மறக்க முடியுமா? பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்   சங்க இலக்கியங்களைப் பெருமளவு பதிப்பித்து வெளியிட்ட பெருமை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சேரும்.  இக்கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையா(பிள்ளை)அவர்கள் தேர்ந்த உரையாசிரியர்களைக் கொண்டு சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதவும், வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு வரலாறு – ஆய்வு நூல்களையும் எழுதவும் பெரும் காரணமாக இருந்தவர்.   இவரால் மிகச் சிறந்த உரையாசிரியர்களாகத் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பெரும் புலவர்களுள் ‘பெருமழை’ பெ.வே.சோமசுந்தரரும் ஒருவர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேலப்பெருமழை என்ற ஊர்தான்…

நெடுவாசல் உண்மைகள்! #கள ஆய்வுக் கட்டுரை – இரா.கலைச்செல்வன்

ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த எண்ணெய்-இயற்கை எரிவளிக் கூட்டுக் குழுமக் (ONGC) குழாய்! நெடுவாசல் உண்மைகள்! #கள ஆய்வுக் கட்டுரை    மாலை நேரம். நெடுவாசல் சிற்றூரை நெருங்கிக் கொண்டிருந்தேன். வடக்காடு சிற்றூரில் தன் வயலில் குடும்பத்தோடு கடலை பறித்துக் கொண்டிருந்தார் விசயா அக்கா.   “இங்கே என்ன சிக்கல் எனச் சரியாகவே விளங்கவில்லை தம்பி! இந்தப் பக்கத்தில் ஏற்கெனவே எரிநெய்(பெட்ரோல்) எடுப்பதாகச் சொல்லிப் பல ஆண்டுகளுக்கு முன்பே குழாயெல்லாம் அமைத்தார்கள். இப்பொழுது திடீரென ஏதோ புதிதாக நீர்மக் கரிமத் திட்டம் (Hydro Carbon project)…

இலக்கிய முற்றத்தின் அறிவோம் அறிவை!

மாசி 25, 2048 / வியாழன் / மார்ச்சு 09, 2017 மாலை 6.30 மயிலாப்பூர், சென்னை 600 004   இலக்கிய முற்றத்தின் அறிவோம் அறிவை! இறையன்பு இலக்கியங்களோடு இனிய சந்திப்பு   முனைவர் கோ.பெரியண்ணன் எழுத்தாளர் இரமணன் முனைவர் உலகநாயகி பழனி   உறவுச்சுரங்கம் பாரதிய வித்தியாபவன் கிருட்டிணா இனிப்பகம்

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி மாசி 23,  2048 / மார்ச்சு 07, 2017 மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ்நிதி விருது பெறுபவர்:  முனைவர்மு.முத்துவேலு சிறப்புரை:  சிலம்பொலி செல்லப்பன் இலக்கிய வீதி இனியவன் சென்னைக்கம்பன் கழகம் பாரதிய வித்யாபவன்

மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ – புகழேந்தி தங்கராசு

மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்!    வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் “விரைவில் தி.மு.க., ஆட்சி” என அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க.தாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரை, கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் ‘நீயா நானா’ வுக்கு இடையே ஒலித்த தனி இசை – தாலினின் குரல்தான்! 8 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற வளாகம் குருதிச் சேறாக்கப்பட்ட பிப்பிரவரி 19 நெருங்குகிற நிலையில் தாலின் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்கும்பொழுதே குலை நடுங்குகிறது.   செவ்வாய்க்கிழமை வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீதே அனைவரது கவனமும் பதிந்திருக்கும் நிலையில்,…

புகழேந்தியின் நூல் வெளியீடு,சென்னை

நானும் எனது நிறமும் –  ஓவியர் புகழேந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017 மாலை 6.00  

குட்டி அணில்குட்டி! – சந்தர் சுப்பிரமணியன்

  குட்டி அணில்குட்டி!    கிளைதாவிக் குதிக்கின்றாய்! குட்டி அணில் குட்டி! – நீ தலைகீழேன் நடக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   முதுகின்மேல் மூன்றுவரி! குட்டி அணில் குட்டி! – நீ அதைஏனோ சுமக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   அடைமழையில் நனைகின்றாய்! குட்டி அணில் குட்டி! – உன் குடைவாலைப் பிடிக்கலையோ? குட்டி அணில் குட்டி!   தொடவேண்டும் நானுன்னை! குட்டி அணில் குட்டி! – தொட விடுவாயோ சொல்லெனக்கு! குட்டி அணில் குட்டி!   – சந்தர் சுப்பிரமணியன்

