பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!   புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (பங்குனி 27, 2048 / 09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன்.   முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக்…

தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.வின் இந்திப்பாசம் தவறு! தமிழுக்குத் தேவை முன்னுரிமையல்ல! முழு உரிமையே!   இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தி.மு.க.வின் பங்களிப்பையோ,  உணர்ச்சியூட்டி வழி நடத்திய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலான தலைவர்கள், தொண்டர்கள் பங்களிப்பையோ யாரும் குறைக்கவோ மறைக்கவோ முடியாது. எனினும் ஆட்சி இருக்கையில் அமர்ந்த பின்னர் எதிர்ப்புகளைச் சமாளிக்க விட்டுக்கொடுக்கும் போக்கில் கலைஞர்  கருணாநிதி மாறியது தமிழுக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்காய் அமைந்தது.  இந்தி  எதிர்ப்பு என்று சொன்னவுடன் எதிர்த்தரப்பார் என்ன சொல்கின்றார்கள்? “இந்தி தெரிந்ததால் மாறனை அமைச்சராக்கினேன்! இந்தி அறிந்ததால் தயாநிதி மாறனை…

புறநானூற்றில் நிதி மேலாண்மை – அ.அறிவுநம்பி

  (புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர்  அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள் நல்ல தமிழில்  பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது – ஆசிரியர் ) [நினைவுக்குறிப்பு:  ‘சித்தர் இலக்கியம்’ குறித்தப் பன்னாட்டுக்…

தி.க.சி.இயற்றமிழ் விருது 2017, திருநெல்வேலி

சித்திரை 02, 2048 சனி  ஏப்பிரல் 15, 2017 மாலை 5.00 அயோத்தியா அரங்கம்(சானகிராம் உறைவகம்), 30, மதுரை சாலை திருநெல்வேலி   நந்தா விளக்கு வழங்கும் தி.க.சி.இயற்றமிழ் விருது 2017 விருதாளர் கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் இரவி சுப்பிரமணியன்

அடிமைச்சங்கிலி தகர்க்கும் போராட்டம், சென்னை 600 002

பங்குனி 31, 2048 / வியாழன் / ஏப்பிரல் 13, 2017  காலை 10.30 அடிமைச்சங்கிலி தகர்க்கும் போராட்டம் தலைமை அஞ்சலகம், அண்ணாசாலை, சென்னை 600 002 தமிழர் எழுச்சி இயக்கம்

கலைகளால் செழிக்கும் செம்மொழி உரையரங்கம், சென்னை

இலக்கியவீதி – சிரீ கிருட்டிணா இனிப்பகம் இணைந்து நடத்தும் கலைகளால் செழிக்கும் செம்மொழி பங்குனி 29, 2048 ,  ஏப்பிரல் 11, 2017 மாலை 06.30 பாரதிய வித்தியாபவன் – மயிலாப்பூர், சென்னை 600 004 ‘செம்மொழி செழுமைக்கு நாடகக் கலையின் பங்கு’ தலைமை : நீதியரசர் பு. இரா. கோகுலகிருட்டிணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி  தி.க.ச.கலைவாணன் அன்னம் விருது பெறுபவர் : நாடகக் கலைஞர்  தி.க.ச.புகழேந்தி நிரலுரை : துரை இலட்சுமிபதி தகுதியுரை : செல்வி ப….

பாரதி தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விழா, கல்கத்தா

சித்திரை 02, 03 – 2048 / ஏப்பிரல் 15, 16 – 2017 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் நூலரங்கம் விருது வழங்கல் [அழைப்பிதழை அழுத்திப் பார்த்தால் பெரியதாகத்தெரியும்.] பாரதி தமிழ்ச்சங்கம், கல்கத்தா அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை

பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம், மதுரை

பங்குனி 29, 2048 / ஏப்பிரல் 11, 2047  & பங்குனி 30, 2048 / ஏப்பிரல் 12, 2047 பன்முக நோக்கில் குறுந்தொகை – கருத்தரங்கம்   உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் : வெ. அரங்கராசன

(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல்   தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல்.   (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,       யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?   கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),       உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…

சொல்லடா! – சுரதா

சொல்லடா! – சுரதா கோங்கம் மலர் பூத்த-பசுங் குன்றம் முழுநிலவை வாங்கிப் புசிக்குதுபார்-குளிர் வண்ணப் பனிச்சிரிப்பே ! தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள் சிறப்பு விளக்கமென்றே மாங்கனி வாய் திறந்து- நான் மகிழ்ந்திடச் சொல்லாயோ!   “இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும் இளைத்தவ ரல்லகாண்! அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள் ஆண்மை வரிப்புலிகள்: உச்சி இமயத்திலே-புகழ் ஒங்கும் மறக் குலத்தின் மச்சக் கொடிபறக்கும்’-என்று மாமல்லா நீ சொல்லடா!   ‘வானை அளந்திடுவோம்-புது வையம்  நிறுத்திடுவோம்! தேனைநிகர் தமிழ்க்குத்-துளி தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்- நாங்கள் ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச் சேனை…

தமிழ் வாழ்க! – வாணிதாசன்

தமிழ் வாழ்க! எடுப்பு தமிழைக் காப்போம் நாம் தாயடிமை போமே ! தாயடிமை போமே    (தமிழைக்)   மேல் எடுப்பு   பூமியினில் தனித்தமி ழாலே பூரித்திடும் நம்மிரு தோளே ! நாமினிமேல் அஞ்சுதல் இலமே ! நாம்நமையே ஆண்டிடு வோமே !   ஏமம் நெஞ்சில் துள்ள ஏற்றமடை வோமே ! ஏற்றமடை வோமே !   (தமிழைக் )   அமைதி   ஆரியத்தின் கலப்பத னாலே அடங்கியதே தமிழ்புவி மேலே ! ஒர்ந்துநாம் எல்லோரும் உழைப்போம் தமிழ்க்காக! . உழைப்போம் தமிழ்க்காக…

தமிழின்பம் தனி இன்பம் 3/3 – முடியரசன்

 (தமிழின்பம் தனி இன்பம் 2/3 – முடியரசன் தொடர்ச்சி)  தமிழின்பம் தனி இன்பம்  3/3     மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்பகை காரணமாகச் சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். பொருது வெற்றியுங் கொண்டான். அவ் வெற்றிச் செருக்கால் ஊரைப் பாழ் படுத்த ஆணையிடுகிறான். படைவீரர் பாழ்ச்செயலில் ஈடுபடு கின்றனர். பெரும் பெரும் மாளிகைகள் தரைமட்டம் ஆக்கப்படு கின்றன. அதனைக் கண்டு, மாறன் வெற்றி வெறிகொண்டு நகைக்கின்றான். ஆனால், ஓரிடத்துக்கு வந்ததும் அவனது வெறி விலகு கிறது. ஆணவச் சிரிப்பு அடங்குகிறது. “அதோ அந்த மண்டபத்தை…