கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்! – சிவ.சூரிய நாராயணன்

கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்!   கூடல் திருநகரில் கூடிக் களித்திருந்த பாடல் தொழில்செய்யும் பைந்தமிழ்ச் சங்கத்தார் ஏடுதனில் உள்ளம்மை ஈதென்ன விந்தையென்றே ஈடில் மொழியம்மை இன்னமுத ஊற்றம்மை கேடில் விழுச்செல்வம் கேளாது தந்தம்மை வாடும் களித்தே குணசே கரன்தன்னைப் கூடிக் களித்தே குணசே கரன்தன்னைப் பாடிடச் சொன்னாயே பாட்டேலோர் எம்பாவாய் ! அன்னை இடம்வைத்த ஆலங் குடியானை மின்னும் பிறையானை விண்ணின் நதியானை முன்னைப் பழம்பொருளை முத்துக் கவித்தமிழில் கன்னற் கிணையாக்க் கள்ளின் சுவையாகத் தன்னிகர் இல்லாத தன்மைத்தாய்த் தந்தாரே மன்னும்…

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : நூலாசிரியர் வெ.அரங்கராசன் உரை

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் :  நூலாசிரியர் உரை      ஞானப் பெருநூலாம் திருக்குறள் மேடை முழக்கமாக இல்லாமல், வாழ்வியல் வழக்கமாதல் வேண்டும். அந்த ஞானப் பெருநூல் ஞாலம் முழுதும் பரவும் வகை செய்தல் வேண்டும். திருக்குறளின் திருக்குரல்  ஞாலம் முழுதும் ஓங்கி ஒலித்தல் வேண்டும். ஏனெனில், அது ஞாலப் பொதுமை நூல்; வாழ்வியல் பயன்பாட்டு நூல்.   இந்த அருநூல் குழந்தைகள், சிறுவர்கள், படித்தவர், படியாதவர், பாமரர் என்னும் எவ்வித வேறுபாடுகளோ மாறுபாடுகளோ இல்லாமல், ஞாலம் முழுதும் பரவுதல் வேண்டும், அதற்கு என்னென்ன…

திருக்குறள் அறுசொல் உரை: 114. நாணுத் துறவு உரைத்தல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் நாணுத் துறவு உரைத்தல்   காதலர் தம்தம் காதல் மிகுதியை வெட்கம்விட்டு மொழிதல்   (01-07 தலைவன் சொல்லியவை) 1131 காமம் உழந்து வருந்தினார்(கு), ஏமம்,      மடல்அல்ல(து) இல்லை வலி.       “காதல் வெல்ல, மடல்குதிரை         ஏறுதல்தான் மிகநல்ல வழி”. நோனா உடம்பும், உயிரும் மடல்ஏறும்,       நாணினை நீக்கி நிறுத்து.       “காதல்துயர் பொறாத…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14). மறவி யொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 44. மறவி யொழித்தல் மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை. மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும். மறவியூக் கத்தின் மறுதலை யாகும். மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும். மறவி பலவகை யிறவையு நல்கும். மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும். மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர். மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது…

பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார்.

  பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர்  வழங்கினார். தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள்  விழா  சென்னையில், தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதுபோழ்து, தமிழ்த்தென்றல் திருவிக விருதினைப் பேரா.மறைமலை இலக்குவனார்க்கு முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். [படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.]  

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் நூல் வெளியீடு – ஒளிப்படங்கள்

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ நூல் வெளியிட்டவர் : இலக்குவனார் திருவள்ளுவன் தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். படங்கள் : பொறி.தி.ஈழக்கதிர்

திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா : சில படங்கள்

தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017  சென்னை திருவள்ளுவர் திருநாள் – தமிழ்நாட்டரசின் விருதுகள் வழங்கு விழா :  சில படங்கள் முதல்வர் பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விருதுகளும் விருதாளர்களும் திருவள்ளுவர் விருது – புலவர் வீரமணி பெரியார் விருது – பண்ருட்டி இராமச்சந்திரன் அம்பேத்கர் விருது – மருத்துவர் துரைசாமி அண்ணா விருது – கவிஞர் கூரம் துரை காமராசர் விருது – நீலகண்டன் பாரதியார் விருது – பேராசிரியர் கணபதிராமன் பாரதிதாசன் விருது – கவிஞர் பாரதி  திரு.வி.க….

