ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன்  நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமானால், கோப்பெருஞ்சோழ வேந்தரையும் புலவர் பிசிராந்தையாரையும்தான் கூறுவோம். உலக அளவில்,     புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்     நட்பாங் கிழமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 785) என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இவர்கள்.   தமிழுலகில் மன்னர் பாரி – புலவர் கபிலர்,  மன்னர் அதியமான் – புலவர் ஔவை எனப் பலரை நாம் நட்பிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.   மார்க்சு – எஞ்சல்சு நட்பையும் உலகம் போற்றுகின்றது. இருப்பினும் தோழமைக்கு எடுத்துக்காட்டாகத்…

பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2

பணம் செல்லாமை : இன்னலுக்கு ஆளாக்கப்படுபவர்களையே பொன்மாலை சூட்டச்செய்யும் நரேந்திரர்(மோடி) 1/2   குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.  (திருவள்ளுவர், திருக்குறள் 504)  எந்த ஒரு திட்டத்திலும் நல்லனவும் தீயனவும் கலந்தே இருக்கும். எவை மிகுதியாக உள்ளன? எவை நிலைத்த தன்மையுடையன? என்பனவற்றின் அடிப்படையிலேயே அத்திட்டத்தின் தேவையை நாம் உணர இயலும். கடந்த ஐப்பசி 23, 2047 / நவம்பர் 08, 2016 அன்று இந்தியத் தலைமையர் நரேந்திரர்(மோடி) 500 உரூபாய், 1000 உரூபாய் பணத்தாள்கள் செல்லா என அறிவித்தார்….

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை

மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! 500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள,  தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம்  நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம்.  …

பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு

பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு   பணத்தாள்கள் செல்லாதென அறிவித்ததால் ஏற்பட்டுள்ளஇன்னல்களுக்கு  காரணமான மத்திய  அரசைக்  கண்டித்துத் தமிழகம் முழுவதும் தி.மு. கழகத்தின் சார்பில்  கார்த்திகை 09, 2047 / நவ. 24 – அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெறும் எனத்  தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ச.க. அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல்,…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 2/7   இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு:   பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார்.   “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6 உரைநயம் உணர்த்தும் உரை வளம்   இலக்குவனார், இருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார். பேராசிரியரின்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) – இன்பந் துய்த்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 35. இன்பந் துய்த்தல்   341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம். வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும். துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும். இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல். இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும். தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம். தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு…

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 9/9 – பெங்களூரு முத்துச்செல்வன்

(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 8/9  தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 9/9  அத்துடன் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியபோது. “இந்தியால் தமிழ் கெட்டுவிடும் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்தியால் மட்டுமல்ல வேறெந்த மொழியாலும் நமது மொழியைப் பொறுத்தவரையில் கெட்டுவிடாது. ஆனால், இந்தியால் நமது பண்பாடு அடியோடு அழிந்துவிடும். இப்போதே வடமொழி நம் நாட்டில் புகுந்து, நமது பண்பாடு எவ்வளவு கெட்டுவிட்டது?” என்று கருத்தறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (விடுதலை 15.8.1948). தமிழை எம்மொழியாலும் அழிக்க முடியாது…

தமிழ் இலக்கிய, இலக்கணச் சொற்கூறுகளும் சொல்லடைவும் – வலைத்தளம் அறிமுகம்

சங்கத்தமிழ் சொற்பேழை பேராசிரியப் பெருமக்களே! ஆய்வு அறிஞர்களே! மாணவக் கண்மணிகளே! அரிய படைப்பாகிய ’ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு’ என்னும் அறிய நூலிற்கு பிறகு http://drkamatchi.in/ (SANGAM CORPUS AND CONCORDANCE) என்னும் வலைத்தளம் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், கணினி மொழியியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களுக்காகப் புதியதோர் கோணத்தில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வலைத்தளம் பற்றி: இவ்வலைத்தளத்தில் எட்டுத்தொகை இலக்கியங்களில் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றையும் திருக்குறள், இன்னாநாற்பது, இனியவை நாற்பது போன்ற நூல்களுக்குத் தமிழ் அகரவரிசைப்படி அகராதியும் ஆங்கில அகர வரிசையில் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது….

பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 : செ. இரவிசங்கர்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 தொடர்ச்சி) திருக்குறள் உரைச் சிறப்பு   2/2  சுருக்கம்:         ‘சுருங்கச் சொல்லி   விளங்கவைத்தல் ’  என்பது போல  திருக்குறளுக்கான  உரையை மிகச் சுருக்கமாகச்  சொல்லி  புரிய வைத்துள்ளபணியை இலக்குவனார்  மிகத் தெளிவாகச்  செய்துள்ளார்.  இலக்குவனார்  சுருக்கமாக  உரை யெழுதக்  காரணம் யாது? “ஓரளவு  படிப்பறி வுடையோரும் புரிந்துகொள்ளும்  வகையில்  திருக்குறள்  எளிய  பொழிப்புரை  எழுதினார்” என்று  மறைமலை கூறுகிறார். எனவேதான் சுருக்கமான  கருத்தை எழுதியுள்ளார் எனலாம்.   திருக்குறளில்  அதிகாரத்திற்கு  அமைந்துள்ள  தலைப்பை உரையாசிரியர்கள்  விளக்க…

குழந்தை இலக்கிய விருதாளர்களுக்கு நந்தவனத்தின் பாராட்டு

கார்த்திகை 11, 2047  / நவம்பர் 26, 2016 திருச்சிராப்பள்ளி நந்தவனம் நிறுவனம் கோவிந்தம்மாள் தமிழ் மன்றம்

1 3 4 5 9