புசல்லாவ சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”

புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் “குரு பூர்ணிமா பூசை”   ஆடி மாதத்தில் வரும் முழு நிலவு நாள் அன்று சீடர்கள் தங்களுக்குக் கல்வி புகட்டிய குருவைப் போற்றும் முகமாகக் குரு வழிபாடு எனும் குரு பூசை செய்வதே குரு பூர்ணிமா எனப்படும். அந்த வகையில்  புசல்லாவ  சிரீ விவேகானந்தா அறநெறிப் பாடசாலையும் இந்து இறைஞர் மன்றமும் இணைந்து குரு பூர்ணிமா பூசையை ஆடி 04, 2047 / சூலை 19, 2016 அன்று நடாத்தியது.   இதில்  தலைமை விருந்தினராக மத்திய…

மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!

மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு!   தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுதல் நிகழ்ச்சி   நடைபெற்றது.   நிகழ்வில் மாணவர் விசய் வரவேற்றார். தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  தேவகோட்டை சன்மார்க்கச் சங்கம் நடத்திய போட்டிகளில் பங்கேற்று  பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்ற மாணவிகள் காயத்திரி, உமாமகேசுவரி, தனலெட்சுமி ஆகியோருக்கும், அழைத்துச் சென்ற ஆசிரியை கலாவல்லிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவி சந்தியா நன்றி கூறினார்….

விரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்

விரல் நுனிகளில் தீ! தீ! – அவள் விரல் நுனிகளில் தீ! மிகஅழகிய முகமும் – ஒரு கொடியசைகிற உடலும் இளவயதினள் கனிமொழியினள் எழிலுருவினள் எனினும் – அவள் விரல் நுனிகளில் தீ கண்ணனைத் தொட்டவளோ – கவிதை எழுதுவதால் வெம்மை யுற்றவளோ கண்ணகி யாய்த்தன் காற்சிலம்பை – எறிந்து விட்டவளோ ஊரைச் சுட்டவளோ – அவள் விரல் நுனிகளில் தீ வீணை இசைப்பாளோ – ஓவியம் தீட்டி இழைப்பாளோ சின்ன குழந்தையைத்தன் – நெஞ்சில் வாரி அணைப்பாளோ தென்றலை ஒதுக்கிவிட்டுக் – கை…

ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05

(பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 தொடர்ச்சி) ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை! பேரறிவாளன்  குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05 [வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!]   ஆடி 16, 1971 / 1940, சூலை 31 – இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இங்கிலாந்து சிறையொன்றில் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் கொலைக் குற்றத்துக்காகத் தூக்கிலிடப்பட்டார்….

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35  உமா மகேசுவரம்பிள்ளை   தமிழகத்தில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் தொண்டர் இவர். தஞ்சை மாவட்டத்தின் நாட்டாண்மைக் கழகத் தலைவராய் இருந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் மாணவர்க்கு(பார்ப்பனர் அல்லாதார்) படிக்க உதவிகள் செய்தவர். ‘தமிழ்ப் பொழில்’ என்னும் மாத இதழை நடத்தியவர். தூய செந்தமிழ்த் தொண்டர். இத்தகைய பெரியார் மறைவு குறித்து ‘துன்பமாலை’ என்னும் தலைப்பில் கவிதை பாடியுள்ளார், இலக்குவனார். அறுசீர் ஆசிரிய விருத்தத்தால்…

அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு

(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – தொடர்ச்சி) அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு: காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் பெயர் மாற்றம்:   இழப்பீட்டையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் மைய நிறுவனமாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்(Office for Missing Persons – OMP) செயல்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது தொடர்பில் குழப்பங்களும், புரிதலின்மையும், நம்பிக்கையின்மையும், நிறைவின்மையும் (dissatisfaction) உண்டு.  ‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்கிற…

பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்! – இல.அம்பலவாணன்

பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!  மீண்டும் அதே கூக்குரல்! அதே ஓலம்! அதே குற்றச்சாட்டுகள்! அதே  குறைகூறல்கள்! மீண்டும் அதே கருத்து வெளிப்பாடுகள்! அதே உணர்வுவயப்பட்ட நிலைமை! அதே முகங்கள்!  அதே குரல்கள்! மீண்டும், ஆம், மீண்டும்….!   கடந்த திசம்பர் மாதம் 2012இல்  நிருபயா மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக அதே குரல்கள் அதே குறைகூறல்கள், அதே குற்றச்சாட்டுகள்.  யாருக்கு எதிராக? யார் மீது? அதுவும் மீ;ண்டும், அதே போல –  குமுகாயத்தின் மேல், சட்டம் தரும் பாதுகாப்பு மேல், காவல்துறை மேல்,…

மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவிழா

  மாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய  சிற்றூர்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  மன்பதை மேம்பாட்டு(சமுதாய அபிவிருத்தி) அமைச்சர் பழனி திகாம்பரம் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  ரோகினி கவிரட்ன  முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்

மலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த கோயம்புத்தூர் சுழற்கழகம்.   நுவரெலியா  சுழற் கழகம் இந்தியாவின் கோயம்புத்தூர் சுழற்கழகத்துடன் இணைந்து இயற்கைப் பேரழிவால் அல்லது  நேர்ச்சிகளால்(விபத்துக்களால்) ஒரு பகுதி கைதுண்டிக்கப்பட்டவர்களுக்குச் செயற்கைக் கைகளை வழங்கியது.   இதன்போது ஆறு செயற்கைக் கைகளைக் கோயம்புத்தூர்  சுழற்கழகத்தின் செயலாளர்  செயகாந்தன், நுவரெலியா  சுழற்கழகத் தலைவர் உசித பண்டாரவிடம் கையளித்தார். பயனாளிகளுக்குக் கைகள் வழங்கப்படுவதையும்  நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வின்சண்டு அசோகனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கவிஞன் – தமிழ்ஒளி

கவிஞன் மோனக் கருக்கலிலே – விண் முத்தொளி தோன்றுகையில் வானக் கடல்கடந்தே – அதை வாங்கிவர விரைவேன்! முத்துப் பனித்துளியில் – கதிர் முத்த மளிக்கையிலே பித்துக் கவிபுனைந்தே – மணம் பேசி மகிழ்ந்திடுவேன்! சாயும் கதிர்களிலே – இருட் சாலம் புரிகையிலே காயும் நிலவெனவே – வழி காட்ட எழுந்திடுவேன்! நீலக் கடல்அலையில் – கதிர் நெய்த வலையிடையே கோலக் குளிர்மணிபோல் – கவி கொட்டிச் சிரித்திடுவேன்! ஊரை எழுப்பிடவே – துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன் – தமிழ்ச் சாதி…

சிங்களப் படையே வெளியேறு!

 வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கிலுள்ள மாவட்டங்களின் இளைஞர்கள்,  இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நேற்று நகரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கலை மண்டபத்தில் தங்கியுள்ள படையினருக்கு எதிராக இன்று முற்பகல் 9 மணிக்கு இந்தப் போராட்டம்  தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தப் போராட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வழியாகக் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.  பேருந்தில் பயணித்த போராட்டக்காரர்கள் ஒவ்வோர் இடத்திலுமுள்ள படைமுகாம்களுக்கு முன்னாலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

தகவல் உரிமைச் சட்டம் : பயிற்சி-உதவி முகாம், திருநெல்வேலி

தகவல் உரிமைச் சட்டம் மூலம் அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு பெறுவது எப்படி? பயிற்சி-உதவி முகாம் நடைபெறும். நாள்: ஆடி 15, 2047 /  30-7-16  சனிக்கிழமை 9.00  முதல் மாலை 4.00 மணி வரை முகவரி: தமிழக மக்கள் சனநாயகக் கட்சி அலுவலகம் 1, அல்பராக்க வணிக வளாகம் அம்பை  சாலை மேலப்பாளையம் சந்தை மேலப்பாளையம் திருநெல்வேலி கட்டணம்: கற்றதை  அருகமை மக்களுக்குச் சொல்லித்தருவோம் என்ற உறுதி அளிக்கவேண்டும். நிலம் வீடு மனை தவறான உரிமையாவண மாற்றம், தவறான பத்திரப் பதிவு  நீக்கம், நிலக்கவர்வு,…