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம்  சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2   இந்தோனேசியாவின் எதிர்க்கட்சியான  பார்தை கெரிண்டிரா  (PARTAI GERINDRA) அமைப்பில் அவைத்தலைவர்(chairman) பொறுப்பு வகிக்கும் தமிழர் திரு கோபாலன் அவர்களுடன் இலக்கியவேல் இதழாசிரியர் சந்தர் சுப்பிரமணியன்  நடத்தும் நேர்காணல். வணக்கம். இலக்கியவேல் வாசகர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முனைந்ததற்கு நன்றி. வணக்கம். ?   நீங்கள் இந்தோனிசியாவில் வாழ்கிறீர்கள். உங்கள் மூதாதையர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு சென்றது குறித்த தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? என்னுடைய தாத்தா இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர். நான் மூன்றாவது…

சுட்டுரைகளில் நெடுவாசல்! – இ.பு.ஞானப்பிரகாசன்

சுட்டுரைகளில் நெடுவாசல்!     புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் பகுதி முதற்கொண்டு இந்தியா முழுக்க 31 இடங்களில் மண்ணுக்கு அடியிலிருந்து நீரகக் கரிமம் (Hydro Carbon) எடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது நடுவணரசு.   தரையைக் குடைந்து ஆயிரக்கணக்கான அடிகளுக்கு ஆழ்துளையிட்டு, பல்வேறு வேதிக்கலவைகளைச் செலுத்தி அங்கிருக்கும் எண்ணெய் / இயற்கை எரிவளியை எடுப்பதன் மூலம் குறிப்பிட்ட பகுதி முழுவதையும் வாழத்தகாத இடமாக மாற்றிவிடக்கூடிய இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த 15 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் நெடுவாசல் பகுதி மக்கள்….

அனைத்துலகப் பெண்கள் நாள் 2017 பேரணிக்கு அழைப்பு

  அனைத்துலகப் பெண்கள் நாள் 2017 இல் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் பெண்களுக்கு அழைப்பு! மாசி 27, 2048 / மார்ச்சு 11, 2017  முற்பகல் 11.30  

‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம்

 ‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம் மாசி 29, 2048 / 13.03.2017க்குள் உங்கள் படைப்புகள் வந்து சேரட்டும்!   செந்தமிழர் சீர்மரபில் வந்தசொல் வணக்கம்! எந்தவொரு அறிமுகமும் தருமின்பச்சொல் வணக்கம்! அன்றுதொட்டு அகம்குளிர மலரும்சொல் வணக்கம்! மங்கலமாய் அமைந்தவொரு அன்புச்சொல் வணக்கம்! வேறுபாடுகள் சிறிதுமின்றி விளையும்சொல் வணக்கம்! வேற்றுமையிலும் ஒற்றுமையை ஊன்றும்சொல் வணக்கம்! தானென்ற அகந்தையை அகற்றும்சொல் வணக்கம்! தன்னைப்போல் பிறரையெண்ணும் சொல் வணக்கம்! வாழும் உயிர் அத்தனையும் வரவேற்கும் வணக்கம்! ஏழையென்றும் செல்வரென்றும் பார்க்காது வணக்கம்! படைத்தவனின் கருணையெண்ணி பணிவுடனே வணக்கம்!…

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண்

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண் உங்கள் படைப்புகள் வந்துசேர வேண்டிய நாள் மாசி 29, 2048 /  13.03.2017   புதிதாய்க் குதித்தவளா புதுமைப் பெண் அத்துனைப் பெண்ணின் ஆழ்மனதிலும் அங்கம் கொண்டதே புதுமை -அறிவாய் கல்வியில் ஓங்கவும் கவலைகள் நீங்கவும் கவிதையாய் வாழவும், காட்டாறாய் மாறவும் அவள் கைதேர்ந்த பதுமை- புரிவாய் எத்திசை நோக்கியும் எடுத்தடி வைப்பாள் முக்திக்கு மூர்க்கமாய் முனிவரைத் தேடாள் சக்தியாய் உலகாளும் பெண்ணினை அறிவாய் தெளிந்தே கற்பாள் தலை நிமிர்ந்தே நடப்பாள் தயை கொள்வாள்…