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 3 & 4

(திருத்தமிழ்ப்பாவை – பாசுரங்கள் 1 & 2 :தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 3&4    மூன்றாம் பாசுரம் தமிழின் உடலும் உயிரும் ஓங்கு பெருஞ்சக்தி உள்ளுறை அங்கமெனத் தாங்கும் இருநூற்று நான்பத்தின் ஏழெழுத்து; தூங்காப் புலன்மிக்கார் சூத்திரமாய்ச் செய்தவுயிர்; மூங்கில் குழலோசை மேவுகிற செம்மொழியாள்! நீங்கா இயற்கைபோல் நீணிலத்தில் வாழும்தாய்! ஈங்கவள் நல்லருளை ஏற்பதற்கு வான்மீது வீங்கொளியன் ஏகுமுன், நாம்விரைவோம்; ஆங்காலம் தூங்காது வம்மின் தொடியணிந்தே, எம்பாவாய்! நான்காம் பாசுரம் சங்கம் வளர்த்த மொழி வில்லார், புலியார், கயலார் முடிவேந்தர் வெல்வார் செருக்களத்து…

ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள், ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?  ஐ.நா.அவையில் அளிக்க கருத்துகளைத் தெரிவியுங்கள். வணக்கம்!  தமிழக, தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்கான வேண்டுகோள். பெரும்பாலான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மாவீரர் நாளுக்கான  அதிகளவான முதன்மையைக் கொடுத்துச் செயற்படுகிறீர்கள் அதே  முதன்மையையும் மக்கள்  ஆற்றலையும் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள்  அவை சார்ந்த செயற்பாடுகளுக்கும் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.   நாம் இந்தத் தருணத்திலே அதற்காக அதிகமாக  அதிகமாக உழைக்கவேண்டியுள்ளது.  தமிழர்களுடைய  சிக்கல்களை நாம்  அனைத்துநாட்டுமயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம், தற்போதைய இறுக்கமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு…

விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

விருதாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்!   புதிய அரசின் முதல் விழா, திருவள்ளுவர் திருநாளாகவும் அறிஞர்களையும் ஆன்றோர்களையும் விருதுகள் அளித்துப் போற்றும் விழாவாகவும் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியது.   இன்று (தை 02, 2048 / சனவரி 15, 2017) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் திருவள்ளுவர் திருநாள் – விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. செய்தித்துறையினர் கட்டுக்கோப்பான முறையில் நடத்தினர். காவல்துறையினரும் கெடுபிடித் தொந்தரவு இன்றி,  அமைதியான  சூழலை உருவாக்கியிருந்தனர். அரங்கத்தில் இடமின்றித் திருப்பி அனுப்பவேண்டிய  சூழல் வரும்வரை அனைவரையும் உள்ளே அனுப்பிக்கொண்டுதானிருந்தனர். அரங்கத்தில்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] –  தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி)   “போக்குவரத்து வசதி குறைந்திருந்த அந்நாட்களில் படிப்பறிவுற்றோர் குறைந்திருந்த மன்பதைச் சூழலில் கல்லூரிப் பணியாற்றியதே போதும் என நிறைவடைந்துவிடாமல் ஊர் ஊராகச் சென்று சங்க இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு தன்னிகரற்றது. சொற்பொழிவாற்றினார் எனக் கூறுவதைக் காட்டிலும் தமிழ்மொழி, தமிழின மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் என்றே கூறவேண்டும்.” (பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர் தந்தை – ஓர் ஆய்வு :  பக்கம்23-24)   …