவரி 21, 2016) அன்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சன் தொலைக்காட்சியின் ‘விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சியில் ‘உலகத் தாய்மொழி நாள்’ குறித்து அளித்த நேர்காணலின் உரை வடிவம்.   தொகுப்பாளர்: ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடுகிறோம். உலக நாடுகள் எல்லாமே இந்த நாளை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றன. இந்த நாளை…