“தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” : பேராசிரியர் சு. பசுபதி

     ஐப்பசி 27, 2047 / நவம்பர் 12, 2016  உலகத்தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் மின்னியற்றுறைப் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் ”தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் மிகவும் விரிவாகவும் கருத்துச்செறிவாகவும் பேசினார்.   இந்நிகழ்ச்சி தொராண்டோ அருகே உள்ள இசுக்கார்பரோ (Scarborough) நகரில் நடைபெற்றது. அவர் பேச்சைக் கேட்க வாட்டர்லூவில் இருந்து சென்றிருந்தேன். சாலை நெரிசலின் காரணமாகக் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்குக் கேட்கக்கிடைத்த பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரப் பொழிவை இங்கே பகிர்கின்றேன்.  அரிய நுணுக்கமான…

செல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்

‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும்  தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி  இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா,  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும்  படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது.  தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை  அவையோர் இருந்து  களித்து மகிழ்ந்தமை…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங‌ே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி  இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்: “வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – உயிர்த்துணை யாளுதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 33 (2.03) – தொடர்ச்சி)   மெய்யறம் இல்வாழ்வியல் 34.உயிர்த்துணை யாளுதல் 331. இருவரு ளறிவிற் பெரியவ ராள்க. கணவன், மனைவி இவர்களில் அறிவில் சிறந்தவர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தல் வேண்டும். ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க. ஆண்கள்தான் சிறந்தவர் என்று கூறுவது பயனற்ற பேச்சு ஆகும். துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையாக வாழ்பவர் உலகம் முழுவதும் வெற்றி கொள்வர்.(எல்லா இன்பங்களும் அடைந்து வாழ்வர்.) தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன. ஒருவருடைய உயிர், உடல், பொருள் எல்லாம்…

செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்

செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு  வழிகாட்டினர்   பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டையில் இருந்தாலும் தலைநகரில் உள்ள வசதியான பள்ளி போன்று மாணவர்களை  இற்றைநாள்(up to date) விவரம் அறிந்தவர்களாக ஆக்குவதிலும் கல்வியுடன்  பிற துறை நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதிலும் முன்னணியில் உள்ளது.  எனவே, இன்றைய தலையாயச் சிக்கலான செல்லாததாக அறிவிக்கப்பட்ட  500 உரூபா, 1000 உரூபாய் பணத்தாள்களை மாற்றுவது எப்படி என்று விளக்கி உள்ளனர்.  இக்கூட்டத்தில் பள்ளி மாணவர் விசய் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை…

கவிஞர் சிற்பியின் ‘ கருணைக்கடல் இராமாநுசர் காவியம் ‘ நூல் அறிமுக விழா

வணக்கம். தொடர்ந்து நீங்கள் இலக்கியவீதி நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிப்பதற்கு நன்றி. இது இலக்கியவீதி அமைப்பின், வழக்கமான மறுவாசிப்பு நிகழ்ச்சியல்ல. வழக்கமான இடத்திலும் அல்ல. இது இந்த மாதக் கூடுதல் சிறப்பு நிகழ்ச்சி. வழக்கம்போல் இந்த நிகழ்வுக்கும் , உறவும் நட்புமாய் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  கார்த்திகை 05, 2047 / 20.11.2016 ஞாயிறு மாலை 05.30. (தேநீர்:  05. 00 மணி) சிரீ இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, தண்டபாணி தெரு, (தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில்.. பர்கிட் சாலை வழி.) இலக்கியவீதியும், சிற்பி…

அட்டைப் படம் சொல்லும் கதை

அட்டைப் படம் சொல்லும் கதை புத்தக அட்டைப் படம் உருவாக்கம் பற்றிய தன்னுடைய பட்டறிவுகளை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறார்  அட்டைப் பட வடிவமைப்பாளர், எழுத்தாளர் திரு.சந்தோசு நாராயணன் கார்த்திகை 05, 2047 / 20-11-2016, ஞாயிறு, மாலை 5.30 மணி பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர் 044-431-00-442 | 9789009666 www.panuval.com | fb.com/panuval | twitter.com/panuval

புதிய தமிழ் ஆய்வுகள் – அமர்வு 8

புதிய தமிழ் ஆய்வுகள் – அமர்வு 8   நாள்:கார்த்திகை 04, 2047 / 19-11-2016 சனிக்கிழமை மாலை 5.30   இடம்: பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர் ஆய்வுப் பொருள்: தொலைக்காட்சி ஊடகம் – ஓரு பார்வை ஆய்வுரை வழங்குபவர்: சுரேசு பால், துறைத் தலைவர், காட்சித் தொடர்பியல் துறை (Dept. Of Visual Communication), இலயோலா கல்லூரி   ஆய்வுரைச் சுருக்கம்: தொலைக் காட்சி ஊடகம் இந்தியாவில் வேர்விட்ட வரலாறு – இந்த ஊடகத்தின் தன்மைகள் – நிகழ்ச்சி வகைகள் –…

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017  வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017   பங்களிப்பும் படைப்பும் வேண்டல் ஆங்கிலத்திலுள்ள முழுவிவரத்திற்கும் பதிவுப்படிவத்திற்கும்  காண்க : http://thiru2050.blogspot.in/2016/11/2017_18.html   ஆசியவியல் நிறுவனம், சென்னை உலகத்தமிழர் பேரவை, மொரிசியசு

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி     அபுதாபி அரோரா  நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு  வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி  சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல  முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின்…

இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்!    கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள். தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார். அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில்  ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய…

1 4 5 6 9