ஐ.நா.உரிமை மன்றம், கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை

மாசி 21, 2048 / மார்ச்சு 05,2017 / ஞாயிறு மாலை 3.00 ஐ.நா.உரிமை மன்றம், கண்டன ஆர்ப்பாட்டம் அன்பிற்குரியீர் ,  வணக்கம் இந்திய அரசு வரும்  ஐ.நா மனித  உரிமை மன்ற கூட்டத் தொடரில் இனக்கொலை இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின்  முன் நிறுத்த தீர்மானம் கொண்டு வரக் கோரி மாசி 21, 2048 / 5-3-2017 ஞாயிறு மாலை 3 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு  சார்பில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு  வருகை தருமாறு தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்…

சிலப்பதிகாரப் பெருவிழா 2017

(படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்.)   “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணீயாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் போற்றிய சிலப்பதிகாரத்தை உலகெல்லாம் பரப்பும் நோக்கத்துடன் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார். சிலப்பதிகாரத்தைப் பரப்புதற்கு மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்திடுதலும் சிலப்பதிகாரத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் “இளங்கோ விருது”வழங்குதலும் இந்த அறக்கட்டளையின் செயல்முறைகளுள் அடங்கும். 2014-இல் சென்னையிலும் 2015-இல் நாமக்கல்லிலும் சிலப்பதிகார மாநாடுகள் நடைபெற்றன. 2016 & 2017-ஆம் ஆண்டுக்கான இளங்கோ விருதுகளும் இளைய சிலம்பொலி விருதுகளும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி   பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி…

அருளாழி நயந்தோய் நீஇ !

                    அருளாழி நயந்தோய் நீஇ ! அறவாழி பயந்தோய் நீஇ ! மருளாழி துறந்தோய் நீஇ ! மறையாழி புரந்தோய் நீஇ ! மாதவரில் மாதவன் நீஇ ! வானவருள் வானவன் நீஇ ! போதனரிற் போதனன் நீஇ ! புண்ணியருட் புண்ணியன் நீஇ !   வீரசோழியம், யாப்பருங்கலம் 11 உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: 188

ஆதி நீஇ ! அமலன் நீஇ !

                           ஆதி நீஇ ! அமலன் நீஇ !   ஆதி நீஇ ! அமலன் நீஇ ! அயனும் நீஇ ! அரியும் நீஇ ! சோதி நீஇ ! நாதன் நீஇ ! துறைவன் நீஇ ! இறைவன் நீஇ ! அருளும் நீஇ ! பொருளும் நீஇ ! அறிவன் நீஇ ! அநகன் நீஇ ! தெருளும் நீஇ ! திருவும் நீஇ ! செறிவும் நீஇ ! செம்மல் நீஇ !   வீரசோழியம்…

கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன் சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும் துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும் மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்! மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்! வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை! அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும் அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19) கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக் கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா? புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப் பொய்யகற்றப்…

சுந்தரச் சிலேடைகள் 2. நிலவும் கங்கையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள்   சிலேடை 2.  நிலவும் கங்கையும் ஓடும் வளமாக்கும் ஓங்குமீசன் மேலிருக்கும் நாடும் குளிர்வாய் நலந்தரும் -தேடும் புலவரின் நாளமெல்லாம் பூத்துக் குலுங்கும் நிலவொடு கங்கை நிலைத்து. பொருள்: கங்கை மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு ஓடும். நிலத்தை வளமாக்கும். ஈசன் தலையில் இருக்கும். நாடு நீர்ச்செழிப்பத்தால் குளிர்ச்சி அடையும். எல்லா உயிர்க்கும் நலம் பயக்கும். புலவர்கள் பாடுமாறு அமையும். கங்கை பாயுமிடமெல்லாம் செடிகொடிகள் பூத்துக் குலுங்கும். நிலவு கிழக்கிருந்து மேற்காக ஓடும். ஈசன் தலைமேலிருக்கும். காதலர்களுக்கும் மலர்களுக்கும் வளந்தரும்….

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18   பதினேழாம் பாசுரம் தமிழர் வீரக் குலத்தவர் தாழாது வாழ்ந்த தமிழ்க்குடி மாண்மறத்தால் வீழாத கூர்வேல், வாள் வெங்களத்து ஊடார்த்து வேழம், பரி, பகைவர் வீழ்த்திப் பொருதுயர்ந்தார்; ஏழை எனினுமொரு கோழையல்லா ஆண்குலத்தார், வாழாக் குழவியினை வாள்கீறி மண்புதைத்தார் ; ஆழி கடந்துநிலம் ஆணை செல,வென்றார்; பாழாய் உறங்குதியே! பாரோர்க் கிவையுணர்த்தக் கீழ்வான் சிவக்குமுனம் கீர்த்திசொல் எம்பாவாய்!   பதினெட்டாம் பாசுரம் நெஞ்சம் அஞ்சாத…