இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும். படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும். கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள்…

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!

தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்!   நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றார் ஔவையார்(மூதுரை 10). வல்லார் ஒருவர் உளரேல் அவர் செயலால் எல்லார்க்கும் விளையும் நன்மை என நாம் சொல்லலாம்.   பணியாற்றும் இடங்களில் எல்லாம் பாங்குடன் செயல்படும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறைச் செயலர் பொறுப்பேற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை முதலானவற்றில் அனைத்துத் தரப்பாரும் போற்றும் வண்ணம் நற்செயல்கள் புரிந்து வருகின்றார்.   பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கல்விநலனில் கருத்து செலுத்தும்  வண்ணம்…

இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன?   சிவாசி (இராவு) கயக்குவாடு(Shivaji Rao Gaekwad) என்னும் இயற்பெயர் கொண்ட நடிகர் இரசினிகாந்து அல்லது இரசினிகாந்தன், 160 திரைப்படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த நடிகர்.  திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததுமே அரசியல் உலகில் காலடி எடுத்து வைக்க ஆசைப்படும் இன்றைய சூழலில் அவருக்கும் அரசியல் உலகில் அரங்கேற்றம் காண ஆசைவருவதில் வியப்பில்லை. ஆனால், ஒரு புறம் ஆசையும் மறுபுறம் அச்சமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் இருப்பதால் அரசியல் பூச்சாண்டி காட்டுவதுபோல் நடந்துகொள்கிறார். மக்கள்திலகம்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ) – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ)  தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ)   சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்:   “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 11

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 10 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 11 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ

  (பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால்…

திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி)       3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல்        காதலர்  தம்தம்  உள்ளத்துள்ள்         குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல்   (01-05 தலைவன் சொல்லியவை)        கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண்,       உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன.   கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப்,       பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.)  2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)   நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.   அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.    தமிழ் தொன்மை மொழியென்றோம் தமிழர் முன் இனம் என்றோம் அமிழ்தம் எம்மொழி என்றோம் அழகாகப் பாட்டிசைத்தோம்! புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம்?   என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :…

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 10

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 9 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 10 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 9

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 8 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 9 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 8

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 7 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 8 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]